நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

கடுகளவேனும் முயற்சி வேண்டும்

ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. 
அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. 
அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று 
""இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' 
என்று சந்தேகம் வந்தது.
பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?
இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, 
"இறைவா, 
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது. 
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
""உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை, 
எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' 
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.
ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
அப்போது ஒரு குரல் கேட்டது. 
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
"குழந்தாய் சற்று திரும்பிப் பார். 
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது
''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.
கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , 
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'
இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய், 
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.
திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.
"கடுகளவேனும் முயற்சி வேண்டும். 
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.
அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும் 
ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .
முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை...
🌿🌿🌿🌿🌿🌿🌷
*முயற்சி திருவினையாக்கும்*...

அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட்

அக்காலத்தில் நாம் வாங்கிய அடிகளின் லிஸ்ட்!* 👇

இன்னிக்கு இருக்கும் சின்ன பசங்களுக்கு எங்க காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால், வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆச்சு என்பது தான் இங்க மேட்டர்.

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா, மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால், எவ்வளவு நெஞ்சழுத்தம்னு மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா, நடிக்கிறயான்னு விழும் அடி.

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கர இடத்தில நின்னுட்டு இருந்தா அடி.

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி.

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு விட்டு வந்தா அடி.

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி.

 14. சின்னப் பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.
 
16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி. 

17. காணாதது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

 18. தட்ல போட்டதை முழுக்க சாப்பிடாம இருந்தால் அடி.

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,
 
20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறச்சு பார்த்தா அடி.

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி.

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்க்கார்ந்திருந்தாலும் அடி.

 30. சாப்பிட்ட பின், தட்டை அலம்பலேன்னா அடி.

 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி.

34.நகத்தைக் கடிச்சா அடி.

 34..குளிக்காட்டி ஒரே அடி. 

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல ஒரு அடி.

36. பாத்ரூம் உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா, வெளில வந்தவுடன் அடி.

 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

 38.தெருல போர கார் உரசிட்டு போச்சுன்னா, ஏண்டா கார் கிட்ட போனேன்னு சொல்லி அடி. 

39.  வண்டியில அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும், அஜாக்கிரதைக்கு நாலு அடி.

 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

 43.  பிரெண்ட்ஸ்கிட்டே  இருந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. ...சர்ட்  வாங்கி  போட்டாலும்  அடி

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னு சொன்னா அடி.

45. கடைல choose  செய்து ஷர்ட்டை எடுக்க நேரம் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தியார் சொல்லிக் குடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரீட்சைல எழுதினா அதே வாத்தியார் ”சொந்தமா என்னடா ரீல்   விட்றயா”ன்னு சொல்லி அடிக்கும் அடி.

 47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும்,  நாம கர்ரெக்ட் பதில் எழுதினா,  ”நீ பெரிய பிஸ்த்தாவா”ன்னு சொல்லி வாங்கும்  அடி.

48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா, நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், நம்ம வீட்ல வந்து வாங்கும் அடி.

50. மூணு தோசை /பூரியை தாண்டி இன்னொன்னாலும்  அடி...போதும்னாலும்  அடி,

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல அடி.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.
 
53...பக்கத்து   வீட்டு   பொண்ணெ    பார்த்தா   அடி   
 
*54...காரணமும் தாண்டி, காரணமே இல்லாமல் வாங்கும் அடி. *

*இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம்.  ஆனால், கிட்டத் தட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள், பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில், இவ்வடிகள் வாங்கித்தான் பலர் பெரிய மனுஷனாக உசந்தாங்கன்னு சொல்ல முடியுமோ இல்லியோ,*எங்களில் பலருக்கு இந்த இளமையில் வாங்கிய அடிகள், வாழ்வில்  முன்னேற உதவின என உறுதியாக சொல்ல முடியும்...பெருமையாகவும்   சொல்ல   முடியும்*

தேவதைகளும் சாத்தான்களும்ஒன்றே

பெண்கள்....💗

1.எவ்வளவு கொஞ்சி 
எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவார்கள்.
ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டார்கள்.

2.எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ 
அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும்.

3.பார்க்கும் வரை தான் அப்படி பார்த்துக்கொள்வார்கள்.
பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தால் 'எவரையும்' பார்க்கமாட்டார்கள்.

4.சில மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி 
இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் முடியும்..
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்தில் செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்..

5.தன்மான திமிரில் எவரையும் சாராமல் 
தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் வாழ முடியும்.
எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.

6.கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை
அறிமுகபடுத்தியவளும் அவள்கள் தான்.
ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்கள்தான்.

7.எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள்கள்தான்.
அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும்
தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் அவள்கள்தான்

8.இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்கள்தான்.
எதுவும் மறந்து போகாது என 
அனத்தியவளும் அவள்கள்தான்.

9.அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு 
உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்கள்தான்.
அதே விஷயம் தனக்கென்று வரும் போது 
தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்கள்தான்.

10.தலைவலியை பிரளயம் போலவும் 
உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் அவள்களால் மட்டுமே சாத்தியம்.

11.தேவதைகளும் 
சாத்தான்களும்
ஒன்றே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் செயல்களை பொறுத்தே
அவர்களின் அவதாரம்..

ஒரு பெரிய ஆலமரம் கீழே எந்த செடியும் வளராது

ஒரு பெரிய ஆலமரம் கீழே எந்த செடியும் வளராது. சிவாஜி மகன் ராம்குமார் குரல் அப்படியே சிவாஜி குரல் போல் இருக்கும். ஆனால் படிக்காத சிவாஜி பேசிய வசனங்கள், Convent School படித்த ராம்குமார் பேசவில்லை!

MSV மகன் வரவில்லை, இளையராஜா வந்தார். இளையராஜா மகன் கார்த்திக் ராஜா நல்ல Talent. ஆனால் AR ரெஹ்மான் வந்தார். நாளை AR ரெஹ்மான் மகன் மகள் வராமல் வேறு ஒருவர் வருவார்!

தந்தை மிக பெரிய மனிதராக இருந்தால், மகன் அவரை மிஞ்சுவது என்பது இந்த உலகில், வரலாற்றில் எங்கும் நடந்தது இல்லை.

எனக்கு தெரிந்து ஒரே ஒரு விதி விலக்கு, மாமன்னர் ராஜ ராஜ சோழன். மகன் ராஜேந்திர சோழன், தந்தையை விட பெரிய சாம்ராஜ்யம் கண்டார்!

எல்லோரும் ராஜேந்திர சோழனாக முடியாது, என்பதுதான் உண்மை!

இளையராஜா இவ்வளவு பெரிய ஆளா ஆனதற்கு, அவர் கஷ்டப்பட்டுதும் காரணம். சிவாஜியும் எம்ஜிஆரும் பெரிய ஆளாக மாறியதற்கு, அவர்கள் சாப்பாடுக்கே கஷ்டப்பட்டதும் ஒரு காரணம்.

அவர்கள் பட்ட கஷ்டத்தை, அவர்களின் மகன்கள் படாமல் தந்தைகள் பார்த்துக்கொண்டார்கள். அதுதான் அவர்கள் செய்த தவறு!

இளையராஜா சிவாஜி கணேசன் போன்றவர்கள், வரலாற்றில் இடம் பிடிப்பதற்கு காரணம் திறமை உழைப்பு மட்டுமல்ல, அவர்கள் பட்ட கஷ்டங்களும் ஒரு காரணம் என்று சொல்வேன்.

எனக்கு கஷ்டங்களைப் பார்க்க பார்க்க தான், மன உறுதி அதிகமானது. நான் செல்லக் குழந்தையாக என் தாயின் மடியில் இருந்த வரை, எனக்கு கஷ்டம் தெரியவில்லை. இப்போது நான், கஷ்டங்களை பார்த்தத பின், என் துணிகளை நானே சலவை செய்கிறேன், சமையல் செய்யக் கற்றுக் கொண்டேன், எல்லா இடங்களுக்கும் நடக்கிறேன், சைக்கிள் ஓட்டுகிறேன். கிட்டத்தட்ட ஒரு 5000 ரூபாய் ஒரு மாதம் மிச்சம்!

