நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

திங்கள், 28 நவம்பர், 2022

1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். 

எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

2) உற்சாகமாக இருங்கள் :-

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். 

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். 

உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். 

இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. 

உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

4.உங்களை நீங்களே நேசியுங்கள்.

 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. 

உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். 

உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.

 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

5. பயணப்படுங்கள் :-

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. 

இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். 

அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
 வாழ்க்கையில்     பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, 
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
 உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.

திங்கள், 21 நவம்பர், 2022

ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேறி இருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....

ஞாயிறு, 20 நவம்பர், 2022

ஒரு நீதிக் கதை!

ஒரு பையன் தன் அப்பாவின் நண்பர் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்றான்.

மிகவும் நேரமாகிவிட்டதால் அந்த அங்கிள் பையனிடம் "தம்பி நீ போய் பேபி ரூம்ல படுத்துக்கோ" என்று சொன்னார்.

ஆனா, கைக் குழந்தை இருக்கிற ரூம்ல படுத்தா 'நச்சுநச்சு'ன்னு அது அழுதுட்டு தூங்கவிடாதேன்னு நினைச்ச பையன்,

"வேண்டாம் அங்கிள். நான் ஹால்லயே படுத்துக்கிறேன்'னு சொல்லிட்டான்.

காலைல எழுந்திரிச்சி காபி குடிக்க டைனிங் டேபிளுக்கு வந்தான்.

அங்க ஒரு செம ஏ கிளாஸ் ஃபிகர்
க்யூட் ஸ்லிம், ஒண்ணு உட்கார்ந்து இருந்தது.

பையன் அவகிட்ட "யார் நீங்க?" அப்படின்னு கேட்டான்.

"ஐ'ம் பேபி... நீ யாரு?" அப்படின்னு அந்தப் பொண்ணு கேட்டா.

“நான் ஒரு முட்டாள்" னு நம்ம பையன் வருத்தமா பதில் சொன்னான்!

நீதி: எப்போதும் பெரியவங்க பேச்சைக் கேக்கணும்

வியாழன், 17 நவம்பர், 2022

பட்ட்ட்டாசா பத்து பாயிண்ட் மட்டும்.



என்னதான் உங்களுக்கு பத்து மொழி தெரிந்திருந்தாலும், பேசுவதற்கு டிரெண்டியான விஷயம் வேண்டும். "என்னம்மா கண்ணு, சௌக்கியமா?" இதையையே எல்லா மொழிகளிலும் 10 நிமிஷத்துக்கு கேட்டுகிட்டே இருக்க முடியுமா?
அவ்வப்போது சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் கொடுக்கவேண்டும். நிஜமா இல்லை வார்த்தையிலேயே. "போன தடவை நீங்க போட்டிருந்த பனாரசி துப்பட்டாவை விட இந்த கோட்டாபட்டி ( சரியா சொல்லனும், பட்டாபட்டி இல்லை) துப்பட்டா நல்லா இருக்கு" என்பது போல சின்ன பாராட்டு.
பேசிக்கொண்டு இருக்கும்போதே அடுத்து என்ன டாபிக் பேசப் போகிறீர்கள் என்று ஒரு 'ஹின்ட்' ஒளித்து வைக்க வேண்டும். ஒருபோதும் அடுத்த வார்த்தையை கூட யூகிக்க முடியாத அளவிற்கு சொற்பிரயோகம் இருக்கவேண்டும்.
எவ்வளவு தான் விஷயம் தெரிந்திருந்தாலும், கேட்டுக்கொண்டு இருப்பவர்க்கு அதைப் பற்றின ஆர்வமும், கொஞ்சமாவது உடன்பாடும் இருக்கணும். ஒரு நாத்திகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் பேசினால் எப்படி?
சொல்ல வருவதை "கண்டேன் சீதையை!" போல சுருக்கமா சொல்லிவிட வேண்டும். "தீபாவளி சீர் கொண்டு வந்தப்போ அன்னபூர்ணால மசால் ரோஸ்ட் சாப்பிட்டோமே, செம்ம சூப்பர்ல!" அர்த்தம் : பொங்கல் சீர் கொடுக்க வந்திருந்த தம்பியிடம், இப்பவும் அன்னபூர்ணாவுக்கே போறோம். ஆனால் அம்மாவிடம் "சீர் கொண்டு வந்தவனுக்கு தலைவாழை இலையில வடை, பாயசத்துடன் விருந்து இல்லம்மா..." என்று போட்டு கொடுப்பதையும் சமாளிக்க தெரியனும்.
எல்லைகளை கரைத்து பேச தெரியவேண்டும். குழந்தைகளிடம் "என் செல்லக்குட்டி ராஜாத்திக்கு/ராஜாவுக்கு" என்பதுபோல மதிப்புக்கூட்டி மகிழ்விக்க வேண்டும். மனைவியை 'அழகான ராட்சசியே'ன்னு சொல்லி ஒரு காஃபியோடே விவாதத்தை ஆரம்பிக்கனும்.
பேச ஆரம்பிக்கும் முன்பே "சுத்தி வளச்சி பேச விரும்பல..." என்று ஒரு வாக்கியத்தை சொல்லிவிட்டு, கோவையிலிருந்து கோவில்பட்டிக்கே அழைத்துச் சென்று முறுக்கு சுற்றினாலும், ஆஆ.... என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் நீங்கள் தான் சுற்றிவளைத்துப் பேச மாட்டீர்களே:))
அவங்களுடைய மனநிலைக்கு ஏற்றார் போல் பேசினால் நன்றாக இருக்கும். சரி, மன நிலையை முன்பே எப்படி கண்டுபிடிப்பது? இருக்கவே இருக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், கோரா இதிலெல்லாம் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்துவிட்டு, அந்த தலைப்பிலிருந்து பேச ஆரம்பித்து, இடையிலேயே நம்முடைய தலைப்பிற்கு மடைமாற்றி கொள்ளலாம்.
கேட்பவர் முகத்தில் லேசாக சலிப்பு தட்டுவது போல் உணர்ந்தால் உடனே டாப்பிக்கை மாற்றும் அளவிற்கு சமயோஜிதம் அல்லது "தமிழ்நாட்டுல, மருமகள் முதல்ல வீட்டுக்கு வரும்போது நெல்லு மரக்கால் கையில கொடுத்தே அழைப்போம். குஜராத்-ல எப்படி? என்பது போல கேள்வி கேட்டு உரையாடலை உயிர்ப்பிக்கனும். மலரும் நினைவுகளில் உற்சாகமாகி அப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், சுதாரித்து எங்கே "கட்" சொல்லனும்னு உங்களுக்கு தெரியணும்.
நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ, முதலில் அவர் கேட்க தயாராக இருக்கிறாரா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். ச்ச்சும்மா.... உட்கார்ந்து இருப்பது போல் தெரிந்தாலும் 'அப்ரைசல்(appraisal)-ல இந்த கொடுக்க(ன்/கி) என்ன உளரி கொட்டியிருக்கோ தெரியலையே' என்று கவலைப்பட்டு கொண்டு
இருந்தால் என்ன பேசினாலும் சுவாரஸ்யமாக இருக்காது.

