நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வியாழன், 29 செப்டம்பர், 2022

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக கவிஞர் எம்.ஏ.நுஃமான்
எழுதிய கவிதை மூன்று மொழியிலும் இருப்பதால், இது அனைவராலும் இங்கும் பேசப்படுகிறது

“புத்தரின் படுகொலை”கவிதை மூன்று மொழியிலும்

- බුදුන් ඝාතනය කිරීම -

පෙරදින මගේ සිහිනෙක
බුදුහු වෙඩි වැදී මියැදුණහ
සිවිල් ඇඳුමෙන් සැරසුණු බල සෙනඟ
උන් වහන්සේ ඝාතනය කළහ
තිබිණි බිම ඔත් ලේ විලක් මත
ශ්‍රී දේහය
යාපනය පොත් ගුලට ඇතුළු වන
පඩිපෙළ ළඟම

රැයේ ඇඳුරේම - ඇමතිවරු ආහ
'මේ නම අපේ ලැයිස්තුවේ ලියා නැත
ඉතින් මොන එහෙකට
මරා දැමුවේ ඔහොම?'
කිපී ගුගුළහ

"නෑ සර්
වැරද්දක් නෙමෙයි මේ
උන් වහන්සේගේ ප්‍රාණය නොසිඳ
මැස්සෙක් වත් මරන්නට නොහැකි වෙයි
අන්න ඒ නිසාමයි...'
පිළිවදන් දෙති

'හරි හරි
සඟවන්න ඔය දේහය
එසේ කී ඇමතිවරු
සැඟවුණහ.
සිවිල් නිලධාරීහු
ඇදගෙන ගියහ ඇතුළට
බුදුන්ගේ ශ්‍රී දේහය
පොත් අනූ දහසකින් සැඟවූහ එය
අනතුරුව
සිඟාලෝවාද සූත්‍රය - දල්වන්නාහුය

දැවී අළු විය
ශ්‍රී දේහය
ධම්ම පදය ද භෂ්ම වී ඇත.

එම්.ඒ. නුහ්මාන්
පරිවර්තනය - නිලාර් එන්. කාසිම්

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.
‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்……
என்றனர் அவர்கள்.
‘சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை’
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
*சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

Murder of Buddha

Last night
I dreamt
Buddha was shot dead
by the Police,
guardians of the law.
His body drenched in blood
on the steps
of the Jaffna Library
Under cover of darkness
came the ministers.
“His name is not on our list,
why did you kill him?”
they ask angrily,
“No sirs, no,
there was no mistake.
Without killing him
it was impossible
to harm a fly –
Therefore… ,” they stammered.
“Alright, then
hide the corpse.”
The ministers return.
The men in civvies
dragged the corpse
into the library.
They heaped the books
ninety thousand in all,
and lit the pyre
With the Cikalokavadda Sutta.
Thus the remains
of the Compassionate One
were burned to ashes
along with the Dhammapada.
கண்ணாடி...
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”
உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,
உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது, 
உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts
✅ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். 
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.
 " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. 
ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. 
பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். 
மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
💐💐💐
*எப்படினு புரியல. ஆனா சரியா வருது?*
-----------
*மொபைல் எண்கள் உங்கள் வயதை வெளிப்படுத்துகின்றன.  நம்புங்கள்?*

    *1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கத்தை எடுத்துக்குங்க.*

    *2) அந்த எண்ணை 2 ஆல் பெருக்கவும்*

    *3) அந்த எண்ணுடன் 5 ஐ கூட்டவும்.*

    *4) கூட்டி வரும் எண்ணை 50 ஆல் பெருக்கவும்*

    *5) நீங்கள் பெறும் எண்ணுடன் 1772 ஐ கூட்டவும்*

    *6) பெறப்பட்ட எண்ணிலிருந்து உங்கள் பிறந்த ஆண்டைக் கழிக்கவும்*

    *7) நீங்கள் 3 இலக்கங்களைப் பெறுவீர்கள்.* *முதலாவது உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கம்.*
 *மற்ற இரண்டு உங்கள் வயது.*
*நம்பமுடியல. ஆனா உண்மை.*

    *அற்புதம்* 👍👍👍
*பிரபஞ்சத்திற்கு நன்றி !!!*
🌊 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்   என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். 

🔥 விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்

🌬️ அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.

🌫️ நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். 

☄️ உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்.

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.

*விதைத்தவன் தூங்கி விடுவான் ...*

*விதை தூங்காது ...*

*எண்ணியவன் தூங்கி விடுவான் ...*

*எண்ணம் தூங்காது ...*

*எண்ணம்போல் வாழ்க்கை

எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்

🌞🌝🌎💥🪐💫🌈🌪️🔥

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!


புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் ஹீட்டர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்த வேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். 

அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ ஹீட்டரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. வாஷ்பேஸின் பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. பொருத்தமான பொருட்களை வாங்கி வர ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். 

அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார். 

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். 
அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார். முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி பெருமையாக  கூறி கொண்டிருந்தார். 
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். 

என் மனத்தில் ஒரத்தில் ஒரு சந்தேகம்.  பிளம்பர் ஏன் வீட்டு வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு விட்டு பிறகு வீட்டிற்குள் சென்றார்? 
அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன்.

 அதற்கு பிளம்பர் கூறியது: "நேற்று நான் எதிர்பார்த்தபடி எந்த வேலையும் நடக்கவில்லை.  இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றால் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை, டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன்" என்றார்.