ஆனால், திரைத்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பாக அதிகம் கஷ்டத்தை பார்த்த, சிவாஜி போன்றவர்கள், தங்கள் பட்ட கஷ்டத்தை தங்கள் மகன்கள் படக்கூடாது என்று, நினைத்தது, அவர்களை ஒரு Mediacore மனிதர்களாக மாற்றி விட்டது.

மார்வாடி சமூகத்தில் ஒரு வழக்கம் உண்டு. பணக்காரத் தந்தை தன் மகனை, இன்னொரு பணக்கார மார்வாடி இடம், சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்புவார். ஒரு இரண்டு மூன்று வருடம், கடுமையான பயிற்சி! மகன் கஷ்டங்களை எல்லாம் பார்த்த பிறகு கடையை ஒப்படைப்பார்!

திருபாய் அம்பானி பட்ட கஷ்டத்தை, அவர் மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி பார்க்கவில்லை. சத்ரபதி சிவாஜி மகன் சிவாஜி போல. முகலாய மன்னர்களில் மிகப் பெரிய சாம்ராஜ்யம் வைத்திருந்தவர் அவுரங்கசீப்! அவர் மகன்கள் யாராலும், முகலாய சாம்ராஜ்யத்தை காப்பாற்ற முடியவில்லை.

சுருங்கச் சொன்னால், Comfort Zone னை விட்டு காலம், அல்லது கடவுள் சிவாஜி மற்றும் இளையராஜா போன்றவர்களை, வெளியே வைத்தது, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியது. அவர்களது பிள்ளைகள், Comfort Zone னை விட்டு வெளியே வரவே இல்லை.

Nepotism என்னும் வாரிசு வளர்க்கும் மட்டமான செயல், இந்தியாவில் அரசியல் மட்டும்தான் உண்டு. திரைத் துறையைப் பொருத்தவரை, திறமையற்ற தன் பிள்ளைகளை கொண்டு வருவது என்பது, ஹிந்தியில் பாலிவுட்டில் மட்டும்தான் உண்டு.

ஆனால் எஸ்ஏ சந்திரசேகரன், மற்றும் மணிரத்னம் தமிழ்நாட்டில், குறிப்பாக திரைத்துறையில், ஜனநாயகத்தைக் கொன்று, வாரிசுகளை கொண்டு வந்தார்கள்.தவறு, திணித்தார்கள். காலப்போக்கில் மக்கள் தளபதி என்றும், சின்ன தளபதி என்றும் பணக்கார பிள்ளைகளை ஏற்றுக்கொண்டர்கள்.

மணி ரத்னம், முத்துராமன் சிவாஜி பிள்ளை பிரபு கார்த்திக்கை அக்னிநட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனா, மலையாள நடிகர் மம்முட்டி மகன் தேடிப்பிடித்து தமிழ் படத்தில் நடிக்க வைத்தார். பிற்பாடு கார்த்திக் மகன், ராதா மகள் என்று பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் அவர் படத்தில் நடிக்க முடியும். நாளை ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்த மகளை கூட மணிரத்னம் தமிழ் படத்தில் கதாநாயகி ஆக்குவார். ஆனால் ஒரு சாதாரண தமிழ் பெண்ணை நடிக்க வைக்க மாட்டார்!

இளையராஜா, தேவையில்லாமல் மணிரத்னத்தை பகைத்துக் கொண்டார். இல்லாவிட்டால், மணிரத்னம் இளையராஜா மகன்களை, ஏ ஆர் ரஹ்மானுக்கு பதிலாக, ரோஜா படத்தில் இசையமைப்பாளராக ஆக்கியிருப்பார்!

என்ன இருந்தாலும், ஏ ஆர் ரகுமான், வேறொரு வழியில், இளையராஜாவை மிஞ்ச வந்திருப்பார். He is destined to success. மணிரத்னம் வெறும் கருவி. மணிரத்னம் கொண்டு வந்த ஒரே, சாதாரண மனிதர் ஏ ஆர் ரஹ்மான். ஆனால் அவர் தந்தையும் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
*கடைசியாக எப்போது கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்தீர்கள் ?*

*இதுவரையில்லையென்றால் ? முதலில் தரையில் 15 நிமிடம் உட்காருங்கள் !!* 

*இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் ? கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது !!*. 

*லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி ! உட்கார முயலுங்கள் !!*, 

*இப்படி உட்கார்வதால் ? முதுகை வளைக்க முடியாது முதுகு நேராகத்தான் இருக்கும் !!*.

*இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் ! எழுந்தால் ? முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும் !!*

*நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான் !!*.  

*நாற்காலி ! சோபாவில் அமர்வதன் தீமைகள்*.

*இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை !!* 

*நம் பின் புறத்தையும் ! தொடைகளையும் ! நாற்காலி தாங்கிக்கொள்கிறது ! அதனால் ? முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை !!* 

*இதனால் முதுகுத்தண்டு பலவீனமாகி ! முதுகுவலி வருகிறது !!*

*மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய ? கீழே உட்காருவது கிடையாது !!*. 

*இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான் !!* 

*இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர ? நிற்கப்போவது கிடையாது !!*

*ஜெரென்டாலஜி ! எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள் !!* 

*ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது ! கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் ! தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!* 

*தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி ! அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ ? இருவரோ ? வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!*

*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*

*கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!*

*ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு ! இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு !!* 

*இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு ! அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் ? தெரிந்த விஷயம் !!* 

*பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க ! அதிகரிக்க ! மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான் !!*

*கீழே சம்மணம் போட்டு உட்காருவது ? யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது !!*

*இந்தியா ! சீனா ! ஜப்பான் ! என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் ? சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள் !!* 

*செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் ? வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான் !!*

*கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ? ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா ! சேர்களை ! வாங்கி முதுகுவலி ! மூட்டுவலியை ! விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம் !!*

*சோபா ! சேரில் ! நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் ? முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு !!*

*அடுத்து பின்புறவலி ! காரணம் ? சோபாவில் உட்காருவதால் ? பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது ! பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் ? முதுகுவலி ! மூட்டுவலி ! என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் !!*

*கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் ? வயதானவர்கள் கீழே விழுந்து கையை ! காலை ! முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள் !!* 

*காரணம் ? அவர்கள் வாழ்வதே தரையில் தான் !!* 

*கீழே படுத்து ! உட்கார்ந்து ! எழும் ! அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் ! எலும்புகளும் ! அத்தனை வலுவாகி விடுகின்றன !!*

 *ஆனால் ? சோபா ! மெத்தையில் படுத்து ! பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு ? வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் ! கீழே விழுவதுதான் !!*

*ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன ! என சொல்லுகின்றன ஆய்வுகள் !!* 

*சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும் ? புழங்குவதும் ? நம் ஆயுளை கூட்டி ! முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி ! பின்புறத்தையும் ! முதுகுத் தண்டையும் ! மூட்டையும் ! வலுவாக்குகின்றன !!*

*அதனால் ! இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை ! எனில் ? இனி உட்கார்ந்து பழங்குங்கள் !!* 

*அப்படி உட்கார்கையில் ? முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் ? அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள் !!*

*இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி ! போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும் !!*

*சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!*

உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்

50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?**என்று கேட்கிறார்  ஒருவர்......*

*அவர் அனுப்பிய பதில்........

1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை,  என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.

2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.

3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.

4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம். 

5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை  அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.

6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன். எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல.  எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.

7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது,  பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்

8)என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.

9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.

10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.

11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.

12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.

13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.

14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்...........✍️

சனி, 29 அக்டோபர், 2022

ஒன்று இன்னொன்றை ஞாபகப்படுத்துவதென்பது இப்படித்தான் நிகழ்கின்றது.