இந்த பெரிய ரேடியோ பெட்டி போல தனியே பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இப்ப சொல்லுங்க…

இந்த டூத்பேஸ்டுல உப்பு இருக்கா? கரியாவது இருக்கா?? நிலக்கரியாவது???

புதன், 16 நவம்பர், 2022

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

*சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.*

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

*நான் பொறுமையாக காத்திருந்தேன்.*

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

*"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’* என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

*’’உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."*

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதே
நம் பலம்.

நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்.

வெள்ளி, 11 நவம்பர், 2022

தாடியில் இருக்கும் அறிவு



ஒரு சமயம் ஸ்பெயின் நாட்டு அரசர்,இளைஞன் ஒருவனை டென்மார்க் நாட்டு தூதுவராக அனுப்பினார்.
டென்மார்க் மன்னர் அந்த இளைஞனை பார்த்து "ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போலிருகிறது .
அதனால் தான் தாடி முளைக்காத சிறுவனை எனது நாட்டிற்க்கு தூதுவராக அனுப்பி இருக்கிறார்!"என்று கிண்டலாக கூறினார்.
அதை கேட்ட அந்த இளைஞன் டென்மார்க் மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணினான் .
உடனே அவன்,"அரசே அறிவு என்பது தாடியில் தான் இருக்கிறது என்ற தங்களின் கருத்து எமது அரசருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்கு பதிலாக ஒரு வெள்ளாட்டை இங்கு தூதுவராக அனுப்பிருப்பார் .
அதை கேட்டதும் டென்மார்க் மன்னரின் முகம் சுட்ட கத்திரிக்காய் போல் சுருங்கிவிட்டது.

வியாழன், 10 நவம்பர், 2022

குழந்தைகள் இல்லாதவர்கள் பாக்கியவான்கள் - அடுத்த பிறவிகள் கிடையாது .......

குழந்தைகள் இல்லாதவர்கள்  பாக்கியவான்கள் -  அடுத்த பிறவிகள் கிடையாது ....... நண்பர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை அவரது சகோதரருக்கு இரண்டு பெண்கள் மட்டுமே ( இவர்களது அப்பா அம்மாவுக்கு இவர்கள் இருவர் தான் பிள்ளைகள் பெண்கள் கூட கிடையாது) அவர் அடியேனிடம் வந்து ஸ்வாமி நான் ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ளலாம் என உள்ளேன் ஒரு நல்ல நாளாக பார்தது சொல்ல முடியுமா என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி எதற்க்காக இப்போ ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள போகிறீர் என்றேன்

ஸ்வாமி அடியேனுக்கு குழந்தைகள் இல்லை என்னையும் என் மனைவியையும் ஏதோ குறை உள்ளவர்கள் போல் உறவினர்களும் நண்பர்களும் பார்க்கிறார்கள் அத்தோடு எனக்கு கர்மா பண்ண பிதுர் காரியம் செய்ய ஒரு பையன் வேண்டும் எனவே ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளலாம் என உள்ளேன் என்றார்

அவரிடம் ஸ்வாமி நீர் ஏன் பகவானுக்கு எதிராக செயல்படுகிறீர் என்றேன்

ஸ்வாமி என்னை பார்தது பகவானுக்கு எதிராக செயல்படுகிறேன் என்கிறீரே நான் பகவானுக்கு நித்ய ஆராதனம் செய்கிறேன் சந்தியாவந்தணம் செய்கிறேன் நேரம் கிட்டும் போதெல்லாம் ஶ்ரீபாதம் தாங்கியாக செல்கிறேன் முடிந்த அளவு கோவில் கைங்கர்யங்கள் கைங்கர்யத்துக்கு தேவையான உதவிகள் செய்துவருகிறேனே தேவரீர் என்னை பார்த்து இப்படி பகரலாமா என்றார்

ஸ்வாமி இது எல்லாம் உம் கையில் உள்ளது செய்கிறீர் ஆனால் பகவான் வேண்டாம் என நிறுத்தியதை நீர் தொடங்கலாமா என்றேன்

ஸ்வாமி புரியவில்லை என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி தேவரீர் ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ள போவதாக சொல்லும் போது பிதுர் கர்மா மற்றும் உமக்கு கர்மகாரியங்கள் செய்ய வேண்டியுள்ளதற்காக ஒரு ஆண் குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள போவதாக சொன்னீரல்லவா அதை தான் பகவானுக்கு எதிரான செயல் என்றேன்

எப்படி ஸ்வாமி என்றார்

ஸ்வாமி ஒருவனுக்கு இனிமேல் கர்மபலனே இல்லை இந்த பிறவியுடன் அவன் செய்த செய்யப்போகும் கர்மபலன் எல்லாமே முடிந்துவிடும் எனவே இவனுக்கும் இவன் மூலம் இவன் சந்ததிக்கும் எந்த கர்மாவும் செய்ய தேவையில்லை என பகவான் முடிவு செய்து குழந்தை பாக்யம் தராதபோது

