நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
அப்பா : ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பாபு : வளையும் அப்பா !!
அப்பா : எப்படி?
பாபு : நம்ம தாத்தாவுக்கு ஐந்து வயதில் முதுகு வளையவில்லை. ஆனால் 50 வயதில் வளஞ்சிருச்சு அப்பா !!
நடத்துனர் : படியில நிக்காதப்பா...! பஸ்சுக்குள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே.. உள்ள வாப்பா...!
ரவி : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ. நான் கரையிலே நின்னுகிறேன்..
நீங்கள் சிறந்த பேச்சாளரா?
புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா.
குறும்புக்கார சிறுவர்கள் !!
பூஞ்சோலை என்னும் ஊரில் இரண்டு குறும்புக்கார சிறுவர்கள் இருந்தனர். அந்த ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரைக் கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். எனவே சிறுவர்களின் பெற்றோர்கள் அவரை அணுகி பையன்களைப் பற்றிக்கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார். பின்னர் கேட்டார், தம்பி உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே இருக்கிறார்? சொல் என்று துறவி கேட்டார். அதைக்கேட்ட அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே? எங்கே? என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.
அட அப்படியா ?
அந்திமந்தாரை அல்லது அஞ்சு மணிப்பூ என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூ. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப்பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.