-----------

# The Lunch Box - Movie (Hindi)

"கடிதங்கள் மூலமாகவே பேசிக்கொண்டிருந்த நாம் சந்திக்க முடிவெடுத்து, நீ எனக்காக ரெஸ்டாரண்ட்டில் காத்திருந்த நேற்றைய அதிகாலையில்தான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது இளா. உன்னைப் பார்ப்பதற்காக கிளம்பிக்கொண்டிருந்தபோது பாத்ரூமில் எதையோ மறந்துவைத்திருந்தது நினைவிற்கு வந்து எடுக்கச்சென்றேன். அங்கு என் தாத்தாவின் வாசனையை என்னால் உணரமுடிந்தது. என் தாத்தா உயிரோடு இருந்தபோது, அவர் குளித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் இந்த வாசனை பாத்ரூமில் உலாவும். பல வருடத்திற்குப்பின் நேற்று அந்த வாசனை மீண்டும் எழும்பியது. என் தாத்தாதான் மறுபடியும் வந்துவிட்டாரோ என்று குழம்பியபோதுதான் எனக்கு அது புரிந்தது இளா. அது என் தாத்தாவிலிருந்து அல்ல, என்னிடமிருந்து பரவிய வாசனை, வயது முதிர்ந்தவர்களின் மீது எழும்பும் அதே வாசனை. ஆம், நான் முதியவனாகியிருக்கிறேன் இளா. அந்த அதிகாலையில், அல்லது அதற்கு முந்தைய ஒரு அதிகாலையில்தான் எனக்கு வயதாகிவிட்டிருக்கிறது. வயதான ஒருவனாகத்தான் உன்னை முதன்முதலாக சந்திப்பதற்காக அந்த ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தேன், உன் அருகில், உன் எதிரில் உட்கார நினைத்து முடியாமல், தள்ளிநின்று யாரோ ஒருவனாக வெகுநேரம் உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன். Oh God! நீ அவ்வளவு அழகாக இருந்தாய். அவ்வளவு இளமையாக, இன்னும் கனவுகள் காண்கிறவளாக இருந்தாய். உன் கனவுகளுக்குள் என்னை அனுமதிப்பவளாய் இருந்திருக்கிறாய் இளா, Thank you for that"

---------

# 'அஸீஸ் பே சம்பவம்' - அய்ஃபர் டுன்ஷ்
(தமிழில் சுகுமாரன்)

“எழுந்திருப்பதற்காக நாற்காலியின் கையைப் பற்றியபோது தன்னுடைய கைகளைப் பார்த்தான் அஸீஸ் பே. அவனுடைய கைகள்... அந்தக் கைகள் அவனுடைய அப்பாவின் கைகளைப்போலவே இருந்தன. அவர்களுடைய திருமணத்தின்போது இந்த வீட்டின் அறைக்குள் மகிழ்ச்சியற்ற தோற்றத்துடன் அலைந்து கொண்டிருந்த மனிதன் அவனல்ல, அவனுடைய அப்பா என்பதைத் திடீரென்று உணர்ந்து திடுக்கிட்டான். அதை உணராமலேயே அவன் அப்பாவாக மாறியிருந்தான். அவனுடைய அப்பா தன் மனத்தை மனைவியிடம் வெளிக்காட்டியதில்லை. வீட்டுக்குள்ளே இருப்பதைவிட வீட்டுக்கு வெளியிலிருக்கும் வாழ்க்கைதான் மிகவும் முக்கியமானது என்று பார்த்திருந்தார். அவனுடைய அப்பாவின் முகம் நிரந்தரமாகச் சிடுசிடுத்தது, அவர் குரல் எப்போதும் உரக்கக் கடிந்துகொள்ளத் தயாராக இருந்தது. அவன் தன் முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தான். அதே முன்மண்டை வழுக்கை, முரட்டுத் தோற்றம். கூர்ந்த பார்வை, அவன் கையைச் சிகையருகே கொண்டு வந்தான். கண்ணாடியில் பிரதிபலித்த அந்தக் கையசைவு மறுபடியும் அப்பாவுடையதுதான். முகத்துக்கு நேராக கதவை அறைந்து சாத்தி அவன் விட்டுப்போன அந்த மனிதர் அவனுக்குள்ளே புகுந்திருக்கிறார். வருடக்கணக்காக அங்கேயே மௌனமாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவைப்போன்றே தன் மனைவியும் வாடிய முகத்துடன் வீட்டிற்குள் உலாவுவதை நினைத்துப்பார்த்தான். தன்னால் மன்னிக்க முடியாத அந்த மனிதரின் தொடர்ச்சியாக இருப்பது அவனை வருத்தியது. தவறுகளைச் சரி என்று பராமரிப்பதில் வாழ்க்கையைச் செலவிட்ட ஒருவரின் மலிவான நகல் அவன், ஆம்! அவன் இருமடங்கு சோர்ந்துபோனான்.”

--------

# 'சிறிதளவு இறைச்சி' - ஜாக் லண்டன்
(தமிழில் ராஜேந்திரன்)

அங்கு நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு ஒரே விதிமுறைதான், இளைஞர்கள் முதியவர்களுடன் சண்டையிட வேண்டும். அதாவது அனுபவமுள்ளவர்களும் புதியவர்களும் மோதவேண்டும். டாம்கிங் இளைஞராக இருந்தபோது இதேதான் நடந்திருந்தது. அதாவது அவர், தன்னைவிட முதியவரான ஸ்டவ்ஷரை குத்துச்சண்டையில் தோற்கடித்திருந்தார். தோல்வியடைந்த ஸ்டவ்ஷர், உடைமாற்றும் அறையில் முகம்பொத்தி அழுதுகொண்டிருந்தது இன்னமும் டாம்கிங்கிற்கு நினைவிலிருக்கிறது. இப்போது, முதியவரான டாம்கிங் இளைஞரான சாண்டலுடன் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார்.

”எப்போதுமே இந்தக் குத்துச்சண்டை ஆட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றனர். கயிற்றின் ஊடாகப் பாய்ந்து வந்து அவர்கள் சவால் விடுகின்றனர். அவர்களுடன் மோதும் வயதானவர்கள் எப்போதும் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கின்றனர். வயது முதிர்ந்தவர்களின் உடல் மீதேறி இளைஞர்கள் வெற்றி பெறுகின்றனர். மேலும் மேலும் இளைஞர்கள் வந்த வண்ணமே இருக்கின்றனர். தடுக்க இயலாதபடி இளமை, தீராத வேட்கையுடன் வயதானவர்களை வீழ்த்துகிறது. பின் அவர்களுக்கும் வயது முதிர்ந்த பின்னர், அதே வீழ்ச்சிக்குரிய சரிவுப் பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் பின்னேயும் முடிவேயற்று புத்துயிர்ப்போடு இளமை அழுத்தமாக நெருக்கியபடியே முன்னேறுகிறது. புதிய குழந்தைகள் வளர்ந்துத் தாபமுற்று முதிர்ந்தவர்களை புறந்தள்ளுகிறது. அவர்களின் பின்னே மேலும் புதிய குழந்தைகள். இவ்வாறாகக் காலத்தின் இறுதி வரை ஓயாமல் நிகழ்கிறது. வயதான ஸ்டவ்ஷரை வீழ்த்தியது அவர் நினைவுக்கு வந்தது. ரஷ் கட்டர்ஸ் பே என்னுமிடத்தில் பதினெட்டாவது சுற்றில் அவர் வீழ்ந்தார். பின் ஒரு குழந்தையைப் போல மாற்றுடை அணியும் அறையில் அழுது கொண்டிருந்தார். ஒருவேளை அவர் வீட்டுவாடகை செலுத்த வேண்டிய தொகை பாக்கி இருந்திருக்கலாம். ஒருக்கால் வீட்டில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்திருக்கலாம். அநேகமாக சண்டை நடந்த அதே இரவில் சிறிதளவு இறைச்சிக்காகப் பசியோடு ஏங்கியிருக்கவும் கூடும். ஆயினும் ஸ்டவ்ஷர் போட்டியில் பங்கேற்றார். அதன் காரணமாக நம்ப முடியாத தண்டனையைப் பெற்றார். அதே பாதையைத் தானும் கடந்து வந்திருப்பதால் இப்போது தெளிவாகப் புரிகிறது. எனவே ஸ்டவ்ஷர் மாற்றுடை அறையில் அழுததில் வியப்பேதுமில்லை."

-------

வாழ்க்கை தன் வட்டப்பாதையை ஒருபோதும் மாற்றிக்கொள்வதேயில்லை. நமக்கு முந்தையவர்களை நோக்கி நாம் பயணம் செய்யும் அதே வேளையில் தான், நம்முடைய வெற்றிடமும் நிரப்பப்பட்டுக்கொண்டே வருகின்றது. 