பகவானை மறந்து ஊர்கார்ர்கள் சொந்தங்கள் வார்த்தைகளுக்கு சொல்லுக்கு பயந்து ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொண்டு ( அந்த குழந்தையின் பூர்வகர்மா நிகழ்கர்மாகளை உமது தலையில் ஏற்றிக்கொண்டு) உமது கர்மாவை இதன் மூலம் மீண்டும் ஆரம்பித்து பகவானுக்கு எதிராக செயல்பட ஆயத்தமாகி விட்டீரே இது தேவையில்லாத ஒன்று உங்களது பிதுர்களுக்கும் உமக்கும் இனிமேல் கர்ம பலன் இல்லை எனவே பகவான் சந்ததி கொடுக்கவில்லை

இதை தான் பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறந்ததாமே என்பர்

உமது பாவங்கள் தொலைந்து பிள்ளைகள் பிறக்காத போது இப்போது யாரோ ஒருவனின் பாவத்தை நீரும் சுமந்து பகவானையும் உமக்காக சுமக்கவைப்பது சரியல்ல

உமது சகோதரனுக்கு ஒரே ஒரு கர்மபலன் பாக்கியுள்ளது அதனால் பெண் குழந்தையை கொடுத்துள்ளார் என்றேன்

புரியவில்லையே என்றார்

ஒருவருக்கு குழந்தைகளை இல்லை என்றால் அவர்களுக்கு கர்மபலன் எல்லாம் முடிந்து அவர்கள் பகவானின் ஆசாரியரின் திருவடிகளை அந்த பிறவியுடன் அடைந்துய்வர் மறுபிறவி இல்லை என்பதே அர்த்தம்

பெண்பிள்ளை மட்டும் பிறந்தால் அந்த பெண்பிள்ளையின் மகன் ( தன் தகப்பனாருக்கு பின்) செய்யும் தர்பணத்துடன் அந்த கர்மாவும் முடிந்து அவர்கள் பகவானின் திருவடிகளை ( அந்த குழந்தையின் காலத்துக்கு பின்) அல்லது ஆசாரியன் திருவடிகளை அடைந்து உய்வர்

எனவே ஸ்வீகாரம் எடுப்பதும் செயற்க்கை முறையில் குழந்தைகளை உறுவாக்கி கொள்வதும் தேவையில்லாத ஒன்று அது பகவானுக்கு எதிரான செய்கை

எனவே தான் முற்காலத்தில் மகப்பேறு இல்லாதவர்கள் தங்களது சொத்துக்களை ஆஸ்திகளை கோவில்களுக்கும் தர்மகாரியங்களுக்கும் அன்னசத்திரம் கட்டியும் டிரஸ்டுகள் என ஏற்படுத்தியும் பலதர்ம காரியங்களுக்கு எழுதிவைத்து சென்றனர்

உமக்கு பின் உம் பங்காளிகள் யாரேனும் அந்திம காரியம் செய்து அதன் மூலம் அவரும் அவரது சந்ததிகளும் கடைதேறுவர் எந்த நாதிகாரர்களும் பண்ண வில்லை என்றால் அந்த பாவத்தை போக்க அவர்கள் பகவானிடம் தண்டனை ஏற்பர் அவர்களும் அந்த அந்திம காரியத்துடன்( ஒரு வருட கைங்கர்யத்துடன்) உமக்கான மேற்கொண்டு கர்ம காரியங்களை செய்ய தேவையில்லை

அதை விடுத்து ஸ்வீகாரம் எடுப்பதும் என் சொத்தை உனக்கு தருகிறேன் உன் காலம் வரை எனக்கு வருடாவருடம் காரியம் செய் (செய்வாரா என்பது வேறு) என்றும் கூறி நாமே நமக்கான கர்மபலன்களை பகவானை மீறி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை

ஊர் உறவு ஆயிரம் சொல்லலாம் உடம்பில் அந்த வம்ச உற்பத்தி அணுவை குறைத்து கர்மபலனை போக்கிய பகவானுக்கு நன்றி செலுத்தி

உமது செல்வங்களை பகவானுக்கும் ஏழைகளுக்கும் தேவைப்படும் உறவினர்களின் குழந்தைகளின் படிப்புகளுக்கும் ஆடைகளுக்கும் விவாகத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தும் அது போக மீதமிருந்தால் அபிமான கோவில் அல்லது பெற்றோர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி பல நல்ல காரியம் செய்ய பயன்படும் படி ஏற்பாடு செய்து வையும் என்றேன்

அவர் தன்யோஸ்மி எனக்கு ஒரு தெளிவு கிட்டியது நேராக கோவிலுக்கு சென்று பகவானின் காலடியில் விழுந்து நான் செய்ய இருந்த தவறான செய்கைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியவர்

ஒரு சந்தேகம் என்றார்

என்ன என்றேன்

ஸ்வாமி அப்படியானால் தசரத மகாராஜா ஏன் புத்ரகாமயேஷ்டி யாகம் செய்து பிள்ளை வேண்டும் என கேட்டார்? என்றார்

ஸ்வாமி தசரதனுக்கு மகனாக பிறந்து அசுரர்களை அழிப்பேன் என பகவான் சங்கல்பம் செய்து பிறந்தார் அதனால் அவர் குலகுரு யோசனைபடி யாகம் செய்து பகவான் சங்கல்பத்தை நிறைவு செய்தார் யாரையும் ஸ்வீகாரம் எடுக்கவில்லை மருந்து மாத்திரை செயற்கை கருத்தரிப்பு என செய்துகொள்ளவில்லை பகவத் பிரசாதமாக வேள்வியில் கிடைத்ததை மனைவியரை உண்ண செய்து நாட்டுக்காக மகனை பெற்றார் அவருக்கும் பகவானே கர்மாவை செய்து உய்வித்தான்

அந்த யுகம் வேறு இந்த யுகம் வேறு

பகவானே சங்கல்பம் செய்து புத்திரன் கொடுத்தால் ஏற்க்கலாம் நாமாக வேறு மார்க்கத்தில் சென்று சந்ததிகளை உருவாக்குவது தவறு என்றேன்
மீண்டும் நன்றி கூறி ஜெய் ஶ்ரீராம் என்றவாறே சென்றார்......

வரட்டுகௌரவமும் வாழாவெட்டி வாழ்க்கையும்..!!!


வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் ...

இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ...
நம்ப மாட்டீர்கள் ...வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ...

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை ...

அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு, வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி ..!

சோஃபாவும் அப்படித்தான்!

பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !

4 GB RAM, quardcore processor, 
128 GB in built memory என்று அனைத்துமே பார்த்து,
 அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன் ...

ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ...ஒரு தொலைக்காட்சி பெட்டி ..
ஆனால் ...
இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை ..
வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..!
காலமாற்றம் ....
இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகி விட்டது ...எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை ... 
பயன்படுத்துவதும் இல்லை ...
வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன் ...
அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு ...

அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது ...

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ...

இது ஒரு  Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ...

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது ...

இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன ...உணர்த்தவும் செய்தது ..

இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த 
நெருக்கமான வாழ்வைத்தான் ...!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ....
நோ பீஸ் ஆப் மைண்ட் ...

இதை படிச்சவங்களுக்கு புரியுதோ, புரியலையோ ..
ஆனா ..அனுபவிச்சங்க இதை கண்டிப்பா உணருவாங்க ...!!

அனைத்தும் இருந்தும் வாழத்தெரியாமல் வாழ்கிறோம், என்று தெரியாமலே வாழ்வது நாமாகத்தான் இருக்கமுடியும்..

உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச்செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன் 
நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,
இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.

சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறைசொல்லியிருக்கிறீர்கள்”
எனறான் அந்த சிறுவன்.

ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக 

“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது”என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.
பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.

முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.

ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், 
மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.

அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.

இப்போது கொஞ்சம் பயப்பட தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப்போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் இருக்கிறது.

ஜன்னலோர இருக்கையில் தலையை தாழ்த்தி, மூலையில் பதுங்கிக்கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.

அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது  தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.

நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,

*“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*

கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.

பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.

பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.

இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.

மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.

நோயை விட,
அது குறித்த அச்சம் தான் பலரை கொல்கிறது.

எல்லோரும் இறைவனை நம்புகிறோம்.
நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.

 இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​
நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை
வைத்திருக்கிறான்.
அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன்,  என்று எழுதி இருக்கிறது.*

கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று நம் இறைவன் நம்பிக்கை தருகிறான்.

எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும்
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

உலகம் பிழைக்கப்போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம். 

(படித்ததில் பிடித்தது )

உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?*

🌹*50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?*
*என்று கேட்கிறார்  ஒருவர்......*

*அவர் அனுப்பிய பதில் இதோ :*

1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை,  என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.

2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.

3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.

4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம். 

5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை  அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன். எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல.  எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.

7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது,  பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்

8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.

9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.

10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.

11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.

12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.

13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.

14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இப்பதிவில் சொன்ன பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதைச் செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன ? 

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்.✍🏼🌹
*ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு, பணப் பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு, டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.*
வண்டியின் அதிர்வில், அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, *100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு, கீழே விழுந்து விடுகிறது.*
அது தெரியாமல் அந்த நபர், வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விடுகின்றார். *(அந்த நபர், இக்கதையில், இனி வரமாட்டார்)*
கீழே விழுந்த வேகத்தில்,100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து, *ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும், விடுபட்டு காற்றில் பறந்து, சிறிது தூரத்தில் கிடக்கிறது.*
அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டு கிடந்த வழியில், ஒருவன் வருகிறான்.
அந்த நோட்டைக் கண்டு, *'இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள் போல'* என நினைத்து, மிகவும் சந்தோஷ மடைகிறான்.
அந்த நோட்டை எடுத்துக்கொண்டு, நல்ல ஒரு ஹோட்டலுக்குப் போனான்.
*ஒரு தோசை (40ரூபாய்) ,2 இட்லி (இருபது ரூபாய்), ஒரு காப்பி (இருபது ரூபாய்) சாப்பிட்டான். வயிறும், மனதும் நிறைந்தது போல் இருந்தது.*
*பில் வந்தது. பார்த்தான், GST வரியோடு 90 ரூபாய் ஆகியிருந்தது.*
சர்வரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தான்.
சர்வர் பில்லைக் கட்டிவிட்டு, மீதி 10 ரூபாயைத் தட்டில் வைத்துத் தந்தார்.
டிப்சா வச்சுக்கோப்பா என்றான்.
*சந்தோஷமாக வீடு திரும்பினான்.*
மீதி 99 நூறு ரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு, அது விழுந்த இடத்திலேயே கிடந்தது.
*அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். பரபரவென்று எண்ணினான்.*
99 நோட்டுகள். மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 99 நோட்டுகள்தான்.*
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்க மாட்டார்களே....?
*அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும் தான் கிடக்க வேண்டு மென்று, தேட ஆரம்பித்தான்...!*
அந்த ஒற்றை நூறு ரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
*இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்!*
*ஒற்றை நூறு ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, சந்தோஷமாகச் சென்றான்.*
*9900 ரூபாய் கிடைத்தவன், அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு நூறு ரூபாய்க்காக அல்லாடிக் கொண்டு இருக்கிறான்.*
*கருத்து:--* நாம் இப்படித்தான்!
*கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல், கிடைக்காதவைகளைதேடி அலைந்து, உடலும் - மனமும் சோர்ந்து, துன்பப்படுகிறோம் !*

தற்போதைய பெண்கள் ஏன் தனிக்குடித்தனம் போகவே நிர்பந்திக்கிறார்கள்?

• 

• பிரைவஸி தான் முதல் காரணம். கூட்டுக்குடும்பத்தில் பிரைவஸியே இருக்காது. கணவனிடம் பேசவோ கொஞ்சவோ முடியாது.

• எது செய்யறதுனாலும் பர்மிஷன் வாங்கிக்கிட்டேயிருக்க வேண்டும் சின்ன குழந்தைகள் மாதிரி.

• நாம எடுக்குற முடிவை தைரியமா செய்யலாம். அது தப்பு, இது தப்பு அப்படி பண்ணுன்னு யாரோட கட்டளைக்கும் அடி பணிய வேண்டாம்.