 நான் வியந்து நின்றேன். 
இது உணர்த்துவது என்ன? 
பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை.  நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா?  வேலைக்கு சென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

 
என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...  31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி  பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார்.....

சாமர்த்தியமாக கையாள முயற்சி செய்யுங்கள்

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெற்று
வாழ்நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் கண்டு சாமர்த்தியமாக கையாள முயற்சி செய்யுங்கள்....

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?

👉Who Will Cry When You Die?" 😭          
ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்...உலகம் சிரித்தது..
நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்  வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."
மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்!

இதுவே வெற்றியின் மந்திரம்

ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்த பேராசிரியர் அந்த மாணவிக்கு டியூஷன் எடுக்க முடிவெடுக்கிறார்.
முதல் நாள் வகுப்புக்கு செல்கிறார் அந்த மாணவி. ஐந்து நிமிடம் தாமதம். ஆசிரியர் கடிகாரத்தையும் அந்த மாணவியையும் மாறி மாறிப் பார்க்கிறார்.
‘சாரி சார், என்னுடைய வாட்ச் ஐந்து நிமிடம் ஸ்லோ’ என காரணம் சொல்கிறாள்.
‘முதலில் உன் வாட்ச்சில் சரியான நேரத்தை வைத்துக்கொள்… நீ ரேசில் கலந்துகொள்ள இருக்கிறாய். நேரம்தான் எல்லாவற்றுக்கும் மிக முக்கியம்’ என ஆங்கிலத்தில் அறிவுரை சொல்கிறார் அந்த பேராசிரியர்.
அந்த மாணவி தான் கொண்டு வந்திருந்த தடிதடியான புத்தகங்களை அவர் முன் உள்ள டேபிளில் வைத்துவிட்டு ‘சார், இந்த புத்தகமெல்லாம் போதுமா, வேறு ஏதாவது வேண்டுமா?’ என கேட்கிறாள்.
‘இதெல்லாம் புத்தகங்கள் அல்ல. Guide. உன்னை கைட் செய்ய நான் இருக்கேன்…’ என  சொல்லிவிட்டு அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து அதை படித்துக்கொண்டு வர சொல்கிறார்.
அந்த பேப்பரைப் பார்த்த மாணவிக்கு முகத்தில் ஆச்சர்யம். அதில் A முதல் Z வரை பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதி இருந்தது. ‘சார், ஏபிசிடி தானே சார், எனக்கு நல்லா தெரியும்’ என சொன்ன மாணவியை பார்த்து அந்தப் பேராசிரியர் ‘நான் சொல்வதை செய்’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்.
அவள் வீட்டுக்கு வந்ததும் அவள் தோழிக்கு போன் செய்கிறாள். தோழியிடம்  ‘அந்த ஆசிரியர் சரியான காமெடி பேர்வழி’ என சொல்லி தன்னை ஏபிசிடி படித்து வரச் சொல்லி இருக்கிறார் என கிண்டலாக சொல்கிறாள்.
அடுத்தநாள் மிக உற்சாகத்துடன் வகுப்புக்கு சரியான நேரத்துக்குச் செல்கிறாள். அந்தப் பேராசிரியர் அவளிடம் ஏபிசிடி-யில் இருந்தே கேள்விகளைக் கேட்கிறார்.
‘ஏபிசிடி- சொல்லு…’
மாணவி மிக உற்சாகத்துடன் சொல்கிறாள்.
‘Z – ல் இருந்து சொல்லு…’
மாணவி அதே உற்சாகத்துடன் சொல்கிறாள்.
‘முதல் எழுத்து என்ன?’
மாணவி ‘A’ என்கிறாள்.
‘26-வது எழுத்து என்ன?’
மாணவி ‘Z’ என்கிறாள்.
’17-வது எழுத்து என்ன?’
மாணவி இப்போது கொஞ்சம் குழப்பத்துடன் விரல்களைவிட்டு எண்ணி ‘Q’ என்கிறாள்.
’12-வது எழுத்து என்ன?’
இப்போது மாணவி இன்னும் சற்று குழப்பமாகி விரல்களின் துணையுடன் எண்ண ஆரம்பிக்கிறாள்.