ஆம்! இங்கு ஒன்று இன்னொன்றை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.

ஒரு நண்பராக இருப்பது எப்படி?



‘உன்னை அழைப்பதற்குச் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. நீ கேட்கும் எதுவும் கிடைக்கும். உன் நண்பனைத் தவிர! வா சிசரோ’ என்று ஒரு தேவதை வந்து அழைத்தால், கையெடுத்து வணங்கிவிட்டுச் சொல்வேன். மாட்டேன். நீ வேண்டுமானால் அதைச் சொர்க்கம் என்று அழைக்கலாம். என் நண்பன் இல்லாத ஓரிடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்? அங்கே நான் ஏன் வரவேண்டும்?

‘உன்னை அழைப்பதற்கு நரகத்திலிருந்து வருகிறேன். அங்கே உலகின் அத்தனை பயங்கரங்களும் இருக்கின்றன. நீ தப்பவே முடியாது. உன் நண்பன் அட்டிகஸும் அங்கேதான் இருக்கிறான். வா என்னோடு’ என்று ஒரு பூதம் வந்து அழைத்தால், இதோ என்று கையோடு கிளம்பிவிடுவேன். என் அட்டிகஸ் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்? அங்கே எப்படிப் பயங்கரங்கள் இருக்கும்? ஒருவேளை நிஜமாகவே அது ஒரு கொடூரமான இடம் என்றால், என் நண்பனை அங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி இங்கே சுகமாக வாழ முடியும்?

பாவம், ரோமாபுரியின் தத்துவஞானி கொஞ்சம் உணர்வுவயப்படுகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வதில் கொஞ்சம்கூட மிகையே கிடையாது. நான், என் வீடு, என் குடும்பம் என்று சுருங்கிக் கிடந்த என்னைப் பிடித்து வெளியில் இழுத்து இதோ பார் என்று பரந்து விரிந்த உலகைக் காட்டியவன் அட்டிகஸ். கண்களோடுதான் பிறந்தேன். ஒளி அவன் கொடுத்தது. இதயத்தோடுதான் பிறந்தேன். துடிப்பு அவன் வழங்கியது. நட்பின் உண்மையான பொருள் என்ன, அது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை அவனிடமிருந்தே கற்றேன்.

ஒரு நல்ல நண்பனால் உங்கள் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று பார்க்க முடியும். உங்களுக்குள் நிறைந்திருக்கும் நல்லதையும் கெட்டதையும் கண்டுபிடித்து இது நல்லது, இது கெட்டது என்று தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும். நல்லதை மேலும் மேலும் வளர்க்கவும் கெட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும் அவன் உங்களுக்கு உதவுவான். இவன் என் வாழ்க்கைக்குள் நுழைந்தான். அதன் பின் எல்லாமே மாறிவிட்டது என்று அவனைக் கைகாட்டி நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.

நான் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதை மட்டுமல்ல; எதையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லையோ அதையும் என் நண்பன் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இதைச் சொன்னால் நான் கோபப்படுவேனோ, அப்படிச் சொன்னால் நான் வருந்துவேனோ என்றெல்லாம் தயங்க மாட்டான்.

அட்டிகஸ் நீ என்னை அதிகம் புகழ்ந்ததில்லையே, ஏன்? என்னுடைய மாபெரும் சாதனைகளைக்கூட ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுகிறாயே, ஏன் என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவன் என் தோளில் கை போட்டுப் புன்னகைத்தான். ‘நீ மேலே ஏற, ஏற கைதட்டி மகிழ்வதற்கும், இன்னும் இன்னும் மேலே போ என்று ஆர்ப்பரிப்பதற்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தக் கூச்சலில் என் சிசரோவின் இதயத்தை அடைத்துவிடக் கூடாது! தவறாக ஓரடிகூட எடுத்து வைத்துவிடக் கூடாதே என்று பதைபதைப்போடு பார்ப்பதற்கு நான் ஒருவன்தான் இருக்கிறேன்! உன் புகழ், சாதனை, பெருமிதம் எதுவும் உன்னைவிட முக்கியமில்லை எனக்கு’ என்றான் அட்டிகஸ்.

ஒருவருக்கு ஓர் அட்டிகஸ் போதுமா என்று கேட்டால் ஒரு தோட்டத்தில் ஒரு செடி போதுமா என்று கேட்பேன். ஆரம்பத்தில் என் வகுப்பு, என் பள்ளி, என் வீதி, என் மதம் என்றுதான் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் மட்டும் போதாது என்றே சொல்வேன். உங்கள் நம்பிக்கை, உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, உங்கள் நிலம், உங்கள் ஆர்வம் அனைத்தையும் கடந்து புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள்.

சமவயது நண்பர்கள் மட்டும் போதாது. மூத்தவர்களோடும் இளையவர்களோடும் பழகுங்கள். நீங்கள் ஆண் என்றால் பெண் நண்பர்களையும் நீங்கள் பெண் என்றால் ஆண் நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை விரிவடைவதை, சிந்தனை வளம் பெறுவதை, உள்ளம் வலுவடைவதை உணர்வீர்கள்.
நீங்கள் கலங்கி நிற்கும்போது உங்கள் நண்பரின் கரம் உங்கள் தோள்மீது படரும். நீங்கள் அஞ்சி நிற்கும்போது உங்கள் நண்பர் உங்கள் கரங்களை உறுதியோடு பற்றிக்கொண்டு உங்களோடு சேர்ந்து நடப்பார். உங்கள் பாதையில் இருள் மூடிக்கிடக்கும்போது அவர் மெழுகுவத்தியோடு தோன்றுவார்.

உங்கள் எதிரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை நீங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அவசரமே வேண்டாம், பேசிப் பழகி, பொறுமையாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான அட்டிகஸை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் ஓர் அட்டிகஸாக மாறவேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களைச் செழுமைப்படுத்தியதுபோல் நீங்கள் இன்னொருவரைச் செழுமைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களை நிறைவு செய்ததுபோல் நீங்கள் இன்னொருவரைக் கண்டறிந்து அவர் குறைபாடுகளைப் போக்கி, அவரை நிறைவு செய்ய வேண்டும்.

நிறைவான மனிதன். நிறைவான வாழ்க்கை. நிறைவான உலகம். இந்த மாயத்தை நட்பு தவிர வேறு எதனாலும் நிகழ்த்த முடியாது.

மருதன்
மாய உலகம், மாயாபஜார்

வெள்ளி, 28 அக்டோபர், 2022

யாரிடம் கவனமாய் இருக்க வேண்டும்?



• புதிய ஊரில், புதிய மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

• யாரையும் ஏமாற்றி பிழைத்தவன். இப்பொழுது நான் நல்லவன் என்று அவனே சொல்லிக் கொள்பவன்.

• அவனிடம் சொத்து சுகம் இருக்கிறது. நல்லவன் என்று யாரையும் நம்பி விடாதீர்கள். சாதாரணமானவர்கள் ஏமாற்றுபவர்கள் போலவே சொத்து சுகம் இருப்பவனும் ஏமாற்றுக்கின்றான்.

• அரசியலில் இருப்பவன், போலீஸ், கோர்ட், வக்கீல் போன்றவற்றிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பவர்களுடன் நமக்கு தொடர்பு இருக்கக் கூடாது. எந்த சிறிய பிரச்சினைக்கும் போலீஸ் வரை இழுத்துச் சென்று பெரிதாக்கி விடுவார்கள்.

• மிகப் பெரிய பணக்காரனுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள கூடாது (வியாபாரம் கொடுக்கல் வாங்கல் விதிவிலக்கு)

• "உனக்கென்ன பெரிய ஆள்" என்று சொல்பவனிடம் கவனமாக இருக்க வேண்டும். காசு கொடுத்தால் வராது. "இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா," என்பான்.

• நல்லவர்கள், ஆனாலும் அடிமுட்டாளாக இருப்பார்கள். திருடர்களை விட முட்டாள்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் முட்டாள்தனமாகச் செய்வதற்கும் நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

• நேரிலேயே பார்த்து பழகாமல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மட்டும் பழகியவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

• மற்றபடி நாம் அருகில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஒரு வேலை சொன்னால், அதை சரியாக அவர்கள் செய்து விட்டார்களா என்று பாருங்கள்.