• சமையல்காரிக்கு சப்ஸ்ட்யூட்டாக இருக்க வேண்டாம். வீட்டுக்கு வந்த மருமகள் தான் எல்லா வேலையும் பண்ணணும்னு யாரு கண்டுப்பிடிச்சான்னு தெரியலை. வேலைக்கு ஆள் வைக்குற வசதியிருந்தாலும் வைக்க மாட்டாங்க போலருக்கு.

• பணம் வரவு செலவுகளை பார்த்து கொள்வதால் எல்லாம் தெரிஞ்சிக்குற வாய்ப்பு இருக்கு. குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை கற்று கொள்ளலாம்.

• பெண்ணுக்கும் வேறு ஒரு வீட்டுக்கு போய் இருக்கோம்ங்குற சங்கோஜம் வராமல் இருக்கும்.

• உங்க குடும்பம், எங்க குடும்பம்னு இல்லாமல் நாம ரெண்டு பேரும் இப்போ ஒரே குடும்பங்குற பொறுப்பு வரும்.

• மாமியார் மருமகள் சண்டை வந்துடுமோன்னு பயப்படுறாங்க. தள்ளி இருப்பதே நல்லதுன்னு நினைக்குறாங்க.

• பிள்ளைகள் வளர்ந்துட்டாங்கங்குறதை புரிஞ்சிக்காத நிறைய பெற்றோர்கள் இன்னும் இருக்காங்க. எல்லா விஷயத்திலும் வந்து மூக்கை நுழைப்பது.

• ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கலைன்னு பிரஷர் குடுப்பது. இப்படி தான் உங்க வீட்டுல சொல்லி கொடுத்தாங்களான்னு குத்தி காட்ட வேண்டியது. அதையெல்லாம் தடுக்க தான் தனி குடுத்தனம் போறாங்க

ஞாயிறு, 6 நவம்பர், 2022

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். 

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த  “வரிசையில்”  நின்றுகொண்டிருக்கிறோம். 

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. 

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

 எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள். 

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். 

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.  

சமாதானம் செய்யுங்கள். 

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் . 

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள்....



• பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்

• உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்

• கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே

 • நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.

• நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

• 99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்

• 12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்

• நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு

• நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல் போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம்

• உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்

• ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.

• நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும்

• ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்

• பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.

• கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்

• ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும்

• போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்

• நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்

• இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள்

• ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்

• நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்

• ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார். ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்

• ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்

• 28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.

• உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்

• அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே

• நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்

• நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்

• ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை

• நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான். நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது

• ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது

• சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்

• நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்

• உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்

• மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்

• ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது

• மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்

• ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள். அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்

• ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம்

• 40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்

• நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது

• "நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்

• புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்

• நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்

• 6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்

• ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்

• ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்

• அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்

• நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்

• 10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்

• ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்
வரவிற்குள்ளாக செலவு செய்து வாழ்வது;
செலவினை கட்டுக்குள்ளாக வைத்திருந்தால் மட்டுமே ஒருவரால் பணக்காரர் ஆக முடியும். எந்த ஒரு பணக்காரரும் சிக்கனம் இன்றி உருவாகவில்லை. சிக்கனம் இல்லாமல், வரவுக்குள்ளாக செலவு செய்து, எளிமையாக வாழ்ந்து, பணம் சேமிக்காமல் ஒருவர் பணக்காரர் ஆக இயலாது.

வாரன் பபெட் 1958ம் ஆண்டு வாங்கிய வீட்டிலேயே இன்னும் வசிக்கிறார். எவ்வளவோ பணக்காரர் ஆன பின்பும் கூட, அவர் வீடு மாறவில்லை.

நன்றி; 14 Frugal Habits of the Super Rich and Famous

2.பொறுமையாக இருப்பது

பணக்காரர் ஆவதற்கு பொறுமை வேண்டும். எந்த ஒரு பணக்காரரும் முதலீட்டினை செய்தபின்பு, அதனை ஒரு விதையினை தண்ணீர் உற்றி, உரமிட்டு காப்பது போல், காப்பாற்றி, போஷித்து, பொறுமையாக முதலீட்டினை வளர விடுகின்றனர்.

வாரன் பபெட் காலம் செல்ல செல்ல, அதிக பணக்காரர் ஆவதை பின்வரும் வரைப்படம் விளக்குகிறது. 1958ம் ஆண்டு முதலீடுகள் பெரிய பலன் தருவதற்கு, சில தசாப்தங்களை அவர் பொறுமையாக கடக்க வேண்டியிருந்தது.

நன்றி; Fast Wealth is Created Exponentially

3.கடன் வாங்காமல் இருப்பது -

கடன் என்பது மோசமான எஜமானன். கடன்களில் மாட்டிக் கொண்ட ஒருவருக்கு, கடனை விட்டு வெளியே வருவதே பெரும் பாடாக இருக்கும் போது, பணக்காரர் ஆவதென்பது இன்னும் கடினமாகிறது.

இது குழிக்குள் இருந்துகொண்டு, எவரெஸ்ட் மலை ஏற முயற்சிப்பது போல. முதலில் குழிக்குள் இருந்து வெளியே வந்தபின்னரே, மலை ஏற முடியும்.

பணக்காரர்கள் தனி மனித கடன்களை, கடன் அட்டைகளைத் தவிர்க்கின்றனர். கடனை எந்த ரூபத்திலும் தவிர்க்கிறார்கள். முதலீட்டினை பல்மடங்காக பெருக்கும் வாய்ப்புள்ள தொழிலுக்காக கடன் வாங்கலாம். அதையும் தவிர்க்க பார்ப்பார்கள். வாங்கிவிட்டால் கூட, அவர்கள் அதனை சீக்கிரமாக அடைக்கப் பார்ப்பார்கள்.

உலகத்திலேயே அதிக தொன்மையான மகிழ்வுந்துகளை சேகரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அமெரிக்க மில்லியனர், லீ மே, ஒரே ஒரு கார் மட்டுமே கடன் வாங்கி, வாங்கினார். அதைக் கூட, உடனே அடைத்துவிட்டார்.