அந்தப் பேராசிரியர் அவளை முடிக்க விடவில்லை. ‘எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்… இன்னிக்குப் போய் நன்றாக கான்சண்டிரேட் செய்து படிச்சுட்டு நாளைக்கு வா…’ என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.
அந்த மாணவி கொஞ்சம் வருத்தத்துடன் வகுப்பில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறாள். ஆசிரியர் எழுதிக் கொடுத்த ஏபிசிடி பேப்பரை கையில் வைத்துக்கொண்டு வேறு மாதிரி படிக்கத் தொடங்கினார்.
A for 1, B for 2, C for 3, D for 4 என வாய் விட்டுப் படிக்கத் தொடங்க அதற்குள் அவளுடைய தோழியிடம் இருந்து போன் அழைப்பு. ‘என்னடி அந்த ஆள் என்ன காமெடி செய்தார் இன்று’ என்று எகத்தாளமாகக் கேட்ட தோழிக்கு ‘அவர் எவ்வளவு பெரிய புரொஃபசர்… அவரைப் போய் அந்த ஆள் அது இது என்று சொல்கிறாய். நான் நாளைக்கு டெஸ்ட்டுக்கு தயாராகனும்… முதல்ல போனை வை’ என்று சொல்லிவிட்டுப் படிக்கத் தொடங்குகிறாள்.
அடுத்த நாள் மிகச் சரியான நேரத்துக்கு வகுப்புக்குச் செல்கிறாள்.
பேராசிரியர் அவளிடம் ‘தயாராக வந்திருக்கிறாயா? என கேட்டுவிட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்.
’14-வது எழுத்து என்ன?’, ‘19-வது எழுத்து என்ன’ என்ற கேள்விகளுக்கு N, S என சரியாக சொன்னாள், விரல்களைவிட்டு எண்ணாமல் மனக்கணக்கிலேயே.
அவளை பாராட்டிவிட்டு போர்டில் N+S என எழுதி விடை கேட்க 33 என சொல்கிறாள். N^2 + S^2 என்ற கேள்விக்கு சில நொடிகள் மனதில் கணக்கிட்டு 557 என மிகச் சரியாகச் சொல்கிறாள். அடுத்து Y^2 + K – B^2 * g^2 என்ற கேள்விக்கு அவள் தன்னுடைய நோட்டில் எழுதி கணக்கிட்டு 440 என சரியான விடை சொல்கிறாள்.
பேராசிரியர் அவளைப் பாராட்டிவிட்டு ‘நன்றாக புரிந்துகொண்டு செய்கிறாய். ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாய்… வீட்டுக்குப் போய் நன்றாக ப்ராக்டிஸ் செய்துவிட்டு நாளைக்கு வா’ என சொல்லி அனுப்புகிறார்.
அந்த மாணவி உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்து தன் அறையில் அமர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறாள். அதற்குள் அவளுடைய சகோதரன் அவளுடைய தோழி அழைப்பதாக மொபைலை கொண்டுதர ‘நான் இல்லைன்னு சொல்லிடு’ என சொல்லச் சொல்லி படிப்பில் கவனமாகிறாள்.
இப்படியாக அவளுடைய பயிற்சி வகுப்பு, மூன்றாம் நாளைக் கடந்து நான்காவது நாளை அடைகிறது.
அடுத்த நாளும் மிகச் சரியான நேரத்துக்குச் செல்கிறாள். பேராசிரியர் அவளுக்காக போர்டில் 10 கேள்விகளை எழுதி வைத்திருக்கிறார். அவளிடம் 10 நிமிடங்களில் அந்த 10 கேள்விகளுக்கும் பதிலை எழுதச் சொல்கிறார்.
அந்தப் பேராசிரியருக்கு முன் இரண்டு டீ கப்புகள் இருந்தன. அதில் ஒன்றில் டீயை ஊற்றி குடித்தார்.
பத்து நிமிடங்கள் முடிந்ததும் மாணவியின் விடைத்தாளை அவளிடம் இருந்து வேகமாக எடுக்க முயல்கிறார். இன்னுமொரு ஐந்து நிமிடம் கொடுக்கச் சொல்கிறாள் அந்த மாணவி. ‘இதுபோல எக்ஸாம் ஹாலில் கேட்பாயா?’ என கேட்டுக்கொண்டே விடைத்தாளை பார்வையிடுகிறார்.
‘சரியாகத்தான் பதில் சொல்லி இருக்கிறாய். ஆனால் 10 கேள்விகளில் 6 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லி இருக்கிறாய்…’ என்று சொல்லிக்கொண்டே அவர் டேபிளுக்கு முன் இருந்த மற்றொரு டீ கப்பில் டீயை ஊற்றி அவளிடம் கொடுத்து குடிக்கச் சொல்கிறார். அவளும் குடிக்கிறாள்.