• வெளி மாநில, வெளியூர் மனிதனுக்கு உன் மேலோ, உங்கள் ஊரின் மேலோ எந்த விதமான அன்போ பாசமோ இருக்காது. அவர்களை முழுமையாக நம்பாதீர்கள்.

• அளவுக்கு மிஞ்சி செலவு செய்பவன். என்றாவது நம் தலையில் கை வைப்பான்.

• புதிய வேலைக்காரன், புதிய வேலைக்காரி.

• மற்றபடி நம்மை நாம் என்னென்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்று கவனித்துக் கொண்டே இருக்கும் வேலைக்காரனிடம் கவனம் தேவை.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

🌐 காட்டிலிருந்து 🐩 புலி ஒன்று வழி தவறி ஒரு 🏢 கார்ப்பரேட் கம்பெனியின் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது. 

😿 பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. 

👉 மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு 🍜 பசி எடுத்தது.

👉 நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.

அவர், அந்த நிறுவனத்தின்
👔 அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். 

👆 அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை.

✌ இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.

👆 அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர். 
👆 அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😄😃😀). 

👉 இதனால் குளிர்விட்டுப் போன புலி,
😤 நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

👉 அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு 👳  நபரை அடித்துக் கொன்றது.

அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.

அலுவலக ஊழியர்களுக்கு ☕ காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.

🕚 சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது.

⏰ நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். 

❎ புலி பிடிபடுகிறது ❎

          📝 பாடம் 📝

👆 உங்கள் மீதான
🙌 மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் 👔 பதவியோ,
💰 வசதி வாய்ப்போ அல்ல.

👆 நீங்கள்
👉 👈 மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...

 நான் படித்ததில்
    மனதில் பதிந்தது..

திங்கள், 24 அக்டோபர், 2022

அணுகுமுறைஎன்றால் என்ன?

அணுகுமுறை

என்றால் என்ன?

ஒரு விளம்பரம்.குறும்படம்.

பத்து செகண்ட்தான்.

ஒரு பெண் மாடல் மேடையில்

நடந்து வருகிறாள்.

மிகவும் அழகு. பொம்மை போல.

அவள் தான் வெற்றி பெறுவாள்

என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

துரதிருஷ்டவசமாக,பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள்.

மொத்த பார்வையாளர்களும்

உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள்.

அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது.

ஒரே ஒரு செகண்ட்தான்.

தன் கையை தானே மகிழ்ச்சியாக

தட்டிக் கொண்டாள்,,

மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள்.

பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு.

இது தான் ஒரு பிரச்னை வரும் போது

நம் அணுகுமுறை.

கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே விடாமுயற்சி.

சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது.

அப்பா இறந்து இரண்டு நாள்தான்.

அஸ்தி கூட கரைக்கவில்லை.

ஆட வேண்டிய நிர்ப்பந்தம்.

சென்றவர் சதம் அடித்தார். செஞ்சுரி அடித்த பிறகு, மெல்ல ஹெல்மெட்டை கழற்றி விட்டு, வானத்தை நோக்கி கண்ணீர் மல்க பேட்டை நீட்டினார்.

தந்தைக்கு சமர்ப்பணம். உண்மையான அஞ்சலி.

எந்த இடர் வரினும் இலக்கு நோக்கி ஓட வேண்டும் என்ற அணுகுமுறை நிச்சயம் வெல்லும்.‌.!!

புதன், 19 அக்டோபர், 2022

ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்

கொல்லும் சொல்லை  பேசுவதால் எத்தனை எத்தனை காயங்கள் கசப்புகள் ஏற்படுகின்றன.

கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.  

அது அவர்கள் குணமா அல்லது அவர்கள் இயல்பே  அதுதானா என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம். 

அவமானத்தைச் சிலர் தாங்கிக்கொள்வார்கள் பலரால் அது முடிவதில்லை.

வாழ வழி இல்லையே எனத்  தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று மனம் உடைந்து தற்கொலை  செய்பவர்கள்தான் அதிகம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

 அவமானம்  என்பது  மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். எமது  வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.  இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள். அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள். 

எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் நமக்கு எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை. எமக்கு அருகில் இருக்கின்றவர்கள் தான் எம்மை அதிகம் அவமானப்படுத்துவார்கள் 

அவமானங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு  உரம், 

அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம்  கற்றுக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது. 

அவமானங்களைத் தன்மானத்தோடு எதிர்கொள்வதே வெகுமானம்தான்

புறம் பேசுதல் (Gossip).

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்சினைகள் மறைந்து விடும் - ரொனால்ட் ரீகன்

புறம் பேசுதல் (Gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

புறம் பேசுதல் காரணங்களில் ஒன்று பொறாமை, மற்றொன்று  முக்கியத்துவ உணர்வு இழக்கப்படுவது

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். அவ்வாறன நிலை மாறும் போது மற்றவர்கள் குறித்து புறம் பேசுகின்றோம்.

புறம் பேசுதல் என்பது ஒருவரைப் பற்றி தவறாக Negative வாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் பேசுவது . ஒருவர் இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுகிறார் என்னும்போதே அதன் உண்மைத்துவம் கேள்விக் குறியதாகி விடுறது. அத்துடன் சொல்பவரின் நம்பகத் தன்மையும் இடறுகிறது.

உண்மையில் புறம் பேசு பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள்.

மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசு வார்கள். புறம் பேசப்படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட் பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும்.

குறைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை எனும்போது, யார் ஒருவரிடமும் என்ன தவறு இருக்கிறது என்று பார்க்க முனையும் போது நிச்சயமாக ஏதாவது ஒரு தவறுதான் தெரிய வரும். அல்லது ஏதாவது ஒன்றைத் தவறாக எடுக்கத் தோன்றும். ஏனென்றால் ஆழ்மனதின் தன் தேவைக்கு ஏற்ப ஒன்றை அனுமானித்துக் கொள்ளும். நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அதைத் தான் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ஆழ்மனதிற்கு நீங்கள் நல்லவற்றைப் பார்க்க பழகிக் கொடுக்கிறிர்களா அல்லது தீயவற்றைப் பார்க்கப் பழகிக் கொடுக்கிறீர்களா என்பதே பிரச்னைக்கும் தீர்வுக்குமான வேறுபாடாக இருக்கிறது.

நீங்கள் ஒருவரைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிழ்ச்சி தரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.

திங்கள், 17 அக்டோபர், 2022

பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்ளின் கவனத்திற்கு

..
 
• புடவை எப்படி கட்டுறதுன்னு சொல்லி குடுங்க. செல்லம் குடுக்குறேன்னு சொல்லி ஒன்னும் சொல்லி தரதில்லை. எவ்வளவு நாள் தான் சுடிதார் போட்டுக்கிட்டே சுத்துவாங்க. பொண்ணுங்களுக்கு புடவை கட்ட தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கு. அதான் இப்போலாம் ரெடிமேடாவே புடவை வந்துட்டு. ரெண்டு சுத்து சுத்திக்கிட்டா போதும்.

• சமைக்க கத்து குடுங்க. சமைக்க தெரியாதுன்னு சொல்லுறதை ஏதோ பெருமையா நினைக்குறாங்க இந்த காலத்து பெண்கள். ஆயகலைகளில் சமையலும் ஒரு கலைங்க. எப்படி நடனம் ஆட தெரியும், பாட தெரியும்ன்னு சொல்லுறது பெருமையோ அதே மாதிரி சமைக்க தெரியும்னு சொல்லுறதும் பெருமையே.

• ஆண்களே எல்லாம் செய்யணும். நான் அப்படி ஒரு மாப்பிள்ளையை திருமணம் செஞ்சிக்குறேன்னு பேக்கேஜ்ஜாக எல்லா தகுதியும் உடைய ஒருவன் வேணும்னு எதிர்ப்பாக்குறதை ஆதரிக்காதீங்க.

• கஷ்டம்னா என்னன்னு சொல்லி குடுங்க. பிரச்சனைகள் வந்தா எப்படி எதிர் கொள்ளணும்னு சொல்லி குடுங்க. சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஓவர் செல்லம் குடுப்பாங்க. எதுவும் தெரியாமல் வளர்த்துடுவாங்க. அதற்கான பலனை அந்த பெண் பின்னாடி அனுபவிக்கணும்.

