நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வெள்ளி, 30 டிசம்பர், 2022

Do whatever makes you happy is bad advice.

This advice has bred a generation of selfish and arrogant people who only think of themselves and their happiness.

Before you do what makes you happy, you need to ask if it's legal, if it's moral, if its godly, if it put others in danger.

So many things can make you happy and end up destroying you, most times harmful to others. Taking what belongs to others can make you happy and give you plenty money, but does it make others happy, does it go against morality?

Don't just do what makes you happy, do what is right, it might not make you happy at the moment, but it will bring peace and joy to you later.

Happiness is not the ultimate, joy is.

Stop selling fake drugs, it might give you gain at the moment but it will destroy your soul.

Go for what give you a sense of purpose and accomplishment, what brings peace to your soul not just what makes you happy.

#theanointedconsultant

புதன், 28 டிசம்பர், 2022

SOME SOCIAL RULES THAT MAY HELP YOU:
1. Dress well no matter what the occasion.
2. Always carry cash.
3. Always getup when you're sitting and someone come to greet you.
4. Always comment on good things don't keep in heart.
5. If the phone is on the speaker inform.
6. Chat to anyone who is sitting alone at a party or in a group.
7. If feasible, avoid the plan to go outdoor if you have a runny nose.
8. Do not swipe left or right if individual shows you a photo on their phone.
9. Wave your hand rather than calling his or her name if someone is far or on phone or earphones plugged in.
10.Offer a glass of water to the delivery man.
11. People know the worth. If successful wear shirt of 300 it seems 3000 and if unsuccessful wear 3000 it seems 300. Don’t show off.
12. When anyone gets shouted at don’t look at them. It’s more awkward.
13. Always open the door for the person coming behind you. Doesn’t matter if it is a guy or a girl.
14. Stop being late, it’s irritating.
15. When someone starts talking about their conditions, don't start talking about yours.
16. Never ask a shy person what’s wrong or ask them ‘why aren’t you talking more?’ It only makes them feel more awkward.
17. When visiting someone's house, carry something.
18. When you open a gift, just say thank you. Don't say, "It's too expensive!"
19. Being vegetarian or non-vegetarian is a choice.
20. Don't ask anyone why it's so.
21. Do not sympathize with anyone in public. This will embarrass a person more than be laughing at.
22. Don't expect others to understand how hard you are working and living. Everyone doing.
23. If you like working with smart people, be prepared to be used by them too.
24. Don't make suggestions; But when it comes to house, car, marriage don't give advice. Because these are very important things & if something goes wrong you’ll be blamed or they may stop talking to you. 
25. Don't look at your phone when others are talking to you.
ஒரு நண்பராக இருப்பது எப்படி?

‘உன்னை அழைப்பதற்குச் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. நீ கேட்கும் எதுவும் கிடைக்கும். உன் நண்பனைத் தவிர! வா சிசரோ’ என்று ஒரு தேவதை வந்து அழைத்தால், கையெடுத்து வணங்கிவிட்டுச் சொல்வேன். மாட்டேன். நீ வேண்டுமானால் அதைச் சொர்க்கம் என்று அழைக்கலாம். என் நண்பன் இல்லாத ஓரிடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்? அங்கே நான் ஏன் வரவேண்டும்?

‘உன்னை அழைப்பதற்கு நரகத்திலிருந்து வருகிறேன். அங்கே உலகின் அத்தனை பயங்கரங்களும் இருக்கின்றன. நீ தப்பவே முடியாது. உன் நண்பன் அட்டிகஸும் அங்கேதான் இருக்கிறான். வா என்னோடு’ என்று ஒரு பூதம் வந்து அழைத்தால், இதோ என்று கையோடு கிளம்பிவிடுவேன். என் அட்டிகஸ் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்? அங்கே எப்படிப் பயங்கரங்கள் இருக்கும்? ஒருவேளை நிஜமாகவே அது ஒரு கொடூரமான இடம் என்றால், என் நண்பனை அங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி இங்கே சுகமாக வாழ முடியும்?

பாவம், ரோமாபுரியின் தத்துவஞானி கொஞ்சம் உணர்வுவயப்படுகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வதில் கொஞ்சம்கூட மிகையே கிடையாது. நான், என் வீடு, என் குடும்பம் என்று சுருங்கிக் கிடந்த என்னைப் பிடித்து வெளியில் இழுத்து இதோ பார் என்று பரந்து விரிந்த உலகைக் காட்டியவன் அட்டிகஸ். கண்களோடுதான் பிறந்தேன். ஒளி அவன் கொடுத்தது. இதயத்தோடுதான் பிறந்தேன். துடிப்பு அவன் வழங்கியது. நட்பின் உண்மையான பொருள் என்ன, அது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை அவனிடமிருந்தே கற்றேன்.

ஒரு நல்ல நண்பனால் உங்கள் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று பார்க்க முடியும். உங்களுக்குள் நிறைந்திருக்கும் நல்லதையும் கெட்டதையும் கண்டுபிடித்து இது நல்லது, இது கெட்டது என்று தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும். நல்லதை மேலும் மேலும் வளர்க்கவும் கெட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும் அவன் உங்களுக்கு உதவுவான். இவன் என் வாழ்க்கைக்குள் நுழைந்தான். அதன் பின் எல்லாமே மாறிவிட்டது என்று அவனைக் கைகாட்டி நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.

நான் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதை மட்டுமல்ல; எதையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லையோ அதையும் என் நண்பன் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இதைச் சொன்னால் நான் கோபப்படுவேனோ, அப்படிச் சொன்னால் நான் வருந்துவேனோ என்றெல்லாம் தயங்க மாட்டான்.

அட்டிகஸ் நீ என்னை அதிகம் புகழ்ந்ததில்லையே, ஏன்? என்னுடைய மாபெரும் சாதனைகளைக்கூட ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுகிறாயே, ஏன் என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவன் என் தோளில் கை போட்டுப் புன்னகைத்தான். ‘நீ மேலே ஏற, ஏற கைதட்டி மகிழ்வதற்கும், இன்னும் இன்னும் மேலே போ என்று ஆர்ப்பரிப்பதற்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தக் கூச்சலில் என் சிசரோவின் இதயத்தை அடைத்துவிடக் கூடாது! தவறாக ஓரடிகூட எடுத்து வைத்துவிடக் கூடாதே என்று பதைபதைப்போடு பார்ப்பதற்கு நான் ஒருவன்தான் இருக்கிறேன்! உன் புகழ், சாதனை, பெருமிதம் எதுவும் உன்னைவிட முக்கியமில்லை எனக்கு’ என்றான் அட்டிகஸ்.

ஒருவருக்கு ஓர் அட்டிகஸ் போதுமா என்று கேட்டால் ஒரு தோட்டத்தில் ஒரு செடி போதுமா என்று கேட்பேன். ஆரம்பத்தில் என் வகுப்பு, என் பள்ளி, என் வீதி, என் மதம் என்றுதான் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் மட்டும் போதாது என்றே சொல்வேன். உங்கள் நம்பிக்கை, உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, உங்கள் நிலம், உங்கள் ஆர்வம் அனைத்தையும் கடந்து புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள்.