நன்றி; https://explorewashingtonstate.com/lemay-car-museum-tacoma/

4.படிப்பறிவு, உலக அறிவினை வளர்த்துக் கொள்வது -

உலகின் நடப்புகளை தினம் தினம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமே, வாய்ப்புகளை சரியான பயன்படுத்திக் கொள்ள முடியும். உலக அறிவை வளர்த்துக் கொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

எல்லா கோடீஸ்வரர்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்கின்றனர். மேலும் அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

வாரன் பபெட் தினமும் அன்றைய செய்திகளை காலையிலேயே படித்து விடுகிறார். மேலும், 80% நேரத்தினை புத்தகம் படிக்க செலவிடுகிறார்.

Top 10 Most Common Majors for Millionaires

Warren Buffett’s reading routine could make you smarter, science suggests

5.பணத்தைப் பெருக்கும் வாய்ப்புகளை தைரியமாக பயன்படுத்திக் கொள்வது. மற்றவர்கள் செய்ய தயங்கும் தொழில்களை தைரியமாக தொடங்கி நடத்துவது.

பணத்தை பெருக்கும் வாய்ப்புகளை, மற்றவர்களைப் போல் அஞ்சாமல், தைரியமாக பயன்படுத்திக் கொள்வது.

பங்கு சந்தையின் 1988 வீழ்ச்சிக்கு பின்பு, எல்லாரும் அஞ்சியபோது, வாரன் பபெட் அஞ்சாமல் கொக்க கோலாவில், மிகவும் அதிகமாக முதலீடு செய்தார். அது அவருக்கு 1750% மேலாக லாபத்தினைக் கொடுத்துள்ளது.

நன்றி; Here's How Much Warren Buffett Has Made on Coca-Cola | The Motley Fool

6.கூட்டு வட்டியின் மகத்துவத்தினை பயன்படுத்திக் கொள்வது-

கூட்டுவட்டியின் பயனை அடைய சீக்கிரமாக முதலீடு செய்து, நீண்ட காலம் பணத்தினை வளர விடுவது. நடுவில் பணத்தினை எடுப்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.

பின்வரும் வரைபடத்தில், 18வது வயதில் தொடங்கி, தொடர்ந்து மாதம் $5000 முதலீடு செய்யும் கிரிஸ்டோபர், 28வது வயதில் நிறுத்திவிட்ட ஆலிஸை விடவும், 28வது வயதில் தொடங்கிய பார்னியை விடவும், அதிகமாக பணத்தைப் பெருக்கியுள்ளார்.

எனவே, கூட்டு வட்டியின் பயனைப் பெற, சீக்கிரமாக முதலீடு தொடங்கி, தொடர்ந்து செய்து வர வேண்டும்.

நன்றி - The Power of Compound Interest and Why It Pays to Start Saving Now - Windgate Wealth Management

7.முதலீட்டுக்கு பிறகே செலவுகள் என இருப்பது -

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சேமிக்கிறோம். எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம்.

தங்களது முதலீடுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள பணத்தில் வாழ்க்கையை நடத்துவது. மாதம் 75% முதலீடு செய்பவர்கள் கூட உள்ளார்கள்.

வாயிற்காப்போனாகவும், பெட்ரோல் கிடங்கில் சாதாரண வேலை பார்த்த ரொனால்ட் ரீட், $8 மில்லியன் முதலீட்டால் பெருக்கியுள்ளார். அவர் வாரம் சம்பாதித்த $50 பணத்தில், $40 டாலர் சேமித்து முதலீடு செய்துள்ளார்.

A janitor secretly amassed an $8 million fortune and left most of it to his library and hospital

8.செய்யும் தொழிலை கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியாக அனுபவித்து செய்வது.

செல்வந்தர்கள் தாங்கள் செய்யும் தொழிலை கடனுக்கு என்று செய்யாமல் அதனை மிகவும் விரும்பி செய்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அதில் மேன் மேலும் விரிவு படுத்துகிறார்கள்.அதன் மூலம் தொழிலில் நல்லதொரு லாபத்தை பெறுகிறார்கள். பணத்திற்காக தொழில் செய்யாமல் அந்த தொழிலில் இருக்கும் இன்பத்திற்காக, தொழில் செய்வதால் பணம் பன்மடங்கு பெருகுகிறது. பலர் செய்வதற்கு தயங்கும் தொழில்களை கூட விரும்பி ஆர்வமாக செய்கிறார்கள்.

செல்வந்தர்கள் அடிக்கடிச் செய்யும் தொழில்கள் எவை? கேள்விக்கு வெங்கடராமன் ராமசுப்ரமணியன் (Venkataraman Ramasubramanian)-இன் பதில்

9.நல்ல ஒரு நட்பு வட்டத்தினை வைத்திருப்பது —

செல்வந்தர்கள் தங்களுக்குள்ளே நல்லதொரு நட்பு வட்டத்தினை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். தங்களுடைய பணம் பெருக்கும் உத்திகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் நேரத்தை வீணாக்கும் வீண் செலவு செய்யும் கூட்டத்தோடு தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் விவாகரத்து செய்வதில்லை. ஒரே ஒரு மனைவியுடன் குடும்பத்தை நடத்துகிறார்கள். அந்த மனைவியும் அவர்களுக்கு நல்லதொரு ஆலோசகராக இருக்கிறார்.

நன்றி—

Warren Buffett Inspired Bill Gates to Use This Effective Communication Tactic

10.ஈகைக்கு தாராளமாக இருப்பது—

எல்லா செல்வந்தர்களும் ஈகை காரியங்களுக்கு தாராளமாக பண உதவி செய்கிறார்கள். சமுதாயத்திற்கு தாங்கள் பட்ட கடனை மறுபடி செலுத்துகிறார்கள். ஈகை செய்வதன் மூலம் அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்து அத்தகைய மன மகிழ்ச்சியானது அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து செய்துவரும் ஈகையானது மேலும் சிக்கனமாக இருப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் அவர்களை தூண்டுகிறது.

நன்றி—

These 14 billionaires just promised to give away more than half of their money like Bill Gates and Warren Buffett

சிரமம் பாராது படிக்கவும்

👉சிரமம் பாராது படிக்கவும்👈
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🌹"இதுவும் கடந்து போகும்"🌹
என்ற வார்த்தை தான் எதையும் கடந்து போகச் செய்யும் நம்பிக்கை தருகிறது.