• உங்க பெண்ணை திருமணம் செய்து குடுத்த உடன் உங்கள் கடமை முடியவில்லை. அதற்கு பிறகு தான் உங்கள் ஆதரவு அந்த பெண்ணுக்கு அதிகம் தேவை.

• அடம் பிடிச்சி காரியம் சாதிக்குறது, அழுது காரியம் சாதிப்பது முக்கியமா பெண் குழந்தையை இப்படி வளர்க்காதீங்க.

• கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் பண்ணிக்கோன்னு பெண் பிள்ளைகளுக்கு சமாதானம் சொல்லாதீங்க. அதுக்கு முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாம்.

• சிறகுகளை உடைக்காதீங்க. பறக்க விடுங்க. கூண்டுக்கிளிகளாக வளர்க்காதீங்க.

• பெண் குழந்தைகளுக்கு தவறான ஆணின் பார்வை எப்படி இருக்கும்னு சொல்லி தரும் போது அப்படியே எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லைன்னும் சொல்லி தாங்க. ஆண்களையும் மதிக்க கத்து தாங்க.

• பெண்ணை பூமியுடன் ஒப்பிடுவார்கள் அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்று. ஆனால் எல்லா சமயத்திலும் பொறுமையாக இருக்க சொல்லி தராதீங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கோ ஏன்னா நீ பெண் என்று காரணம் சொல்லாதீர்கள்.

தன்னை வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா?



துறவி ஒருவரிடம் சிஷ்யன் கேட்டான். ''குருவே! கடவுளை வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா?

அதற்கு துறவி, ''சிஷ்யா! ரயிலில் தொலைதூரப் பயணம் மேற் கொண்டிருக்கிறாய். உனக்கு எதிரில் அமர்ந்து ஒருவர் பயணம் செய்கிறார். அவருடன் நீ பேசாவிட்டால், அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது. அனுபவம்மிக்க அவரிடம் பேசினால், 'ரயில் எங்கே நிற்கும், அங்கே உணவு கிடைக்குமா? நீ போக வேண்டிய ஊருக்கு எப்போது போய்ச் சேரலாம்?' இப்படிச் சில செய்திகளை நீ தெரிந்து கொள்வதால், உனக்குத்தானே பயன்!

கடவுள் என்பவர் உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் பயணம் செய்யும் ஓர் அனுபவ சாலி. அவரிடம் நீ பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே? அவரை வணங்குவதால் அமைதி, நிம்மதி, இன்பம் ஆகியவை கிடைக்கின்றன.

கடவுளை வழிபடுவது உன் நன்மைக்கு தானே தவிர, நீ வணங்குவதாலோ அவருக்கு எந்தப் பலனும் இல்லை... அதனால் தன்னை வணங்காதவர்களை கடவுள் ஒருபோதும் கோபித்துக் கொள்வதில்லை!

சனி, 15 அக்டோபர், 2022

ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார்.

அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை அவர் கவனத்தை ஈர்த்தது.

அதில் ஒரு சீட்டுத் தொங்கியது.

சிலையின் விலை ரூ. 1000; சிலை பற்றிய கதையின் விலை ரூ. 3000 என்று சொன்னது சீட்டின் வாசகம்.

சிலை போதும். கதை வேண்டாம் என்று ரூ. 1000 கொடுத்து சிலையை வாங்கிக் கொண்டு போனான்

சிலையோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து சில எலிகள் வரத் துவங்கின.

அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது.
என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையைக் கடலில் வீசி விட்டார்.

பின் தொடர்ந்து வந்த எலிகளும் கடலில் குதித்து மூழ்கின.
நிம்மதி அடைந்து திரும்பியவர் யோசித்தபடியே, மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார்.

கடைக்காரர் அந்த சிலையின் கதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைத் தேடி வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.

“ வேண்டாம்.

அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல்வாதியின் சிலை கிடைக்குமா?” என்று கேட்டார்.


வெள்ளி, 14 அக்டோபர், 2022

வெற்றியின்_ரகசியம்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? 

பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான் "குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

 சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ... முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். 

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர், போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. 

அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான், "குருவே , நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்.  புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான். நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...


ஒரு ஆணின் ஆளுமையின் குணங்களாக

ஒரு ஆணின் ஆளுமையின் குணங்களாக கருதப்படுபவை
இவை தான்....

ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்

ஆள் பாதி ஆடை பாதி
தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.

ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்

அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்

தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.

செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - 
அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,

பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.

திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்

புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல்
பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.

நிறைய படிப்பார்கள்
இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.

சுறுசுறுப்பாக இருப்பார்கள்
இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்

அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும்
இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.

என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.

மனோஜ் ஷுக்லா - இந்த மேல் அதிகாரியோடு 1 வருடம் பணி புரிந்து உள்ளேன். நல்ல நகைச்சுவை...அவர் இல்லை என்றால் என் முதல் வெளி நாட்டு பயணம் இல்லை.

பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல்
இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.

மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. 
பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?

மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...!!

எச்சரிக்கை_பதிவு...!! 

ஒரு_சில_ஆண்களுக்கு_மட்டும்....
பேஸ்புக்ல ஒரு ட்ரெண்டு இருக்கு..

என்ன தெரியுமா..??
பெண்கள் ஐபி க்கு சென்று..

எனக்கு காதல் தோல்வி
என் மனைவி என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போய் விட்டா
என் மனைவி கோமாவில் இருக்கா
என் மனைவி என்னுடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது
என் மனைவி இருந்தும் இல்லாத மாதிரி தான்
நான் தனிமையில் தான் இருக்கிறேன்
என் காதலியை அதிகமாக நம்பினேன் என்னை ஏமாற்றி விட்டார்
இப்படி சொல்லி நீலிகண்ணீர் வடிப்பது

பெண்கள் இரக்க சுபாவம் உடையவர்கள்
அவர்களிடம் தன் கஷ்டங்களை சொல்லி அவரை ஏமாற்றி அனுதாபத்தை பெறுவது
இப்படி பல பொய்களை சொல்லி பெண்களிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொள்வது ஆண்களின் வாடிக்கையாக போய்விட்டது

உன்னிடம் பேசும்போதுதான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது என்று மேலும் மேலும் பொய்களைச் சொல்லி பெண்களின் அனுதாபத்தை பெறுவது

உடனே பெண்களுக்கும் தலையில் ஐஸ் பார் வைத்ததுபோல் இருக்கும் தன்னால் ஒருவர் ஆறுதல் அடைகிறார் என்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்

பெண்கள் கவனத்திற்கு...

இது ஒரு நோய்
இது உங்களை வேறு பிரச்சனையில் கொண்டு செல்லும்
அவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு சொல்வதை விட்டு விட்டு
இதுபோன்ற ஆண்களிடம் எச்சரிக்கை யாக இருங்கள்

வந்தமா போஸ்ட் போட்ட மா
லைக் போட்ட மா கமெண்ட் பண்ணமான்னு போயிட்டே இருக்கணும்
மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ற என்ற பெயரில் கிளம்பாதிர்கள்...

பிறகு இந்த மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...!!

வியாழன், 13 அக்டோபர், 2022

படித்ததை பகிர்கிறேன் 

ஒரு ஆணின் ஆளுமையின் குணங்களாக கருதப்படுபவை
இவை தான்....

ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்

ஆள் பாதி ஆடை பாதி - தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.

ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்

அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்

தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.

செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,

பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.

திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்

புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல் - பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.

நிறைய படிப்பார்கள் - இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.

சுறுசுறுப்பாக இருப்பார்கள் - இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்

அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும் - இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.

என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.

மனோஜ் ஷுக்லா - இந்த மேல் அதிகாரியோடு 1 வருடம் பணி புரிந்து உள்ளேன். நல்ல நகைச்சுவை...அவர் இல்லை என்றால் என் முதல் வெளி நாட்டு பயணம் இல்லை.

பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் - இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.

மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?

காட்டிக்கொடுப்போன் ஜாத்கிரதை!



சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்
அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !
பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !
ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?
"400 ரூபாய் ..!"