சமவயது நண்பர்கள் மட்டும் போதாது. மூத்தவர்களோடும் இளையவர்களோடும் பழகுங்கள். நீங்கள் ஆண் என்றால் பெண் நண்பர்களையும் நீங்கள் பெண் என்றால் ஆண் நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை விரிவடைவதை, சிந்தனை வளம் பெறுவதை, உள்ளம் வலுவடைவதை உணர்வீர்கள்.
நீங்கள் கலங்கி நிற்கும்போது உங்கள் நண்பரின் கரம் உங்கள் தோள்மீது படரும். நீங்கள் அஞ்சி நிற்கும்போது உங்கள் நண்பர் உங்கள் கரங்களை உறுதியோடு பற்றிக்கொண்டு உங்களோடு சேர்ந்து நடப்பார். உங்கள் பாதையில் இருள் மூடிக்கிடக்கும்போது அவர் மெழுகுவத்தியோடு தோன்றுவார்.

உங்கள் எதிரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை நீங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அவசரமே வேண்டாம், பேசிப் பழகி, பொறுமையாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான அட்டிகஸை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் ஓர் அட்டிகஸாக மாறவேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களைச் செழுமைப்படுத்தியதுபோல் நீங்கள் இன்னொருவரைச் செழுமைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களை நிறைவு செய்ததுபோல் நீங்கள் இன்னொருவரைக் கண்டறிந்து அவர் குறைபாடுகளைப் போக்கி, அவரை நிறைவு செய்ய வேண்டும்.

நிறைவான மனிதன். நிறைவான வாழ்க்கை. நிறைவான உலகம். இந்த மாயத்தை நட்பு தவிர வேறு எதனாலும் நிகழ்த்த முடியாது.

மருதன்
மாய உலகம், மாயாபஜார்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

Things Mentally Strong People Don’t Do.

Things Mentally Strong People Don’t Do.

1. They Don’t Waste Time Feeling Sorry for Themselves

Mentally strong people don’t sit around feeling sorry about their circumstances or how others have treated them. Instead, they take responsibility for their role in life and understand that life isn’t always easy or fair.

2. They Don’t Give Away Their Power

They don’t allow others to control them, and they don’t give someone else power over them. They don’t say things like, “My boss makes me feel bad,” because they understand that they are in control over their own emotions and they have a choice in how they respond.

3. They Don’t Shy Away from Change

Mentally strong people don’t try to avoid change. Instead, they welcome positive change and are willing to be flexible. They understand that change is inevitable and believe in their abilities to adapt.

4. They Don’t Waste Energy on Things They Can’t Control

You won’t hear a mentally strong person complaining over lost luggage or traffic jams. Instead, they focus on what they can control in their lives. They recognize that sometimes, the only thing they can control is their attitude.

5. They Don’t Worry About Pleasing Everyone

Mentally strong people recognize that they don’t need to please everyone all the time. They’re not afraid to say no or speak up when necessary. They strive to be kind and fair, but can handle other people being upset if they didn’t make them happy.

6. They Don’t Fear Taking Calculated Risks

They don’t take reckless or foolish risks, but don’t mind taking calculated risks. Mentally strong people spend time weighing the risks and benefits before making a big decision, and they’re fully informed of the potential downsides before they take action.

7. They Don’t Dwell on the Past

Mentally strong people don’t waste time dwelling on the past and wishing things could be different. They acknowledge their past and can say what they’ve learned from it. However, they don’t constantly relive bad experiences or fantasize about the glory days. Instead, they live for the present and plan for the future.

8. They Don’t Make the Same Mistakes Over and Over

They accept responsibility for their behavior and learn from their past mistakes. As a result, they don’t keep repeating those mistakes over and over. Instead, they move on and make better decisions in the future.

9. They Don’t Resent Other People’s Success

Mentally strong people can appreciate and celebrate other people’s success in life. They don’t grow jealous or feel cheated when others surpass them. Instead, they recognize that success comes with hard work, and they are willing to work hard for their own chance at success.

10. They Don’t Give Up After the First Failure

They don’t view failure as a reason to give up. Instead, they use failure as an opportunity to grow and improve. They are willing to keep trying until they get it right.

11. They Don’t Fear Alone Time

Mentally strong people can tolerate being alone and they don’t fear silence. They aren’t afraid to be alone with their thoughts and they can use downtime to be productive. They enjoy their own company and aren’t dependent on others for companionship and entertainment all the time but instead can be happy alone.

12. They Don’t Feel the World Owes Them Anything

They don’t feel entitled to things in life. They weren’t born with a mentality that others would take care of them or that the world must give them something. Instead, they look for opportunities based on their own merits.

13. They Don’t Expect Immediate Results

Whether they are working on improving their health or getting a new business off the ground, mentally strong people don’t expect immediate results. Instead, they apply their skills and time to the best of their ability and understand that real change takes time.

Source: FB

திங்கள், 26 டிசம்பர், 2022

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில் ஆங்கிலத்தில்  "complete" என்ற சொல்லுக்கும் "finished" என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்கள்.  கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று கூறினார்கள்.  அப்போது அறிஞர் அண்ணா  அவர்கள் கூறினார்...    நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால் , உங்கள் வாழ்கை "complete".  அதுவே நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை "finished ". அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "Completely Finished" என்றார்.  இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்....

👏👏👏
"தெய்வம் மனுஷ்ய ரூபனே" பஸ்ஸில் ஏறும்போது பலருக்கு பல வேண்டுதல். 
சீக்கிரமா போகணும், 
இடையில எங்கேயும் நிக்க கூடாது, 
கண்டக்டர் சில்லறை கொடுக்கணும், 
இவை எல்லாவற்றையும் விட பக்கத்து சீட் ஆள் நல்லபடியா அமையனும். 
இல்லைனா பக்கத்து சீட்டுக்கு ஆள் வராமலேயே போயிடனும். அப்டிங்கிற வேண்டுதல் அதிகமாய் இருக்கும்.

எங்கம்மா அடிக்கடி சொல்லும் பஸ்ல முன்னாடி உக்காரதா ஏன்னா ஆக்சிடெண்ட் ஆயிரும்னு. 
பின்னாடியும் உக்காரத ஏன்னா பின்னாடி ஏதாவது வந்து இடிச்சிடும்னு. அதனால ஏறுநா நடுவுல தான் என் சாய்ஸ். அதுவும் ஜன்னலோர சீட் 
ஒரு முறை எங்கேயோ படித்த ஞாபகம். 
"செல்போன் வந்த பிறகு ஜன்னலோர சீட்டின் மதிப்பு குறைந்துவிட்டது என்று" 
உண்மைதான். இன்று இயர் போன் மாட்டிக்கொண்டால் தான் இறங்க வேண்டிய இடம் கூட மறந்து விடுகிறது பலருக்கு. 
ஒரு நாள்
கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு  அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)  

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து 
"தம்பி பக்கத்துல ஆள் வருதா?" 
" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க" 

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?" 
" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார். 