இதற்குள் அவர் போர்டில் Concentrate, Understand, Practice என எழுதிவிட்டு அவளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘நீ வகுப்புக்கு வர ஆரம்பித்த இந்த மூன்று நாட்களில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? முதல் நாள் உனக்கு கான்சண்டிரேட் செய்ய சொல்லிக்கொடுத்தேன். அடுத்த நாள் பாடத்தை புரிந்துகொண்டு படிக்கச் சொல்லிக்கொடுத்தேன். மூன்றாவது நாள் உனக்கு பயிற்சி எடுக்க கற்றுக்கொடுத்தேன். இன்னிக்கு உன்னால் 10 கேள்விகளுக்கு 6 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடிந்தது. இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொண்டு கூடுதலாகப் பயிற்சி எடுத்தால் உன்னால் 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்ல முடியும். ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு இவ்வளவுதான்.
எவ்வளவு பேர் பரிட்சை எழுதறாங்க… அதில் எவ்வளவு பேர் பாஸ் செய்யறாங்க என்றெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். தேர்வு ஹாலில் உன் கையில் கேள்வித்தாள். அதில் 90 கேள்விகள். உனக்கு 180 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்படும். ஒரு கேள்விக்கு 2 நிமிடம். அதில் நீ எத்தனை கேள்விக்கு சரியா பதில் சொல்லப் போகிறாய் என்பதுதான் முக்கியம். எல்லா கேள்விகளுமே உன் சப்ஜெக்ட்டில் இருந்துதான் கேட்பார்கள். நீ ஏபிசிடி-தானேன்னு அலட்சியமா இருந்த மாதிரி இல்லாமல், எல்லா பாடங்களையும் நன்றாக கான்சன்டிரேட் செய்து ஆழமாக புரிந்துகொண்டு படிக்கணும். படிச்சதை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யணும்.
சரி, அப்போ இந்த வகுப்பில் என்ன பண்ணப் போறோம்னு கேட்கறியா? ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு வைக்கப் போகிறேன். தேர்வு இல்லாத நாட்களில் உன் சந்தேகங்களை தீர்த்து வைப்பேன். உன் தேர்வுக்கு 300 நாட்கள் இருக்கின்றன. ஆக ஒரு நாள்விட்டு ஒருநாள் தேர்வு எழுதினால் மொத்தமாக 150 முறை தேர்வு எழுதி பயிற்சி எடுத்துவிடுவாய்.
உன் உண்மையான தேர்வு நாள் அன்று நீ எழுதப் போகும் தேர்வு 151-வது தேர்வாக இருக்கும். அப்போது உனக்குள் இருக்கும் தைரியமும் பயிற்சியும் உன்னை சரியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை எழுதி முடிக்க வைக்கும்… என்ன சார் சொல்வது புரிகிறதா?’
என கேட்டுவிட்டு அந்தப் பேராசிரியர் வெற்றிக்கான மந்திரமாக மற்றொரு விஷயத்தையும் சொல்கிறார்.
‘நீ எப்படி டீ குடித்தாய்?’
‘கப்பில்…’
‘ஆங்… டீயை சுவைக்க ஒரு கப் தேவையாக இருக்கிறதல்லவா, அதுபோல்தான் வெற்றியை சுவைக்கவும் ஒரு கப் உள்ளது. அதுதான் வெற்றிகான மந்திரம்’ என சொல்லி போர்டில் எழுதி இருந்த Concentrate, Understand, Practice என்ற மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தை வட்டமடித்துக் காட்டி, இந்த CUP தான் வெற்றியை சுவைக்க உதவும் மந்திரம் என சொல்கிறார்.
C- Concentrate – வகுப்பில் கவனமாக இருத்தல்,
U - Understand – பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ளுதல்,
P- Practice – தினந்தோறும் பயிற்சி எடுத்தல்
இதுவே வெற்றியின் மந்திரம் என்று விளக்கம் கொடுத்து நாளை முதல் மாதிரி தேர்வு ஆரம்பம் என சொல்கிறார். இந்த மந்திரத்தை என்றும் மறக்கவே கூடாது என அட்டகாசமாக அறிவுரை சொல்கிறார்.
அந்த மாணவியின் முகத்தில் பரவசம். பேராசிரியரின் அனுமதி பெற்று தான் குடித்த டீ கப்பை வெற்றிக்கான மந்திரமாகக் கருதி தன்னுடன் எடுத்துச் செல்கிறாள்.
இந்த காட்சி ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் வருகின்றது.
இந்தக் காட்சியில் சொல்லப்பட்டிருக்கும் ABCD லாஜிக்கும், Tea CUP லாஜிக்கும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு அவசியம் தேவை. உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்களேன்....