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்
ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..!
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"
"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"
"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன் ..!" என்றான் வியாபாரி
அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு 'டோஸாக' தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது ..!
அதனால்தான் அதிக விலை..!" என்றான்
அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான் ..!
ஒருவர் கேட்டார்,
ஏன் இப்படி செய்தாய் ..?
அதற்கு அந்த வாடிக்கையாளர்
"தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!"
என்று கூறினார்.

நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன ..! அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

நல்ல_நட்பை இழந்து விடாதீர்கள்... !!!



ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , 

"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"
என்று கேட்டார்.
👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப் பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!*

கணவன்* *மனைவி *என்றால் யார்..??

*
  
     
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

 கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனைவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி

 அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!! 

ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்? 

"ஒன்னுமில்லை பாட்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....

 நானும் கூட வந்து நிற்க வேண்டும் என்கிறார். எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டுமாம்..

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

 இதிலே என்னை வேறு கூப்பிடுறார் !
பெண் என்றால் அடிமையா என்ன..?

 கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

 இந்த ஆம்பளைங்களே இப்படிதான் பாட்டி  தன்மானம் இல்லாதவர்கள்.

அந்த பாட்டி  சிறு புன்னகையோடு, 

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவரோடு தான் போவேன்.....!!!
 
ஆனா இப்போ அவர்  என்னை விட்டு சென்று 8 மாதம் ஆகி விட்டது..
எங்க இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தான்...

 இரண்டு பேருக்கும்  விவசாயம் தொழில்.   .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!! 

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு... 

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

 பிறகு மகளோட ஊருக்கு சென்று எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்காங்க..

 நானும் என் கணவரும் தனியா எங்க வீட்லே இருந்தோம்...

 என் கணவருக்கு துரதிஷ்டவசமாக உடல்நிலை ரொம்ப சரியில்லாமல் போய் விட்டது..

 தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லை ..நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்போ அவர் என்னுடன்  இல்லை,....! 

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்... 

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!

 அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....! 

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்து கூட என்னைக் கவலைப்படுத்துது...

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!

 இப்போ நான்
அதே படுக்கையிலே நடுவில தனியாக படுத்திருக்கேன்... ! 

சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல் என்ற  பேர்ல எதையோ பண்றேன், !

 வாய்க்கு ருசியா சமைச்சு பகிர்ந்து சாப்பிட  அவர் என்னுடன் இல்லை.!.. 

கோயிலுக்கு இப்போ ஒன்னா போக அவர் இல்லை...!

விழியோரம் நீர் தேங்க.., 

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!

 அதிகமாக போற்றணும்....!!!

 கணவனின் வெற்றியோ தோல்வியோ,!

 பெருமையோ அவமானமோ...!!!.

லாபமோ... நஷ்டமோ ...

 மனைவிக்கு அனைத்திலும்..
 சம பங்கு உண்டு...!

 தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

 வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் பாதிக்காது .....!

மிகவு‌ம் வேதனை படுத்தும்.!

எங்கே  போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

 பஸ்ல்  ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....

 இல்லாவிட்டால் எதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பயணம் செய்யும் போது  நான் அசந்து தூங்கி விடுவேன்...!.

 அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.! 
பல முறை 8 மணி நேரம் அல்லது  12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....

 பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

 பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று கொண்டே வந்திருக்கிறார்....!

இன்னைக்குத் தினமும் என் கணவரின் நினைவிடத்திற்கு சென்று வருவேன்.....! 

 எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

 இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வருகிறேன் என்று புறப்பட்ட அந்த பாட்டியை  வச்ச  கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !. 

என்ன நினைத்தாளோ மண்டபத்திற்கு உள்ளே சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!! 

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.!

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, 
     (hi sir how r u? Nice to meet u) என்கிறோம்...!

 இடையில் பேசும் போது I'm sorry sir என்கிறோம்...! 

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்கிறோம் ..! 

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...

 அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது....
 ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...? 
மனைவியை கணவன் மதிக்கிறானா...???

 பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்...

 கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடித்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, 

ஏங்க, ரொம்ப வேலையா, காலையில் இருந்து  நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேன்னு

மனைவியும் சொல்றதில்லை...

மனைவியும் அசதியா அமர்ந்திருக்கையில்.. 
இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன்மார்களும் இல்லை. 

அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்.....

 வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!. 

கணவனோ.... மனைவியோ...

மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்...  

கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... &
மனைவியோ மட்டும் தான்...

சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....

 முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..

 பின்னர் படிப்படியாக குறைந்து விடும்.. 

பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே...

 வந்து போவார்கள்......

 இறுதியில் கணவன் அல்லது  மனைவி மட்டுமே...

 ஒருவருக்கொருவர்....
துணையாக இருப்பர்.. 

இறுதியாக ஒன்று சொல்லி கொள்கிறேன்..

நம்முடைய. 
 உறவு..... நட்பு... குலம்.... சாதி...  மதம்..இனம் ...பணம்.. பங்காளி... பகையாளி....  முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே..... 
ஞாபகமிருக்கட்டும்..!!!

இந்த அத்தனை பேரும் கூடிக்கலையும் காக்கா கூட்டமே.... 

ஆக மனைவி... மகள்...மகன்... & இரத்த உறவுகளே... 

நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பர்...

இந்த குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது!

பெண்களின் அந்த குணங்கள்!

பெண்களின் ஒரு சில குணங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உலவியல் நிபுணர்கள் குறிப்பிடும் பெண்களின் அந்த சில குணங்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

கட்டுப்படுத்தும் பெண்கள்

உங்கள் வழக்கங்களை கட்டுப்படுத்த முயிற்சிக்கும் பெண்கள் அல்லது மாற்ற முயற்சிக்கும் பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு பிடித்த விஷயத்தை நீங்கள் செய்யவே முடியாது.

வன்முறை விரும்பும் பெண்கள்

எடுத்த காரியத்தில் வெற்றிபெற வன்முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. எதிர்காலத்தில் உங்களை அடிப்பதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

பொறாமை படும் பெண்கள்

மற்றவர்களை பார்த்து பொறாமை அதிகம் கொள்ளும் பெண்கள், மற்றவர் மகிழ்ச்சியில் மன வேதனை அடையும் பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. இவர்கள், தன்னை தவிர வேறு யாரும் முன்னேறிவிட கூடாது என நினைப்பவர்கள்.

விதிகளை மீறுபவர்கள்

விதிகளை மீறினால் தவறு இல்லை, என உங்களை தவறாக வழிநடத்தும் பெண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த குணம் கொண்ட பெண்கள் உங்களை தவறான பாதையிலேயே வாழ்க்கை முழுவதும் அழைத்து செல்வார்கள்.

தனிமைப்படுத்தும் பெண்கள்

மற்றவர்களுடன் பேசுவது, பழுகுவதற்கு தடை விதிக்கும் பெண்கள் அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பழகும்போது கோவம் கொள்ளும் பெண்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

மிரட்டும் பெண்கள்

நீ இதை செய்யவில்லை என்றால் நான் அதை செய்துக்கொள்வேன், இதை செய்துக்கொள்வேன் என மிரட்டும் பெண்களை திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை நரகமாக தான் இருக்கும். எனவே, இவர்களையும் ஒதுக்கி வைப்பது நல்லது.

பழி சுமத்தும் பெண்கள்

தான் செய்யும் தவறுக்கும் மற்றவர் மீது பழி சுமத்தும் பெண்கள், தனக்கு பாதிப்பு என வரும் நேரம் உங்களையும் தவிக்க விட்டு சென்றுவிடவர். எனவே, இந்த குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், 
அழகான நதிகள், 
மரங்கள், 
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று 
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு 
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், 
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ, 
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது, 
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த படம் பார்ப்பது, 
பிடித்த கோவிலுக்கு போவது,
பிடித்த உடை உடுத்துவது, 
பிடித்த உணவு உண்பது 
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. 
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".