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?" 

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?' 
இல்ல நான் உக்காரணும்" 
" சரி உக்காரு"  ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான். 
கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு. 

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?! 
முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். (என் பையன் அடிக்கடி என்கிட்ட வந்து " ஏம்ப்பா ! ஈரோட்டுக்கெல்லாம் தீவிரவாதிங்க வருவங்களாப்பா" னு )
அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள். 

தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை. 
பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம். 

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து 
"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான். 
நான் எதுக்கு னு கேட்டேன். 
"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்" 
சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன். 
.அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான் 

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு 
நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு. 

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க. 
ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது. 

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன். 
அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் மணம்தான் வீசியது......
படித்ததில் பிடித்த தத்துவங்கள் ....!!!

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும்
ஷாப்பிங் ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!

10. எதை எல்லாம் நடக்கக்கூடாது
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான்
வாழ்க்கை!

ஓய்வு

ஓய்வு...
பணி ஓய்வுப் பெறுகிறார் இன்று
என் பக்கத்து அலுவலகத்தில் ஒருவர்...

பிரிவு உபச்சார விழா மேடையில்
பெரியதொரு மாலை அணிந்தபடி
சிறியதொரு புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் அவர்...

"பம்பரமாய்ச் சுழன்று உழைத்த
நம்பிக்கைக்குரிய உழைப்பாளி"
போன்ற சம்பிரதாய வார்த்தைகளால்
வந்திருந்தவர்கள் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்
அந்த அம்பத்தியெட்டு வயது மனிதரை...

"இவர் கால் வைத்த பின்பு தான்
வேர் விட்டு வளர்ந்தது இந்த அலுவலகம்" என்று...

சால்வை அணிவித்துக் கொண்டே
சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்
சஃபாரி அணிந்திருந்த அந்த
உயரதிகாரி...

சிறு சிறு தவறுகளுக்காக
சிடு சிடுவென எரிந்து விழுந்த
அதே மேலதிகாரி தான் சிரித்தபடி இன்று அவரைச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்...

இன்னும் சில நிமிடங்களில்
இனிதே நிறைவுற்றுவிடும் விழா...

கழுத்தில் அணிந்த மாலையின் பாரம்
அதைக் கழற்றியவுடன் காணாமல் போய்விடும்...

ஆனால் மனதில் தொற்றிக் கொண்ட 
ஒரு பாரம் இனி மெளனமாகத் தொடரும்...

அனுதினம் அவரைச் சுமந்த நாற்காலி
இனி அடுத்து ஒருவரைச் சுமக்க ஆயத்தமாகி இருக்கும்...

அவர் தலைக்கு மேல் சுழன்ற மின்விசிறி
இனி வேறொருவரின் வியர்வையை உலர்த்த தயாராகி இருக்கும்...

கோப்புகளே கதி என்றிருந்தவரை
மூப்பு வந்து முழுதாய் விடுவித்திருக்கிறது...

நேற்று வரை பேனா பிடித்த கரத்தில்
இன்று வெறுமை புகுந்து
விரல் பிடித்திருக்கிறது...

வாசலில் அமர்ந்திருக்கும் அந்தக் காவலாளியிடம் 
"நாளை பார்க்கலாம்" 
என்று நாள்தோறும் 
சொல்லிச் செல்லும் வழக்கம்
இனி வாய்க்கப் போவதில்லை அவருக்கு...

மாலை நேரத்தில் தேநீர் கொண்டுவரும் பையனிடம் ஆறிப் போன தேநீருக்காக
அலுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இனி இருக்கப் போவதில்லை அவருக்கு...

அலறும் அலாரச் சத்தம் ஏதுமின்றி
இனி அமைதியாகவே விடியப் போகின்றன அவரது அதிகாலைகள்...

இதுநாள் வரை இயந்திர கதியில் புரட்டப்பட்ட செய்தித்தாள்களில்
இனி இரங்கல் செய்திகள் கூட
இருமுறை வாசிக்கப்படும்...

"அப்பா... ஆபீஸ் போற வழியில
என்ன பஸ் ஸ்டாப் இல் இறக்கி விட்ருங்க"

"ஏங்க டிபன் பாக்சுல
தயிர் சாதம் வச்சிருக்கேன்,
மதியம் திறக்கும் போது 
பார்த்துத் திறங்க"

"வேலை முடிய லேட் ஆச்சுன்னா
கால் பண்ணுங்க"

இப்படியான உரையாடல்கள்
இனி ஒருபோதும் அவர் செவிகளைச் சென்று சேரப் போவதில்லை...

நதியென ஓடிக் கொண்டிருந்த
அவரது பகல் பொழுதுகள்
நத்தையென நகர்வதாக
நித்தம் இனி அவர் உணரக்கூடும்...

இவ்வாறாக நான் எண்ணிக் கொண்டிருக்கையில் இறங்கி நடந்து வருகிறார் என்னை நோக்கி அவர்...

இப்போது கைக்குலுக்கி முடித்து
கடைசியாக நான் அவருக்கு
சொல்ல வேண்டியது
பாராட்டுகளா? அல்லது ஆறுதலா?

எல்லாமே சில காலம் தான்...

கீதை உபசாரத்தில் சொன்னது போல
இதுவும் கடந்துப் போகும் என்பது
மட்டுமல்ல...
எதுவும் கடந்துப் போகும் என்பது தான்
பேருண்மை √
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"""""""'"""""""''''''''"'"''"'"'''''''"'''""""'"""""""""
கடவுளிடம் பிரார்த்தனை எப்படி வைக்க வேண்டும்?

ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.

அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.

கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.

அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.

அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.

அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.

நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும்.

இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

நீதி: கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கார் வேண்டும், வீடு வேண்டும், பணம் வேண்டும், நகை வேண்டும் என பிரார்த்தனை செய்யாதீர்கள்.*

என் வாழ்க்கையையே உன் கையில் ஒப்படைத்து விட்டேன். 

என் வாழ்க்கையின் சாரதியாக இருந்து என்னை வழிநடத்தி செல் என்று இறையருளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விடுங்கள்.

*நீங்கள் கேட்க நினைத்த வசதிகள் மட்டுமல்ல, நீங்கள் கேட்காத வசதிகள் உட்பட சகல சம்பத்துகளையும் அந்த இறையருள் உங்களுக்கு அளிக்கும்*

சனி, 24 டிசம்பர், 2022

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பணம் இருந்தால் நீங்கள்  உயர்ந்தவர் நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி.

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.

நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில வலிகள் இல்லாமல் இருக்கும்.

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.

 யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

SOME SOCIAL RULES THAT MAY HELP YOU:


1. Dress well no matter what the occasion.
2. Always carry cash.
3. Always getup when you're sitting and someone come to greet you.
4. Always comment on good things don't keep in heart.
5. If the phone is on the speaker inform.
6. Chat to anyone who is sitting alone at a party or in a group.
7. If feasible, avoid the plan to go outdoor if you have a runny nose.
8. Do not swipe left or right if individual shows you a photo on their phone.
9. Wave your hand rather than calling his or her name if someone is far or on phone or earphones plugged in.
10.Offer a glass of water to the delivery man.
11. People know the worth. If successful wear shirt of 300 it seems 3000 and if unsuccessful wear 3000 it seems 300. Don’t show off.
12. When anyone gets shouted at don’t look at them. It’s more awkward.
13. Always open the door for the person coming behind you. Doesn’t matter if it is a guy or a girl.
14. Stop being late, it’s irritating.
15. When someone starts talking about their conditions, don't start talking about yours.
16. Never ask a shy person what’s wrong or ask them ‘why aren’t you talking more?’ It only makes them feel more awkward.
17. When visiting someone's house, carry something.
18. When you open a gift, just say thank you. Don't say, "It's too expensive!"
19. Being vegetarian or non-vegetarian is a choice.
20. Don't ask anyone why it's so.
21. Do not sympathize with anyone in public. This will embarrass a person more than be laughing at.
22. Don't expect others to understand how hard you are working and living. Everyone doing.
23. If you like working with smart people, be prepared to be used by them too.
24. Don't make suggestions; But when it comes to house, car, marriage don't give advice. Because these are very important things & if something goes wrong you’ll be blamed or they may stop talking to you. 
25. Don't look at your phone when others are talking to you.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

பணத்தைக் கையாளும் கலையை குழந்தைகளுக்கு எப்படி சொல்லித் தருவது..?*

 *


நம் பிள்ளைகள் பிற்காலத்தில் பணத்தை சிறப்பாகக் கையாள நாம் அவர்களின் இளம் வயதிலேயே போதுமான பயிற்சி கொடுப்பது அவசியம். பொதுவாக, ஏழு வயதுக்கு மேல் சிறுவர்கள் பணத்தைக் கையாளும். திறனைப் பெறுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, குறைந்த பட்சம் அந்த வயதிலாவது பணத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பது நல்லது.


*நாணயங்களைக் கையாளும் திறன்...*


முதலில், சிறிய மதிப்பிலான நாணயங்களைக் கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள். முதலில் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள்.


அதன்பிறகு ரூ.2, ரூ.5, ரூ.10 எனப் பல நாணயங்களைக் கலந்து கொடுத்து அவற்றை எண்ணப் பழக்குங்கள். இதன் பிறகு, ரூ.10, ரூ.20, ரூ.50 என பல ரூபாய்த் தாள்களைக் கொடுத்து அவற்றின் மதிப்பு என்ன என்பதை ஒரு காகிதத் தில் எழுதச் சொல்லுங்கள்.


இப்படிச் செய்வதன்மூலம் நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் கையாளும் திறன் குழந்தைகளுக்கு இயல்பாக வரும். பிற்காலத் தில், பணம் தொடர்பாக முடிவு செய்ய அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!


*உழைத்தால் கிடைக்கும் பணம்...*


வீட்டில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, வாகனங் களைத் துடைப்பது போன்ற வேலைகளைப் பிள்ளைகளைச் செய்யச் சொல்லுங்கள். எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கு பணம் கொடுங்கள். உதாரணமாக, அரை மணி நேரம் ஒரு வேலையைச் செய்தால் ரூ.50 என்பது போல் கொடுங்கள்.


கூடவே சில நுட்பமான வேலைகளை செய்யச் சொல்லி, அதை அவர்கள் சிறப்பாக குறுகிய காலத்தில் செய்யும்போது அதற்கு வழக்கத்தைவிட இருமடங்கு தொகையைக் கொடுங்கள். அப்போது இந்த வேலையை நீ சரியாகவும் குறுகிய காலத்திலேயும் செய்ததால், இந்த இரட்டிப்புப் பணம் கிடைத்திருக்கிறது என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.


*உழைத்தால் தான் நமக்கு பணம் கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரியும்படி தெளிவுபடுத்துங்கள்.*


*முதலீடு...*


இந்தப் பணத்தை வங்கியில் முதலீடு செய்து அதற்கு கிடைக்கும் வட்டி என்ன என்பதை வங்கிக் கணக்கு புத்தகத்தில் அச்சிட்டு அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். மேலும், வட்டிக்கு வட்டி சேரும் கூட்டு வளர்ச்சி (compounding) பற்றி எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளை சிறுவயதிலேயே பணத்தைச் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய வைத்து, அதைப் பல மடங்காகப் பெருக்கும் வழியையும் சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கு ஏதாவது தேவையெனில், அதை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் பழக்குங்கள்.


*கடன்...*


பள்ளிக்கூடத்தில் கடன் வாங்கி கழித்தல் கணக்கு போட்டிருக்கும் பிள்ளைகளுக்கு 10 வயதாகும்போது கடன் என்றால் என்ன, அதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன, நல்ல கடன், கெட்ட கடன் எது, எப்போது கடன் வாங்க வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், வட்டி கட்டாவிட்டால் என்ன நடக்கும் என்கிற விவரங்களை எடுத்துச் சொல்லுங்கள்.


நல்ல கடன் என்பது குடியிருக்க வீடு வாங்க, வீடு கட்ட வாங்கும் வீட்டுக் கடன், தொழில் தொடங்க வாங்கும் வணிகக் கடன் ஆகும் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். அடுத்து, விரும்பத்துக்கான பொருள்களை அதிக வட்டியில் வாங்கும் கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் போன்றவை கெட்ட கடன்கள் என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.


ஒரு பொருளை கடனில் வாங்குவதைவிட பணத்தைச் சேர்த்தபின் வாங்குவது நல்ல பழக்கம், தேவை இல்லாமல் வட்டி கட்ட வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.


பிள்ளைகளுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் பண்டிகைக் காலங்களில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமிக்கும் வழக்கத்தை உருவாக்குங்கள். அப்படிச் சேரும் பணத்தை மூன்று மாதத்துக்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று டெபாசிட் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இப்போதெல்லாம் சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கை சுலபமாக ஆரம்பிக்க முடியும்.


இப்படி பிள்ளைகளுக்கு பண நிர்வாகத்தை சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கு போடும் திறனும் அதிகரிக்கும்.!