இந்த நிலை நிரந்தரமில்லை என்ற தெளிவும்,

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும்.

வாழ்க்கையில் இன்பமும், சந்தோஷமும், வெற்றியும், புகழும் ஏன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையும் கடந்து போய்விடும்.

அப்படி இருக்கையில் துன்பம் மட்டும் எப்படி நிலைத்திருக்கும்.

*"இதுவும் கடந்து போகும்"*.

ஆனால்,
நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.

துன்பநிலை வந்ததும் விரக்தியின் உச்சிக்குச் சென்று விபரீத முடிவுகளுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரே ஒரு நிமிடம் யோசித்தால் போதும்.

இதற்கான தீர்வுகள் நமக்குள்ளேயே இருக்கிறது.

கல்லுக்குள்ளேயே இருக்கிற தேரைக்கும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையே வாழ்க்கை.

"ஒரே நதியில் மீண்டும் குளிக்க முடியாது".

அலைந்து கொண்டிருக்கும் நீர், அடுத்த வினாடியே வேறொரு நீராக நதியில் பிரவாகிக்கிறது.

அதுபோலவே தான் அடுத்தடுத்த மாற்றங்கள் நம்முள் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அழுகை, இன்பம், சோகம், ஆச்சரியம் என விரவி இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக செல்ல முடியும்.

பறவைகளை பாருங்கள் : திருமண பந்தங்கள் கூட எதிரெதிர் குணம் கொண்ட மனிதர்களின் உணர்வுகளால் ஆனது தான்.

ஏற்கனவே கேட்ட ஒரு நகைச்சுவைக்கு ஒரு தடவைக்கு மேல் எனக்கு சிரிப்பு வரவில்லை என்று சொல்கிறோம்.

ஆனால் ஏற்கனவே நடந்த சோக நிகழ்வுகளை மறக்காமல் புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.

எத்தனையோ வருட பிரச்னைகளை வைத்து கொண்டு கோபத்தை சுமந்து கொண்டே அலைகிறோம்.

சேகரித்து வைக்கும் உணர்வுகள் நல்லவைகளாக இருக்கட்டுமே.

சுய இரக்கம், வன்மம், வெறுப்பு, அகங்காரம், ஆணவம் போன்ற உணர்வுகளை சுமக்க வேண்டாம்.

பறவையைப் பாருங்கள். அது விதைப்பதில்லை. அறுப்பதுமில்லை.

அவை நிகழ்கால வாழ்வினை அழகாக வாழ்கின்ற உயிரினங்கள்.

மனிதர்கள் மட்டும் ஏதோ ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே வாழ்கிறார்கள்.

பகவத் கீதை இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையதாகிறதுஎன்கிறது.

இன்றைய நமது இன்ப துன்பங்களும் அவ்வாறே.

இதையே நம் கிராமத்துப் பாட்டி, தொல்லையைத் துாக்கி தோளில் சுமக்காதே என்று கூறுவார்.

வெற்றி வந்தால் எதற்காக இந்த வெற்றி மற்றவர்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் கிடைக்கிறது என்று யோசித்தது இல்லை.

ஆனால்
துன்பமோ, தோல்வியோ வரும் போது எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம், வேறு யாருக்கும் வராமல் என்று யோசிக்கிறது மனது.

தோல்வி வரும் போது தைரியமாக சொல்லுங்கள், இந்த தோல்வியைக் கடந்து போவேன் என்று!
நான் முயற்சிக்காததால் வந்த தோல்வி.

இந்த தோல்விக்கு காரணம் நான் மட்டுமே என்று தன்னம்பிக்கையுடன் சொல்லுங்கள்.

சிரித்திரு மனமே : இன்பத்திலும், துன்பத்திலும் சிரித்திரு மனமே என்ற பழைய பாடல் வரி உண்டு.

இன்பத்திலே பிறந்து வளர்ந்து மடிந்தவர் யாரும்இல்லை, துன்பத்திலும் அப்படித்தான்.

தோல்வியின் இறுதியில் தான் வெற்றி ஆரம்பமாகும் வாய்ப்புகளும் சில நேரங்களில் கடந்து போய்விடும்.

உதாரணத்திற்கு இளைஞன் ஒருவன் அந்நாட்டு மன்னரின் மகளை மணம் முடிக்க வேண்டும் என எண்ணி யிருந்தான்.

மன்னர் அவனுக்கு ஒரு போட்டி வைத்தார்.

அதாவது அவன் மாட்டின் வாலைப் பிடித்து அதை அடக்க வேண்டும்.

அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வேண்டும்.

முதலில் ஒரு மாடு அசுர வேகத்துடன் பாய்ந்து வந்தது, அதனால் அவன் அதை அடக்காமல் அடுத்த மாட்டை அடக்கி விடலாம் என்று எண்ணி அதை விட்டுவிட்டான்.

அடுத்த மாடு அவிழ்த்து விடப்பட்டது. அது பார்ப்பதற்கு பூதம் போல் தெரிகிறது என்று கூறி அதையும் விட்டுவிட்டான்.

மூன்றாவதாக ஒரு மாடு சாதுவாக வந்தது, அதை அடக்கி விடலாம் என்று எண்ணி அருகில் சென்று பார்த்த போது ஏமாந்து போனான்.

அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

வாழ்க்கை கூட இப்படியானதே. கிடைக்கும் போதே வாய்ப்பை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதுவும் கடந்து போய்விடும்.

சூழலை உருவாக்கு அல்லது சூழலை உனதாக்கு.

ஆனால் பல விஷயங்கள் ஆமை போல மெதுவாகத் தான் நகர்கின்றன; ஆனால் பெரிய பாடத்தை உணர்த்திவிட்டு சென்று விடுகின்றன.

உள்ளத்தில் தெளிவுதினமும் எத்தனையோ பேர் நம்மை கடந்து செல்கிறார்கள்.

அவர்களில் யாரோ ஒருவர் வண்டியில் சைடு ஸ்டாண்டு எடுக்காவிட்டால் நாம் அவர்களிடம் சென்று எச்சரிக்கிறோம்.