அனைத்தையும் நம்மிடம் சேர்க்கும் மந்திர மருந்து

அனைத்தையும் நம்மிடம் சேர்க்கும்  மந்திர மருந்து நம்மிடமே இருக்கிறது...!! அதில் முக்கிய அம்சம் – செலவே இல்லாத சிறந்த வழி இது என்பது தான்...!!!
1975ம் ஆண்டு ஜேம்ஸ் மங்கன் என்பவர் "தி சீக்ரட் ஆ•ப் பெர்பெக்ட் லிவிங்" என்ற தனது   நூலை வெளியிட்டார்.
      அது தான் "ஸ்விட்ஸ்-வோர்ட்ஸ்" (Switch Words) எனப்படும் திருப்பு வார்த்தைகள். பிரச்சினையிலிருந்து திருப்பி விடும் சக்தி வார்த்தைகளை அவர் "திருப்பும் வார்த்தைகள்" என்கிறார்!
இப்படிப்பட்ட நூறு வார்த்தைகளைத் தொகுத்திருப்பதோடு அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் அவர் கூறுகிறார்
சாவியோ பணமோ தொலைந்து போய்விட்டால், "ஐயோ, ஐயோ" என்று அலறி வீட்டை  இரண்டு படுத்த வேண்டாம். (ரீச்)"REACH" என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பி மனதிற்குள் அமைதியுடன் சொல்லுங்கள். சில நிமிடங்களிலே ஆழ்ந்த    அமைதியுடனான  மனம் தானாக சாவி கிடைக்க வழி செய்து விடும். 
வாயில் இருக்கிறது வரமாட்டேன் என்கிறது. இது ஒரு நினைவுப் பிரச்சினை. இருக்கவே  இருக்கிறது -"ரீச்" என்ற வார்த்தை. தானாக உங்கள் நினைவுக்கு வர வேண்டிய வார்த்தை வந்து விடும்.
சக்தியைத் தரும் வார்த்தை-(அடை) "Reach" ஏதாவது விற்பதாக இருந்தால் நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை – "விற்பனை செய்" என்பதல்ல. (கொடு) "GIVE" என்பதே....
பணம் அதிகம் வர வேண்டுமா? நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை - (எண்ணு) "COUNT"
இறை சம்பந்தமான திவ்ய அனுபவம் பெற வேண்டுமா? இருக்கவே இருக்கிறது (தெய்வீகம்)  "DIVINE" வார்த்தை...!
 உறவுப் பிரச்சினையா? கவலையே வேண்டாம். (சேர்ந்திருத்தல்) "TOGETHER" என்ற வார்த்தையைத்   திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். இந்தத் திருப்பு வார்த்தை அணுகுமுறையை  மாற்றி விடும்.
அனைத்தையும் இணைக்கின்ற பிரபஞ்ச சக்தி உங்களைச் சண்டை போடாமல் இருக்க வழி  வகை செய்யும். இது போன்ற ஒற்றைச் சொல் வார்த்தை மிக சக்தி வாய்ந்தது. அனுபவத்தினால் மட்டுமே  இதன் பயனைப் புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு நீங்களே வெற்றி வார்த்தைகளைத் தந்து உத்வேகத்தையும் உற்சாகத்தையும்  பெறலாம்.
சில சக்தி வாய்ந்த சொற்றொடர்களும் உள்ளன. பிரான்ஸை சேர்ந்த அறிஞரான எமிலி கூ ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தனக்குத் தானே  கூறிக் கொள்வதால் ஏற்படும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
நான்சி என்னுமிடத்தில் அவர் நடத்திய வகுப்புகளில் வருடத்திற்கு 15000 பேர் பங்கு கொண்டனர். வருடத்திற்கு சுமார் 30000 நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் செய்தார்.
தன்னுடைய நீண்ட அறிவியல் வாழ்க்கையில் அவர் தந்த மந்திரச் சொற்களை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ஆர்டன் என்பவர் மொழிபெயர்த்தார்.
அந்தச் சொற்கள்:- "
Day by Day in every way I am getting better and better"
தமிழில் இதை -
"ஒவ்வொரு நாளும் எல்லாவிதத்திலும் நான் முன்னேறி வருகிறேன்" என்று சொல்லலாம்.
தினமும் காலையும் மாலையும் நல்ல அமைதியான மன நிலையில்  இருபது முறைகள் மனதிற்குள் சொல்லி வந்தால் முன்னேற்றம் தானே ஏற்படும்.
இதற்கான காரணத்தை பிரபல அறிஞர் வால்டோன் கூற்றில் காணலாம். அவர், "நம்மைக் கலந்து ஆலோசிக்காமலேயே நமக்குள் ஒரு சக்தி வேலை செய்கிறது" (There is a power that works within us without consulting us) என்று கூறினார்.
திருப்பு வார்த்தைகளைப் பிடிப்பதன் மூலம்  வாழ்க்கை ஒரு திருப்பத்தைச் சந்தித்து ஆக்கபூர்வமான வழியில் உங்களை இட்டுச் செல்லக் கூடும்!

கோபத்தை கட்டுப்படுத்த – ‘குப்பை வண்டி விதி’ (The Law of the Garbage Truck).


கோபத்தை கட்டுப்படுத்த – ‘குப்பை வண்டி விதி’   (The Law of the Garbage Truck).
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.  அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.
அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். 
மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். 
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. 
சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக் கூடாது ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.  வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.
அதோபோல் நாம் பயன்படுத்தும் உணவுகள் கெடுதல் விளைவிப்பதாகவும் உடலுக்கு பயனற்றதாகவும் இருந்தால் அதை புறக்கணித்து நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!!

ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்:-

💥
1. பாத்ரூமுக்குள் செல்போன்
2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது 
3. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது
4. சிறிய விசயத்திற்கும் OVERA கோபப்படுவது
5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது
6.நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது
7. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வது
8. திட்டமிடாத பயணம்
9. ஆபாச வலைத்தளம்
10. தேவை இல்லாமல் வெட்டியாக கண் விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது 
11. எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது
12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது
13. இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது.
14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை
15. எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற சுயஇன்பம் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
16. நாளை என்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனநிலை.
17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே செல்வது
18.இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் , இரவு'10.30மணிக்குள் படுத்துவிடுங்கள் 5 நாட்களுக்கு காலை 6 மணிக்கு எழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள்
எவ்வளவு நீண்டது என்று. கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டு இருக்கும் வேலை வீணானது என்று தோன்றும் வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்க முடியும் ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால் ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம் 🌹

திங்கள், 26 செப்டம்பர், 2022

வாழ்க்கையில் முன்னேறவும், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும்

சாணக்கிய நீதியின் படி ஒருவர் வாழ்க்கையில் முன்னேறவும், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் சிலரை ஒருபோதும் எதிரியாக வைத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவர்களுடனான பகை உங்களுக்கு அழிவையும், மரணத்தையும் தேடித்தரும் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் தெரியாமல் கூட பகை வளர்த்துக் கொள்ளக்கூடாத அந்த நபர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மன்னர் அல்லது ஆட்சியாளருடன் நேரடியாக மோதலில் ஈடுபடுவது உங்களுக்கு சிறையில் தள்ளலாம் அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். அவர்களுடன் மோதலில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைளை ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் ஒருபோதும் அவர்களுடன் ஈடுபடக்கூடாது.