சனி, 17 டிசம்பர், 2022

RULES TO TEACH YOUR SON


1. Never shake a man’s hand sitting down.
2. Don’t enter a pool by the stairs.
3. The man at the BBQ Grill is the closest thing to a king.
4. In a negotiation, never make the first offer.
5. Request the late check-out.
6. When entrusted with a secret, keep it.
7. Hold your heroes to a higher standard.
8. Return a borrowed car with a full tank of gas.
9. Play with passion or don’t play at all…
10. When shaking hands, grip firmly and look them in the eye.
11. Don’t let a wishbone grow where a backbone should be.
12. If you need music on the beach, you’re missing the point.
13. Carry two handkerchiefs. The one in your back pocket is for you. The one in your breast pocket is for her.
14. You marry the girl, you marry her family.
15. Be like a duck. Remain calm on the surface and paddle like crazy underneath.
16. Experience the serenity of traveling alone.
17. Never be afraid to ask out the best looking girl in the room.
18. Never turn down a breath mint.
19. A sport coat is worth 1000 words.
20. Try writing your own eulogy. Never stop revising.
21. Thank a veteran. Then make it up to him.
22. Eat lunch with the new kid.
23. After writing an angry email, read it carefully. Then delete it.
24. Ask your mom to play. She won’t let you win.
25. Manners maketh the man.
26. Give credit. Take the blame.
27. Stand up to Bullies. Protect those bullied.
28. Write down your dreams.
29. Take time to snuggle your pets, they love you so much and are always happy to see you. 
30. Be confident and humble at the same time.
31. If ever in doubt, remember whose son you are and REFUSE to just be ordinary!
32. In all things lead by example not explanation.
33. Dress how you want to be addressed
34. BE BLESSED BY BEING A BLESSING

Author Unknown

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மனிதன்_கற்றுக்கொள்ள வேண்டிய_21_பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,

கொக்கிடம் இருந்து இரண்டையும்,

கழுதையிடம் இருந்து மூன்றையும்,

கோழியிடம் இருந்து நான்கையும்,

காக்கையிடம் இருந்து ஐந்தையும்,

நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,

நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,

வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,

தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,

தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,

தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,

யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,

தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,

உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,

நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,

தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

சாணக்கியர்...

வியாழன், 15 டிசம்பர், 2022

நிம்மதியான வாழ்க்கை

எந்தளவு மற்றவர்களை புரிந்து கொள்கிறீர்களோ அந்தளவு கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

உங்களை சுற்றி இருப்பவர்களை நான்கு விதமாக பிரிக்கலாம்,

1. நீங்கள் சந்தோசமாக வாழனும். வெல்ல வேண்டுமென நினைப்பவர்கள்.
2. உங்களை வீழ்த்த வேண்டுமென நினைப்பவர்கள்.
3. நீங்க எப்படி இருந்தா எனக்கென்ன என்று இருப்பவர்கள்.
4.உங்களையே தெரியாதவர்கள்.

இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது, முதலாவது வகையினர் நிறையப்பேர் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம். 

எந்தவொரு தனி மனிதனுக்கும் உண்மையான முதல் வகையினர் 10 பேரைத் தாண்ட முடியாது.

நிறையப் பேர் இருப்பதாக நீங்கள் நம்பினால், நிறைய இரண்டாம் வகையினர் உங்களை ஏமாற்றிமுதல் வகையினர் போல நடித்துக்கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

எந்தளவுக்கு இரண்டாம் வகையினரை உங்களால் ஆரம்பத்திலேயே இனம்காண முடிகிறது அந்தளவு உங்கள் வாழ்ககை நிம்மதியாக நகரும்.

அப்படிப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண முடியும்?
1.உங்களை அளவுக்கு அதிகமாக புகழ்வார்கள்
2.உங்களுக்கு பயன் தருமென நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள்
3. தனக்கு பிரச்சினையில்லை மற்ற ஆட்கள் சொனார்கள் என உங்களைப்பற்றி தவறாக சொல்வார்கள்
4.மற்றவர்களிடம் உங்களைப்பற்றி தவறாக பேசுவார்கள். 

இந்த நான்கில் ஒன்றை  ஒருவர் அளவுக்கதிகமாக செய்கிறார் என்றால், அவரோடு கவனமாக இருங்கள்.

-பேஸ் புக் சாமியார்-

வியாழன், 8 டிசம்பர், 2022

THINGS TO TEACH YOUR SON

1. Never shake a man’s hand sitting down.

2. Don’t enter a pool by the stairs.

3. The man at the BBQ Grill is the closest thing to a king.

4. In a negotiation, never make the first offer.

5. Request the late check-out.

6. When entrusted with a secret, keep it.

7. Hold your heroes to a higher standard.

8. Return a borrowed car with a full tank of gas.

9. Play with passion or don’t play at all…

10. When shaking hands, grip firmly and look them in the eye.

11. Don’t let a wishbone grow where a backbone should be.

12. If you need music on the beach, you’re missing the point.

13. Carry two handkerchiefs. The one in your back pocket is for you. The one in your breast pocket is for her.

14. You marry the girl, you marry her family.

15. Be like a duck. Remain calm on the surface and paddle like crazy underneath.

16. Experience the serenity of traveling alone.

17. Never be afraid to ask out the best looking girl in the room.

18. Never turn down a breath mint.

20. Try writing your own eulogy. Never stop revising.

22. Eat lunch with the new kid.

23. After writing an angry email, read it carefully. Then delete it.

24. Ask your mom to play. She won’t let you win.

25. Manners maketh the man.

26. Give credit. Take the blame.

27. Stand up to Bullies. Protect those bullied.

28. Write down your dreams.

29. Take time to snuggle your pets, they love you so much and are always happy to see you.

30. Be confident and humble at the same time.

31. If ever in doubt, remember whose son you are and REFUSE to just be ordinary!

32. In all things lead by example not explanation.

33. Dress how you want to be addressed

34. BE BLESSED BY BEING A BLESSING

Author Unknown
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" 
– நியாயமான ஒரு கேள்வியை கேட்டார், எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். 
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். 
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. 
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. 
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு 
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 
நாள்ல எப்படி முடிக்க முடியும்? 

ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் 
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க 
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. 
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். 
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க 
வேலை பார்த்துட்டோம். 
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"இதுக்கு அவன் ஒத்துபானா?"
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். 
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. 
இவரது தான் பெரிய தலை. 
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் 
தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் 
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. 
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. 
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை 
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு 
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா 
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே? 
நான் கடைசியா சொன்னேன் பாருங்க... 
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" 
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி 
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? 
அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது 
இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம், 
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? 

புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. 
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, 
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை 
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே 
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. 
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, 
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." 
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். 
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய 
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம 
தான் இருக்கணும்."

"அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க 
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"
"அவனே பயந்து போய், 
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." 

இதுக்கு பேரு "Maintenance and Support". 
இந்த வேலை வருஷ கணக்கா போகும். 
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு 
கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு 
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"

(Copied)

திங்கள், 5 டிசம்பர், 2022

"எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது என் வீட்டிற்கு அருகே நீரோடை இருந்தது. சிறுவயதில் அங்கு சென்று பானையில் நீரெடுத்திருக்கிறேன். வெறும் கையால் அந்த ஓடை நீரை அள்ளிக் குடித்திருக்கிறேன். அங்கே விளையாடும் போது நிறைய தவளை முட்டைகள் இருக்கும். அதைக் கைகளால் தொடும்போது உடைந்து போயிருக்கின்றன. நிறைய தலைப்பிரட்டைகளை அங்கே காண முடியும். இவைதான் என்னுடைய இளமைக்காலம். இன்று ஐம்பது வருடங்கள் கழிந்து விட்டன. அந்த நீரோடை வறண்டு விட்டது. பெண்கள் நீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் இழந்தது எதுவெல்லாம் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிரம்பிய அந்தப் பழைய உலகத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுப்பதே நமக்கு இருக்கும் பெருங்கடமை. தனிமனிதர்கள் செய்யும் ஒரு சிறு விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் கையால் ஒரு குழி தோண்டி, செடி நட்டு, நீருற்றி அதை வளர்க்காதவரை இவ்வுலகத்திற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் அர்த்தம்...." 