அவரும் நன்றி சொல்லிவிட்டு செல்கிறார்.

ஆனால்,
அதே மனிதர் ரோட்டில் குப்பையைப் போட்டுக் கொண்டும், எச்சில் துப்பிக் கொண்டும் போனால், நாம் ஏன் அவர்களிடம் இது தவறு என சொல்லத் தயங்குகிறோம்.

இந்த மாதிரியான எண்ணங்கள் கூட நம்மிடம் இருந்து கடந்து போக வேண்டும். உள்ளத்தில் தெளிவு வேண்டும்...

உண்மை சொல்ல! எண்ணத்தில் ஏற்றம் வேண்டும்...
எதையும் ஏற்றுக் கொள்ள!உன்னிடம் வெற்றி பெறுவதற்கு தகுதி இருப்பது பார்த்தாலே தெரிகிறது என்று சிலரைச்சொல்கிறார்கள்.

நீயெல்லாம் இந்த விஷயத்துக்கு சரியானவன் கிடையாது என்று சிலரை சொல்கிறார்கள்.

அது எப்படி பார்த்த உடனே முடிவு செய்கிறார்கள்.

இதேபோல் மருத்துவர் நோயாளியைப் பார்த்த உடனே இவருக்கு இந்த நோயாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவராகவே ஒரு சிகிச்சை அளித்தால் நோயாளியின் நிலை என்ன ஆகும்.

இந்த மாதிரியான எண்ணங்களும் நம்மிடம் இருந்து கடந்து போக வேண்டும்.

தன்னம்பிக்கை வேண்டும்ஜெயிப்பதற்கு தகுதியை விட தன்னம்பிக்கை தான் முக்கியம்.

 வாழ்க்கை கூட இப்படித் தான் நம்மை விட்டு சட்டென்று கடந்து போய் விடுகிறது.

எதைச் செய்வதாய் இருந்தாலும் உடனே செய்து விடுங்கள்.

ஆனால் அது நல்லதாகமட்டும் இருக்கட்டும்.

இதைத் தான் நன்றே செய்; அதுவும் இன்றே செய் என்று நீதிக் கருத்துகள் சொல்கின்றன.

சோர்வடையச் செய்வதற்கென்றே பல மனிதர்கள் இவ்வுலகில் உண்டு.

அவர்களைக் கூட கடந்து போய்விட வேண்டும்.

பிரியமானவர்களின் இழப்பு என்பது கூட அப்படியானதே.

அந்த நிகழ்வுகளிலேயே நிலைத்துஇருக்காமல், அடுத்தகட்ட நகர்தலை நோக்கி பயணிக்க வேண்டும்.

#வாழ்க்கையில் கடக்க வேண்டியவற்றில் #துரோகம், #அவநம்பிக்கை, #கூடாநட்பு, #புகழ் ஆகியவை முதன்மையானது.

வலிமையும், நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டு #வாழ்க்கையை_வாழ்வோம்_அழகாக...!

உண்மைகள்_உபதேசமாய்

1 .#உண்மைகள்_உபதேசமாய்!!!

2. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..

சனி, 5 நவம்பர், 2022

ஆங்கிலம் தெரியாதா

அலுவலக வேலையாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர் என்னிடத்தில் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார். நீங்கள் தமிழிலே பேசுங்கள் என்று சொன்னேன்.. அதற்க்கு நக்கலாக ஏன் ஆங்கிலம் தெரியாத என்று கேட்டு சிரித்தார்......

உடனே நான் அவரிடம் ஒரு ஆங்கில வார்த்தையை அதன் subject யை மாற்றாமல் அதன் verb மற்றும் மாற்றி எத்தனை வகையாக கூறலாம் என்று கேட்டேன்..அது 5, 6 வகையாக மாற்றலாம் என்று கூறினான்

நான் He speak என்ற வார்த்தையை மாற்றி காட்டுங்கள் என்று கூறினேன் 

அவனால் மூன்று க்கு மேலாக கூற முடியவில்லை..

பின் நான் கூற ஆரம்பித்தேன்

He speaks.
He does not speak.
Does he speak?
He is speaking.
He is not speaking.
Is he speaking?
He spoke.
He did not speak.
Did he speak?
He was speaking.
He was not speaking.
Was he speaking?
He has spoken.
He has not spoken.
Has he spoken?
He has been speaking.
He has not been speaking.
Has he been speaking?
He had spoken.
He had not spoken.
Had he spoken?
He had been speaking.
He had not been speaking.
Had he been speaking?
He will speak.
He will not speak. 
Will he speak?
He is going to speak.
He is not going to speak.
Is he going to speak?
He will be speaking.
He will not be speaking.
Will he be speaking?
He will have spoken.
He will not have spoken.
Will he have spoken?
He will have been speaking.
He will not have been speaking.
Will he have been spoken? 
He would speak.
He would not speak.
Would he speak?
He would be spoken
He would not be speaking.
Would he be speaking?
He would not have spoken.
Would he have spoken

தலைசுற்றே வந்துரிச்சு.. 
நாம தமிழே பேசலாமே என்று கூறிவிட்டான்..

ஆங்கிலம் பேசுரவன் எல்லாம் புத்திசாலியும் கிடையாது..
தமிழ் பேசுரவன் எல்லாம் முட்டாளும் கிடையாது........

செவ்வாய், 1 நவம்பர், 2022

Some interesting facts you need to know


 
1. If you speak too much, you will lie.

2. If you think too much, you will be depressed.

3. If you cry too much, you will lose your sight.

4. If you love too much, you will be lost.

5. If you care too much, you will be taken for granted.

6. If you play too much, you will not be taken serious often.

7. If you trust too much, you will be betrayed.

8. If you work too much, you will die of stress.

9. If you eat too much, you will be obessed

10. If you sleep too much, you will be idle.

11. If you spend too much, you will have no future.

12. If you wear make up too much, you will lose your beauty.

13. If you look too much, you will lose your focus.

14. If you pursue life too much, you will lose everything.

And lastly...

15. If you expect too much, you will be disappointed. Don't be too much because that too much can hurt you so much.

Keep following Dr Fami