ஒருவர் தன்னைத்தானே வெறுத்தலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ, தங்களின் உடல் மற்றும் மனதை வெறுத்தலோ மரணம் அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் நெருங்கலாம். மற்றவர்கள் நம்மை மதிக்கும் முன் நாம் நம்மை மதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

உடலாலும், செல்வத்தாலும் மற்றும் ஆயுதத்தாலும் வலிமையான ஒருவருடன் எப்போதும் மோதலில் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். வலிமையான மற்றும் புத்திசாலியான ஒருவருடன் மோதும் போது நீங்களும் அவர்களுக்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

முட்டாளுடன் நட்பாக இருப்பது எவ்வளவு ஆபத்தானதோ அதேயளவு அவர்களுக்கு எதிரியாக இருப்பது அதைவிட ஆபத்தானது. அவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகியே இருங்கள். அவர்கள் உங்களின் நற்பெயரை எப்போது வேண்டுமென்றாலும் கெடுக்கலாம்.

உங்களின் மருத்துவர் மற்றும் சமையல்காரரிடம் ஒருபோதும் தகராறு செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை உண்டாக்கலாம்.

நீங்கள் ஒருபோதும் எதிரியாக மாற்றிக்கொள்ளக்கூடாத முக்கியமான நபர்களில் ஒருவர் உங்களின் நெருங்கிய நண்பர்கள். ஏனெனில் உங்களின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு எதிரியாகும்போது அது உங்களின் மரியாதைக்கும், உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

[[]]]][[[ தன்னம்பிக்கை வரிகள்]]]]]]]]]]]]]]]

[[]]]][[[ தன்னம்பிக்கை வரிகள்]]]]]]]]]]]]]]]

1.எதற்க்காகவும் காத்திருக்காதே..
உன்னால் முடிந்த நல்ல செயல்களை
செய்துமுடி..யாரையும் நம்பி
காலத்தை தொலைக்காதே!

2.தேவையில்லாத விசயத்தை பற்றி
யோசித்து உன் சக்தியை சிதற
விடாதே..மாறாக அமைதியுடன்
நல்லசெயலில் ஈடுபடு!

3.உங்களிடம் போட்டி பொறாமை
இருந்தால் உடனே விட்டுவிடுங்கள்.
எதையும் பொறுத்துக் கொள்ளும்
மனப்பக்குவத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள்.பொறுமையாக
இருந்தால் உலகம் உங்கள்
காலடியில் இருக்கும்.

4.இந்த வாழ்க்கை இருப்பது இன்னும்
சில வருடங்களே..ஆதலால் ஏதாவது
நல்ல லட்சியத்தை கொண்டிரு..
அதற்காக மட்டும் உன் வாழ்க்கையை
அர்ப்பணி.

5.மற்றவர்கள் எதை வேண்டுமானாலும்
நினைக்கட்டும்..நீ உன் ஒழுக்கத்தில் 
தவறாமல் இரு.அதுவே உன்னை
வெற்றி பெற செய்யும்.

6.யாரையும் தீயவன் என்று சொல்லாதே..நீ நல்லவன் இன்னும்
நல்லவனாக இரு என்று சொல்லுங்கள்!

7.எப்போதும் எதற்க்காகவும் பயப்படாதீர்கள்..ஒரு சிங்கத்தை
போன்ற துணிச்சல் வேண்டும்.
கோழைத்தனம் என்பது இருக்கவே
கூடாது!

8.தைரியத்துடன் வேலை செய்து
கொண்டே போ..பொறுமையோடும்
உறுதியோடும் வேலை செய்வதுதான்
வெற்றிக்கான வழி!

9.நான் மரணம் வரும்வரை வேலை
செய்வேன் என்று இருங்கள்..இந்த
மாதிரியான மனநிலைதான்
உங்களுக்கு எப்போதும் தேவை!

10.தைரியம் மிக்க இளைஞர்களே
நீங்கள் அனைவரும் மகத்தான
காரியத்தை செய்வதற்காக
பிறந்துள்ளீர்கள் என்று நம்புங்கள்!!
*படித்ததில் பிடித்தது!*
#பாவமும் புண்ணியமும் கூட வருமா

இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்…

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.

இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,

கிழவன் என்ன முனகுகிறான் என்று

செவிமடுத்து கேட்டாள்.
அவன் முனகியது, இதுதான்:

” நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;

நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்.”
தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.

‘தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;

“நீ மவராசி நல்லா இருக்கணும் ” ன்னு

கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,

“இட்லி நல்லா இருக்கு “ன்னு பாராட்டல்லனாலும்;

” ரொம்ப நன்றி தாயே” ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;

ஏதோ,… “செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;

செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்” ன்னு

தினம் தினம் உளறிட்டுப் போறானே’

என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.
‘இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய’ என்று திட்டினாள்.

‘நன்றி கெட்ட கூனனை’ நினைத்து

மன உளைச்சலுக்கு ஆளானாள்!

நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,

கொலை வெறியாக மாறியது!

ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என

மதில் மேல் வைக்கப் போனாள்….
மனம் ஏனோ கலங்கியது; 

கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே…நாம் ஏன் இப்படியாகணும்னு

அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு

வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;

இட்லியை எடுத்துக் கொண்டு,

வழக்கம்போல,

“நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;

நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! ”

என்று சொல்லிக் கொண்டே சென்றான்!

அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;

வாசலில் வாலிபன் ஒருவன்

கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.
“அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது

என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;

தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;

மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;

நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;

மயங்கி விழுந்துட்டேன்;

கண் முழிச்சு பாத்தப்போ…

யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்

என்னை தூக்கி உட்கார வச்சு

ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!

இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!
‘விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்…

அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!’

என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..
“நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்

நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் ”

…கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!