-வங்காரி மாத்தாய்
நினைவுதினம்

#தழல்
தோழி ?

என்னை நீ_எதிர்த்து
 பேசாதிருந்திருக்கலாம்
 
எனது ஈகோவைச்
 சீண்டாமலிருந்திருக்கலாம்

கூர்சொல்லால் முகத்திரையைக்
கிழிக்காமல் இருந்திருக்கலாம்

என்சிகெரெட்டு முனையுன்னைச்
சுடாமலிருந்திருக்கலாம்

#முற்போக்கு_கபோதிகள் 10

#தழல்
'தமிழை பிரத்யேகமாக மொழிப்பாடமாக எடுத்து படிக்க வேண்டியதில்லையே.. வீட்டில் நாங்கள் தமிழ்தானே பேசுகிறோம். அதற்குப் பதில் குழந்தைக்கு இன்னொரு மொழி அல்லது ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?’

எனத் தோழர் கேட்டார். பலருக்கு இந்தப் பார்வை இருக்கிறது.  
 
அடிப்படையில் மூன்று கேள்விகள்தான்.

தாய்மொழியினால் என்ன பயன்?

தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன?

குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன?

1. தாய்மொழியினால் என்ன பயன்?

‘ஆலமரம்’ என்ற வார்த்தை சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

விழுதுகள் பரந்த அகல மரம் ஒன்று தோன்றும். கூடவே பறவைகள், சருகுகள், இலைதழைகள் இன்னும் பலவும் தோன்றலாம். அந்த மரத்தை நீங்கள் எங்கோ நேரடியாக பார்த்திருப்பீர்கள். புகைப்படத்தில் பார்த்திருந்தால் உங்கள் மனதில் ஒரு படிமமாக ஆலமரம் உறைந்திருக்காது.

‘Altar' என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

தெரியாதோர் அநேகமாக கூகுளைத் தேடலாம். தெரிந்தோர் ஆங்கிலப் படங்கள் அல்லது புத்தகங்களில் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தை நீங்கள் வாழும் சூழலிலும் உங்களின் பண்பாட்டின் சொற்களிலும் இல்லை. எனவே அதற்கான மனப்படிமம் உங்களுக்கு வராது. கூகுளைத் தேடியிருந்தால் அநேகமாக ‘பலிபீடம்’ அல்லது ‘மணமேடை’ என புரிந்து கொள்வீர்கள். 

சிக்கல் என்ன தெரியுமா?

மணமேடையை பலிபீடமாக குறிப்பிடும் சொல்லே altar என நீங்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புதான் அச்சிக்கல்.

Altar என்ற வார்த்தைக்கான பண்பாட்டுப் பின்னணியும் வாழ்சூழலும் என்னவென யோசித்து அதற்கான contextul அர்த்தத்தை நீங்கள் தேட வேண்டும். அதற்கு தேவை தாய்மொழி! 

Altar என்ற வார்த்தைக்கென ஒரு மனப்படிமம் இருக்குமென்பதை புரிந்து கொள்ள, ‘ஆலமரம்’ என்றதும் மனதில் தோன்றும் ‘மரப் படிமத்தை’ தான் வாழும் சூழலில் முதலில் குழந்தை பார்த்தறிந்திருக்க வேண்டும். 

தாய்மொழியும் தனது பண்பாட்டுச் சூழலறிவும் இல்லாது, contextual thinking திறனை குழந்தைப் பெறவே முடியாது. அதைப் பெறவில்லை எனில் எல்லா மொழிகளும் குழந்தை மேம்போக்காக மட்டுமே தெரிந்திருக்கும். ஆழம் இருக்காது. 

ஆழமில்லையெனில் அறிவு சேராது. அறிவு சேராமல், வளர்ச்சி நேராது.

2. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன?

அடிப்படையில் தமிழ்மொழி தொன்மையான மொழி. குறைந்தபட்சம் 3000 வருடங்கள் பழமையான மொழி என்பதால், அதற்கென மிகச் செறிவான (நல்லதும் கெட்டதுமாக) பண்பாடு உண்டு. அந்த பண்பாட்டுச் செறிவை உள்ளடக்கக் கூடிய வார்த்தைகள் எல்லாவற்றையும் தமிழ் கொண்டிருக்கிறது. 

உதாரணமாக, he lost his life என்றுதான் ஆங்கிலத்தில் சொல்வோம். வாழ்க்கை என்றாலும் life-தான், உயிர் என்றாலும் அங்கு life-தான்.  உயிர் என்கிற வார்த்தையோ அதற்கான படிமமோ சிந்தனைவெளியோ ஆங்கிலத்தில் கிடையாது. 

இறந்தவர்களை நாம் மண்ணுக்குள் இட்டு புதைக்கிறோம். அல்லது தீயில் சுட்டு எரிக்கிறோம். இரண்டு இடங்களுக்கும் தமிழில் இடுகாடு, சுடுகாடு என வார்த்தைகள் உண்டு. மயிரும் முடியும் கூந்தலும் கேசமும் ஒரே விசயம்தான். மயிரை கேவலமாகவும் முடியை நல்லதாகவும் பார்க்கிறோம். இதற்குப் பின் மயிர் என்ற வார்த்தை பேசிய மக்கள் முடி என்ற வார்த்தை பேசிய மக்களால் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கும். 

அன்புக்கும் காதலுக்கும் பாசத்துக்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். Love என பொத்தாம்பொதுவாக நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. I love you, but as a friend என தமிழில் சொல்லவே முடியாது. ஏனெனில் நண்பனுக்கு நட்பு என்கிற உணர்வை தமிழ் ஒதுக்கி வைத்திருக்கிறது.  

இத்தகையச் செறிவு கொண்ட தமிழை கற்கையில் உங்கள் மூளைக்கு என்ன நேருமென யோசித்துப் பாருங்கள். அத்தனை வார்த்தைகளும் அததற்கான நுட்பமான அர்த்தங்களுடன் உங்கள் மூளையில் சேமிக்கப்படும். ஒரே அர்த்தமாக தொனித்தாலும் அந்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் இடையே இருக்கும் நுட்பமான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் திறனான critical thinking உங்களின் மூளையின் செயல்பாட்டில் இருக்கும்.

3. குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன?

சிந்தை வளர்ச்சிதான் குழந்தையின் வளர்ச்சி

சிந்தை வளர்ச்சிக்கு cognitive thinking தேவை. அறிந்து புரிந்து ஏற்கனவே இருக்கும் அனுபவங்களோடு பொருத்திப் பார்த்து பின் அலசி ஆராய்ந்து சரியை தேர்ந்தெடுக்கும் முறையைதான் cognitive thinking என சொல்வார்கள். எளிமையாக பகுத்தறிவு எனக் கூட சொல்லலாம். 

உங்களுக்கு கிடைக்கக் கூடிய அறிவு அடுத்தவரை பாதிக்குமா என சிந்திக்க empathy வேண்டும். அடுத்தவரை பாதித்துவிடக் கூடாது என்பதற்கு compassion வேண்டும். அடுத்தவரை பாதித்தால் அதை உணர்ந்து சரி செய்வதற்கு sympathy வேண்டும். இவை யாவும் ஒரு குழந்தை புரிந்து கொள்ள, அக்குழந்தை வளரும் சூழலில் இருந்து புரிய வைக்க வேண்டும்.  

மாறாக, நமக்கு சம்பந்தமற்ற ஒரு பண்பாட்டுச் சூழலுக்கான விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது குழந்தை நேரே பார்த்து, தொடர்புபடுத்தி, அலசி, ஆராயும் வாய்ப்பு இருக்காது. விளைவாக, ‘மட்டை மனப்பாடமாக’ மட்டுமே ஒரு value-வை அல்லது விழுமியத்தை அது கற்றுக் கொள்ள வேண்டும். 

குழந்தைக்கான cognitive thinking வளராது. சிந்தையும் வளராது. இரண்டும் வளராத குழந்தையால் சாதாரண அலுவலக வேலையைக் கூட முழுமையாக உள்வாங்கி செய்ய முடியாது. அக்குழந்தையின் வாழ்க்கையும் மனமும் மரத்திலிருந்து உதிர்ந்த சருகை போல் தக்கையாகவே மிஞ்சும். 

ஆங்கிலம் உலகை இணைக்கும் மொழிதான். அது நமக்கு தேவையானதுதான். இந்தியாவில் பிற மாநிலங்களில் இணையவும் கூட நமக்கு ஆங்கிலம் அடிப்படைதான். ஆனால் தாய்மொழியற்ற ஆங்கிலம் ஒரு வர்க்க நடவடிக்கையாக மாறுகிறது. 

ஆங்கிலம் வர்க்க மொழியாக இருப்பதால்தான் இரு தமிழர்கள் சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் தன்மை இன்றும் நிலவுகிறது.

ஆங்கிலத்தின் வழியாக உங்கள் குழந்தைக்கு ஒரு வர்க்கத்தின் மீதான பற்றை விதைக்கிறீர்கள். அது வளர்கையில் தான் இயல்பாக இருக்கும் வர்க்கநிலையை மறைக்க முற்படும். பாசாங்கு வாழ்க்கையை மேற்கொள்ளும். தனது வர்க்க நிலையைத் தாண்டிய, பொருந்தாத, படாடோப வாழ்க்கையை, நபர்களை தேர்ந்தெடுக்கும். அது நாளை உங்களையே புறக்கணிப்பதாகக் கூட மாறி விடும். 

ஆங்கிலம் வர்க்க மொழி என்றால், இந்தி ஆதிக்க மொழி! 

தாய்மொழி கற்காமல் இந்தியைக் கற்கும்போது இந்தி மொழி கொண்டிருக்கும் சாதிய மேலாதிக்கம், இந்து மத மேலாதிக்கம், இந்தி மாநில கலாச்சாரங்களின் மேலாதிக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியாக உங்கள் குழந்தை மாறும். 

வேர் அறுத்தால் செடி தளிர்க்காது.

தாய்மொழி மறுத்தால், மனம் துளிர்க்காது.
- தோழர். ராஜசங்கீதன்

#தழல்
எப்போது தான் நடிப்பதை நிறுத்துவாய்
எனக் கேட்கிறாய் !

உன் கேள்விகள் அனைத்தும்
கேட்கப் பட்டு விட்டபோது ..

உன் வார்த்தைகள் யாவும்
வற்றிப் போய் விட்டபோது ..

வெறுத்து வறண்டு நீ
'வாழ'ப் பழகி விட்டபோது ..

உண்மை உன்னுடன்
ஊமையாகி விட்டால்
நடிப்பை நடிப்பெனக் 
காண்பார் யாரோ ~??

#முற்போக்கு_கபோதிகள் 14

#தழல்
உன்னதமான ஒவ்வொரு
வேலையும் முதலில்
முடியாததாகவே தோன்றும்..!
- தோழர் லெனின்




உன்னதமான ஒவ்வொரு
வேலையும் முதலில்
முடியாததாகவே தோன்றும்..!
- தோழர் லெனின்

#நவம்பர்_புரட்சிதினம்
#தழல்
HUSBAND FOR SALE, NO DISCOUNT.  என புதிதாக கடை திறக்கப்பட்டது..

அந்த கடை வாசலில் விதிமுறை போர்டு இருந்தது...

அதில் எழுதியிருந்தது...

1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம்...

2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கிறது... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்...

3.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது...
அப்படியே வெளியேதான் போக முடியும்...

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்...

"பச்... கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன... ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது" 

முதல் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்..."

இது அடிப்படை தகுதின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றாங்க...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்..."

இதுவும் அடிப்படை தகுதி அப்படின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறாங்க...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் வசீகரமானவர்கள்..."

அந்த இளம்பெண் வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"ன்னு நினைச்சு மேல போக முடிவெடுத்தார்...

நாலாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள் மற்றும்
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்..."

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?...

"கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்..." அப்படின்னு முடிவு பண்ணிட்டு இன்னும் மேலே போனார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்...
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்...
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்...
வசீகரமானவர்கள்...
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்... 
மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்...

அவ்ளோ தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியல...

சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே... அங்க என்ன இருக்குன்னு பார்க்காம
எப்படி முடிவு எடுக்குறது...

சரி மேல போயி தான் பார்ப்போம்னு மேலே போறாங்க...

ஆறாவது தளம் அறிக்கை பலகையில்...

"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை... 
வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது...
இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே, உங்களை திருப்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத்தான்...!
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி...!" 

அந்த பெண்ணுக்கு லேசாக தலை சுற்றியது...

"பார்த்து கவனமாக
கீழே படிகளில் இறங்கவும்..." அப்படின்னு படிகட்டில் போட்டிருந்தது...

இந்த கதை நம் அனைவருக்குமே பொருந்தும்...

அந்த கடையின் உரிமையாளர் தான் இறைவன்...

அந்த கடை தான் இந்த உலகம்...

அந்த இளம்பெண் தான் நாம் அனைவரும்...

வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் ஏதாவது ஒரு வகையில் இருக்க தான் செய்கின்றன...

நாம் தான் வசதிகளை மேம்படுத்த அடுத்த அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டே இருக்கிறோம். 
இவ்வாறு முன்னோக்கி செல்வது தான் வளர்ச்சி... 
தவறில்லை...

ஆனால், இப்போது இருக்கும் கட்டத்தில் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்...

அதாவது, எந்த கட்டத்திலும் திருப்தியுடன், மனநிறைவுடன் வாழ வேண்டும்...