உன்மைதான் …
எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை…
புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை….

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*
1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)
3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.

அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. உறவுகளை வளர உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..

கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க. அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்…. இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.

மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.

நாம் மகிழ்ச்சியாக வாழ… இதோ சில வழிகள்...👈



1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப் பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்.

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.

30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் ‘உன்னதம்’ என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை ‘பிஸி’யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் ‘ஆன்மா’ எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

காதலிக்கத் தெரியவில்லை

எனக்கு 
பேசத் தெரியாது; 
உனக்கு 
பேசாமல் 
இருக்கத் தெரியாது

என் 
மௌனங்களை 
நீ வம்பிழுக்கும் 
பொழுதெல்லாம்
உன் 
பார்வைகளை 
நான் திருடிச்
சேகரித்துக் கொள்ள 
எனக்கு நீயே
வாய்ப்பளிக்கின்றாய்

உன் 
வெட்கங்களுக் கெல்லாம் 
என் முகவரி எழுதி 
நீ அனுப்பும் அழகை
படித்துப் படித்து 
மீளாத காதலில்
முழுகித் தவிக்கிறேன் நான்

சற்றும் 
இளைப்பாறுவதில்லை 
உன் பேரன்பு;
என் கால வெளியை 
ஆக்கிரமித்துக் கொண்டு
அல்லும் பகலும் 
என்னோடே 
விளையாடிக் கொண்டிருக்கிறது

யாருக்கும் என்னை 
கொடுத்து விடக்கூடாது 
என்று நீ
மழலைப் பிடிவாதம் 
பிடிக்கின்ற குறும்பை
ரசித்து ரசித்து 
எனக்குக்
காதல் போதை 
தலைக்கேறுகிறது

எனக்குள்
காதல் இருந்தும்
காதலிக்கத் 
தெரியவில்லை;
உனக்கு
காதலிக்காமல்
இருக்கத் தெரியவில்லை!
யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்... அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்... வாழ்க்கை வரமாகும்...

▪️இழுத்துப் புடிச்சு துன்பப்படுவதை விட, விட்டுட்டுப் போறது எவ்வளவோ மேல்... சில உறவுகளையும் கூட...

▪️ஆயிரம் படிப்புகளில் விழித்துக் கொள்ளாத மனம்... வாழ்க்கை எனும் படிப்பில் ஒரே ஒரு அனுபவத்திலே விழித்துக் கொள்ளும்...

▪️உங்களை காயப்படுத்தியவற்றை திரும்பத் திரும்ப யோசிப்பதால், அவை ஒருபோதும் உங்களை சிரிக்க விடாது...

▪️வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் துன்பங்கள் நம்மை புண்படுத்துவதாக நினைக்கக்கூடாது... அவை நம்மை பண்படுத்துவதாகவும் இருக்கலாம்...

▪️இப்போதெல்லாம் யாரும் யாரையும் நல்லவனா... கெட்டவனா... என்று பார்ப்பதில்லை... நாளைக்கு இவன் நமக்கு தேவைப்படுவானா, மாட்டானா என்று தான் பார்க்கிறார்கள்... எதிலும் ஆதாயத்தை தேடுவதே மனித இயல்பாகிவிட்டது...

▪️சண்டையில் ஒருவர் தான் வெல்ல முடியும்... சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்...!

பூமியில் வாழும் காலத்தில் மனிதன்
மனிதனாக வாழ வேண்டும்... பிறக்கும் போது எதுவும் கொண்டு வரவில்லை..
ஆனால் இறக்கும் போது நல்லவன் கெட்டவன் என்ற படத்தை பெற்று செல்கிறார்கள்....
போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...

முதல் நாள் :

எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control பண்றதை விட.,

மனசை Control பண்றது கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது

வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..

ஆனா அந்த கார்...

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,

Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,

பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..

அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..

ஆனா எங்க குருவோ..,

" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "

அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..

அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுகிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..

அப்ப குரு பார்த்துட்டார்

என்ன கேட்டேனா.. ?

" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?

நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "

இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😄🙄😄🙄😄🙄

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.



பணி நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவதுபோலத்தான். பணி நிறைவுக்குப்பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில். நீங்கள் விரும்பியதை உங்கள் விருப்பம்போல் செய்ய எந்த தடையும் இருக்காது. யாரிடமும் அனுமதி வேண்டி நிற்கவேண்டிய நிலை இருக்காது.

ஆனால் சில நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும்போது கிடைக்கின்ற மரியாதை நின்று போய்விடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். Out of sight is out of mind என்பார்கள்.

பணி நிறைவு பெற்றபின் நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள் உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள் முன்னாள் நண்பர்களுக்கு பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகிவிடுவீர்கள். கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது

எனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்க எடுக்க சென்றபோது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.

விரைவில் தரக்கூடாதா என கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாக புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

அதைப் பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்த கிளைக்கே வரக்கூடாது என எண்ணி திரும்பிவிட்டார்களாம். இது தான் உண்மை நிலை.

பதவி ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47 நீதிபதிகளில் 7நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக சொல்லியிருந்தார்கள்.

ஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன?

எனவே பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ணவேண்டாம். வேடிக்கையாக சொல்வார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்தபோது அந்த ஊரே திரண்டுவந்ததாம் அஞ்சலி செலுத்த!

ஆனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்தபோது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத்தான் என்பதை.