அடுத்த கட்டத்திற்கு சென்றால் தான் மனம் திருப்தி அடையும் என்றால், அந்த கட்டத்திற்கு சென்ற பின்னர், இன்னும் மேலே சென்றால் தான் நிறைவடைவதாக மனம் எண்ணும்...

ஆக, கடைசி வரை மனம் நிறைவடையாத நிலை தான் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்குள் வாழ்க்கையும் முடிந்து விடும்...

மனநிறைவுடன் வாழ்ந்தால் எந்த நிலையிலும் சந்தோஷமாக, நிம்மதியாக வாழலாம்...

மனம் நிறைவடையா விட்டால் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் சந்தோஷமும், நிம்மதியும் இருக்காது...

எனவே, நாம் இருக்கும் நிலைகள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்காது...
மனம் நிறைவடைந்தால் தான், நிம்மதி கிடைக்கும், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்...

"மனநிறைவு" இது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் மந்திரம்...

வாழ்க  வளமுடன்...😆

சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா...

முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா...

"தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?"

"அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?"

"எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்..

"பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா"

"அத்தை..! நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்.."

"இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..?

பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். " 

(எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல)

அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க.

அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது... 

"ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்.."

"இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்.."

"எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ. 

அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்...

(போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...)

நேத்து சந்தைக்குப் போனேனா..! அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு. 

பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.."

இப்பெல்லாம்_ஒரு_சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா...

"ஹாய்...!! வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..???? 

(கேட்டுட்டு உடனே) 

எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.." 

(இதுக்கும் மேல, 'இல்லைங்க..நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால் தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?)

"ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க.."

"அப்புறம்... என்ன விஷயம்..? 

(வந்த விஷயத்த சொன்னதும்) 

இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே..."

"இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு. 
அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்.."

"அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், fpல... போட்டோ அப்டேட் பண்றனே..." 

(கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க. 

ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...)

"ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?" 

(அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி 
ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு..
சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...)

"நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும். 

உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு...

"அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல)

"சரிங்க..! டைமாச்சு, நா கிளம்பறேன்.."

"ஆமா..! வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும். இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. 

எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவாங்க...

இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்.."
(Copied) 

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

உலகில் அதிக ஆயுட்காலம் ( life expectancy at birth) உள்ள இடம் ஜப்பானின் ஒகினாவா தீவாகும். இதற்கான காரணங்களை ஜப்பானிய மானுடவியல் உளவியலாளர்கள் முன்வைத்த போது ஒரு முக்கிய காரணம் இகிகாய் அதாவது தமிழில் வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழ்தல் என்ற புராதன ஜப்பானிய மெய்யியல் கோட்பாடுகளை குறிப்பிடுகிறார்கள். எதை நேசிக்கிறாயோ,எதில் உன்னால் திறம்பட செய்ய முடியுமே, எது உன்னை சூழவுள்ள உலகிற்கு தேவையோ, எதன் மூலம் உன்னால் சம்பாத்தியம் பெற முடியுமோ அதையே நீ தொடர்ந்து செய்து கொண்டிரு.
மேற்குறிப்பிட்ட நான்கு பண்புக்கூறுகளையும் ஒரு வெண்வரிப்படம் (Venn diagram) வரைந்து நான்கும் இடைவெட்டும் பரப்பே IKIGAI என்று அழைக்கப்படுகிறது. இகிகாய் ஒரு பூந்துணர் எனில் அதன் இதழ்களாக
வேட்கை(Passion), பணி (Mission), தொழில் (Vocation), நிபுணத்துவம் (Profession) 
மகிழ்ச்சி (Delight)  உற்சாகம் (Excitement) வசதி(Comfortable) திருப்தி(Satisfaction) என்பன விரியும். இதைப் புரிந்து கொண்டார் ஏற்றுக் கொண்டார் ஓய்வின்றி மரணம் வரை உழைத்து கொண்டு இருப்பார்.  நமது மூதாதையர்கள் ஒன்றில் இளவயதில் இறப்பர் இல்லை நூறு வயதிலும் விவசாயம் செய்து உழைத்து வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் வாழ்வில் IKIGAI அவர்களுக்கு தெரியாமலே இருந்து தான் வந்தது. Love what you do and do what you love.

சனி, 3 டிசம்பர், 2022

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

 உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

 அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது. ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
 அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன். அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன். அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான். 

அவனிடம் போய் நான் இன்றைக்கு இங்கே எங்கே தங்க முடியும் என்று கேட்டேன்.

 அதற்கு அவன் இந்த இரவில் அது ரொம்ப சிரமம். ஒரு திருடனுடன் உங்களால் தங்க முடியும் என்றால் நீங்கள் என்னோடு தங்கலாம் என்றான்.

 நான் அவனுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாள் இரவும் இப்போது நான் என்னுடைய வேலைக்கு போகிறேன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போவான்.

 அவன் திரும்பி வந்தவுடன் உனக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அதற்கு அவன் இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்வேன் என்பான். ஒருபோதும் அவன் நம்பிக்கை இழந்ததே கிடையாது. எப்போதும் சந்தோஷமாகவே இருந்தான்.

 நானும் ரொம்ப காலமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? மனது வருத்தப்படும். நம்பிக்கை இழந்து விடுவேன். அப்போதெல்லாம் இந்த திருடனுடைய விடாமுயற்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

என்னுடைய இரண்டாவது குரு ஒரு நாய்.

ஒரு சமயம் எனக்கு ரொம்ப தாகமாக இருந்தது. ஒரு நதியை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் வந்தது. அதற்கும் தாகம். ஓடி வந்து ஆற்றில் பார்த்தது. அதனுடைய நிழல் ஆற்றில் தெரிந்தது. அதை பார்த்து பயந்துவிட்டது. அதாவது தன் சொந்த உருவத்தையே கண்டு பயந்துவிட்டது. அதை பார்த்து குரைத்தது. திரும்பி ஓடியது. ஆனாலும் அதற்கு தாகம் அதிகமாக இருந்ததனால் அது மறுபடியும் திரும்பி வந்தது. இப்படி சில தடவைகள் பண்ணியது. இருந்தாலும் கடைசியில் தண்ணீரில் குதித்தது.
இப்படி குதித்த உடனே அதன் உருவமும் மறைந்து விட்டது. 

இதை பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், எவ்வளவுதான் பயம் இருந்தாலும் கூட ஒருத்தன் தைரியமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போதனை எனக்கு அந்த நாயிடம் இருந்து கிடைத்தது.

 என்னுடைய மூன்றாவது குரு யார் என்றால் அது ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன். அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன். ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா என்று

 ஆமாம் என்றது அந்த குழந்தை.

 சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது. இப்போது எரிகிறது. இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன்.

 அதற்கு அந்த குழந்தை சிரித்தது. இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது. அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் என்னிடம் இருந்து ஆணவம் அழிந்தது.

 நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகி விட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார்  ஞானி. 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.