எனவே பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி வசப்படாதீர்கள்.

பணி நிறைவுக்குப்பின் என்ன செய்யவேண்டும்?

1. உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பார்கள்.

இதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல.

2. நடைப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை சுற்றி வருவதைக்கூட செய்யலாம்.

3. தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளை பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

4.  அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30மணிக்கே சாப்பிட்டுவிடுவது நல்லது.

5. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.

6. பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். குறிப்பாக கண் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் , போன்றவைகளை கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ளவும்.

7. அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக்கொண்டு சமூக சேவைகள் செய்யலாம்.

8.  முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.

9. உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.

10. தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.

11.  நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

12. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையைவழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை.

13. பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்துவிட்டு பின் திண்டாடாதீர்கள்.

’கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லா(து) அவன்வாயிற் சொல்.’

என்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.

பணி நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும் திட்டங்களில் முதலீடு செய்து நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி வட்டி தருவதாக சொல்லும் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில் தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.

பாசம் கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு கண்ணீரோடு அல்லல் படவேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்கு கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு கிடைக்க வழி செய்வோம்.

‘பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே’, ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் தங்களுடைய பணிக்கால கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.

14. முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல் சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை செய்யலாம்.

ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.

15. ‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும், அதனால்முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.

எனவே தினம் படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது போலத்தான்.

16. கடைசியாக பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Dead yesterday and unborn tomorrow

Why fret about them if today be sweet

எனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!

வியாழன், 15 செப்டம்பர், 2022

அன்று ஒரு புரபசர் ஒரு முக்கியமான பாடம் எடுக்க ஆரம்பிச்சாரு. போர்டு பக்கம் திரும்பி எழுத ஆரம்பிச்ச உடனே ஒரு கபோதி விசில் அடிச்சான்.

.

மாணவர்கள் பக்கம் திரும்பி யாருடா அதுன்னு கேட்டார். ஒரு பதிலும் இல்லை.

.

புரபசர் மார்க்கர் பென்னை மூடி வைத்து விட்டு, இத்தோடு க்ளாஸ் முடிஞ்சுது, நான் வேணா ஒரு கதை சொல்றேன்னாரு.

.

எல்லாரும் விருப்பமாக தலையாட்டினார்கள்.

.

அவர் கதை சொல்ல தொடங்கினாரு.

.

"நேத்து ராத்திரி தூக்கம் வர்ல, அப்போதைக்கு வர்ற மாதிரியும் தெரியல. சரி காருக்கு பெட்ரோல் நிரப்பிட்டு வருவோம்னு கிளம்பிப் போனேன்.

.

பெட்ரோல் நிரப்பிட்டு, டிராபிக் இல்லாத ரோட்ல கொஞ்சம் சுத்துனேன், ஒரு தெருமுனைல ஒரு அழகான பொண்ணு நின்னுச்சு, அவ நடை உடையைப் பார்த்தா ஏதோ பார்ட்டி முடிஞ்சு வர்ற மாதிரி தெரிஞ்சது.

ஒரு ஆர்வத்துல அவ பக்கத்துல காரை நிப்பாட்டி, லிப்ட் வேணுமான்னு கேட்டேன்.

.

ரொம்ப நன்றின்னு சொல்லி முன்சீட்ல உக்காந்துக் கிட்டாள்.

.

பேசிக் கொண்டே வந்தோம். அவளது அறிவும், எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் அதைப் பற்றிய அவளது புரிதலும் எனக்கு வியப்பை அளித்தது.

.

அவ வீடு வந்த உடனே எனது உதவும் குணம் அவளை

என் மீது காதல் கொள்ள வைத்ததாகக் கூறினாள்

.

நானும் ஒத்துக்கிட்டேன் அவள் அறிவிலும் அழகிலும் மயங்கி விட்டதை, அப்புறம் சொன்னேன், நான் புரபசராக வேலை பார்க்கிறேன் என்பதை.

இரண்டு பேரும் மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.

.

ரிலேஷன்சிப் அப்பவே தொடங்கிருச்சு.

அவ இதே யுனிவர்சிட்டில படிக்கிற அவ தம்பியை பாத்துக்கச் சொன்னாள்.

.

சரி அவன் பேரு என்னன்னு கேட்டேன்.

.

நீங்களே அவனை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

எப்பப் பார்த்தாலும் விசில் அடிப்பான் என்று சொன்னாள் " என்று கதையை முடித்த நிமிடத்தில்,

.

எல்லா பயபுள்ளகளும் க்ளாஸ்ல விசில் அடிச்ச பயனைப் பார்த்தானுவ.

.

அப்ப அந்த புரபசர் சொன்னாரு," பி. எச்டி சைக்காலஜி காசு குடுத்து வாங்கினன்னு நினைச்சீங்களா, படிச்சு வாங்கினதுடா "

.

இது எப்படி இருக்கு.❤😄👍
சம்பளம் உயர்தி கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test!
Q: நீ flightல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு, அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
A: 49 இருக்கும்.
Q: ஒரு யானையை எப்படி 3 Stepல் fridgeக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல அது என்ன?
A: மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
Q: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.?
A: தாரளமா கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.
Q: ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்கஎப்படி?
A: குளத்தில் மூழ்கிட்டாங்க.
Boss: அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு.
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க, இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..
ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்.
நீதி- கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது.!