சிறந்த_பேச்சாளன்



சிறந்த பேச்சாளனாக மிகவும் ஆசைப்பட்டேன்

அதற்காக நல்ல வார்த்தைகளை தேடினேன்

வார்த்தைகளை பிடிக்கும் தூண்டில் செய்தேன்

எதுகை மோனை கொண்ட சொற்களை சேகரித்தேன்

சொற்களைக் கொண்டு கோலம் போட்டேன்

சொற்கள் மூலம் ஜாலம் காட்டினேன்

வார்த்தைகளில் ஏற்ற இறக்கம் காட்டினேன்

வார்த்தைகளில் வளைவு சுழிவு காட்டினேன்

சிறந்த பேச்சாளான் என்பவன் ஊமை என்ற மிகப் பெரும் உண்மை தெரிந்த பின்

மௌனத்தை மனம் நாடுது

மௌனமே சிறந்த மொழி என்றும்

மௌனமே சிறந்த வெளிப்படுத்தல் என்றும்

மௌனத்தில் நிறைந்திருக்க பார்க்கிறேன்

நூறு சொற்களுக்கு பதில் ஒரு சொல் பயன்படுத்த முனைகிறேன் 

ஆயிரம் வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு வார்த்தை சொல்ல முனைகிறேன்...

மௌனம் உறவுகளை பலமடங்காக இணைக்கும்
கதைகேள் 22
அவிழ்க்கப்படாத முடிச்சு...

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்...⛓️

- மதத்தலைவர்
- வழக்கறிஞர் 
- இயற்பியலாளர் 

முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. 

ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார். 

அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

'நீதி! நீதி! நீதியே வெல்லும்' என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்' என்றார்.  

உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது. 

#நீதி...🔥

👉 சில சந்தர்ப்பங்களில் 
வாய் மூடி இருக்க பழகிக்கொள்!

👉 தெரிந்த உண்மைகளையெல்லாம்  உளரிக்கொட்டுவதால் உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!

👉 சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் 
புத்திசாலித்தனமானது...👍🏻
NatGeo சேனல் இந்த புகைப்படத்தை 2013-ன் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக பெயரிட்டுள்ளது, மேலும் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் இந்த புகைப்படத்தை எடுக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார், மற்றும் இந்த மானின் ஆளுமையின் சக்தியை பாராட்டினார்.

*If you are inevitably going to die, why fear?*
*DIE AS A HERO*

*நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத நிலையில் சாகப் போகிறீர்கள் எனில் ஏன் மரணத்திற்கு பயப்படுகிறீர்கள்? ஒரு வீரனாக மரணம் அடையுங்கள்*

கதை இப்படி செல்கிறது:

இந்த தாய் மான் தங்கள் சிறு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த சிறுத்தைகள் அந்த மானைத் தாக்கின.

அந்த தாய் மானுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்தது. அது சிறுத்தைகளிடமிருந்து இருந்த தூரம் மற்றும் அதன் ஓடும் வேகம் அது தன் உயிரைக் காப்பாற்றுவதற்க்கு சாதகமாக இருந்தது. ஆனால், அது சிறுத்தைகளிடம் சரணடைய முடிவு செய்தது. காரணம்??

*காரணம், தன் பிள்ளைகளுக்குத் தப்பிக்க வாய்ப்பளிக்க... ஏனென்றால் அந்த தாய் மான் முதலில் ஓடிவிட்டால், அதனுடைய குட்டிகள்  சிறுத்தைகளிடம் எளிதில் மாட்டிக் கொள்ளும், அந்த மான் குட்டிகளுக்கு தப்பிக்க போதிய அதிக நேரம் இருக்காது.*

தான் வேட்டையாடப் படுவதற்கு முன், தன் குட்டிகள் தப்பித்துவிட்டதை நிம்மதியுடன், உறுதியுடன் பார்க்கும் தாய் மானின் பார்வையைப் பாருங்கள்... சிறுத்தையின் வாயில், மரணத்தின் விழிம்பு நிலையில், தாய் மானின் கடைசி தருணப் படம்.

*உலகில் உனக்காக தன் உயிரைக் கொடுக்கும் ஒரே நபர் தாய் மட்டுமே.*

--------------------
         *இப்போது நாம்?*

சில சமயங்களில் நாம் மற்ற நபர்களைப் பார்த்து:

*இவர் ஏன் தேவையில்லாமல் மாட்டிக் கொண்டார்?*

 *இவர் ஏன் தேவையில்லாமல் விட்டுக் கொடுத்தார்?* 

*இவர் ஏன் தேவையில்லாமல் உதவி செய்யப் போனார்?* 

*இவர் ஏன் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் மெனக்கிடுகிறார்?*

என்று பிறரைப் பற்றி பலவாறு நினைப்போம், எளிதில் விமர்சிப்போம். ஆனால் அந்த நிலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள், அவரது தியாக சூழ்நிலைகள் நமது கண்களுக்கு தெரியாமலேயே போய் விடுகின்றது!

*விமர்ச்சிக்கும் முன் விளங்க முயற்சிப்போம்*

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

கடைசி காலத்தில் இருக்கும் வயசானவர்களை அவங்க சாகும் வரை ஒரு நர்ஸ் பாத்துக்கிட்டு இருந்தாங்க. சாகும்போது, "உங்களுக்கு ஏதாவது மனவருத்தம் இருக்கா?"னு எல்லார்கிட்டயும் கேட்டு அதை ஒரு புத்தகமா போட்ருக்காங்க. பல பேர் சொன்ன பதில்கள் இது தான்:

1. எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.

2. நான் வேலை வேலைனு ரொம்ப ஓடிருக்கக் கூடாது

3. நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.

4. என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.

5. நான் சந்தோஷமா இருந்துருக்க நானே அனுமதிச்சுருக்கணும்.

யோசிக்க வச்ச மெசேஜ்.........
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்

*1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
*2. இரவில் கண் விழித்திருத்தல்
*3. காலை உணவை தவிர்த்தல்
*4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்
*5. பணத்தை நோக்கிய ஓட்டம்
*6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
*7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள்.
இளநீர் போன்றவை மிக நல்லது
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.
யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்
ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.......
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்

*1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
*2. இரவில் கண் விழித்திருத்தல்
*3. காலை உணவை தவிர்த்தல்
*4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்
*5. பணத்தை நோக்கிய ஓட்டம்
*6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
*7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்
வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்
கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல
நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.
போதியளவு நீர் அருந்துங்கள்.
இளநீர் போன்றவை மிக நல்லது
பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.
யோகா தியானம் உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.
மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.
இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.
அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்
ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
மனதுக்கு பிடித்த விசயங்களை மட்டும் செய்து வரவும்.......

சனி, 8 அக்டோபர், 2022

நாட்டு நடப்புக்கள்

ஒரு நிறுவனத்தின் மேனேஜர் பணியில் இருந்த மூன்று ஊழியர்களை வரவழைத்து  ​​2+2=5 தானே? என கேட்டார்.
 
முதல் நபர்: ஆம், அதேதான்' என்று பதிலளித்தார்.

இரண்டாம் நபர்: ஆம், அத்தோடு 1 ஐ
சேர்த்தால் 5 தான்' என்று பதிலளித்தார்.

மூன்றாம் நபர்: இல்லை, இது தவறான விடை, 4 தான் சரியான விடை' என்றார். 

அடுத்த நாள் ஊழியர்கள் மூன்றாவது நபரை பணியில் காணவில்லை, அது பற்றி விசாரித்த போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இது கண்டு வியந்து போன துணை மனேஜர்: மதிப்பிற்குரிய மனேஜரே! மூன்றாவது ஊழியரை ஏன் பணி நீக்கம் செய்தீர்? தெரிந்து கொள்ளலாமா? என கேட்டார்.

அதற்கு மனேஜர்: முதல் நபரை பொறுத்தவரை, அவன் ஒரு பொய்யன். அவன் ஒரு பொய்யன் என்பது அவனுக்கும் தெரியும். இந்த வகையினர் நமக்கு தேவை.

இரண்டாவது நபரை பொறுத்தவரை அவன் புத்திசாலி, அவன் புத்திசாலி என்பது அவனுக்கும் தெரியும். இந்த வகை நபர்களும் நமக்கு தேவை.

மூன்றாவது நபரைப் பொறுத்தவரை, அவன் நேர்மையானவன், நியாயம் பேசுபவன். இந்த வகை நபர்களை வைத்து காலத்தை ஓட்டுவது கஷ்டம்! நம்மால் இவர்களை சமாளிக்க முடியாது' என்றார். 

இப்போது அந்த மனேஜர் அந்த துணை மனேஜரிடம்: 2 + 2 = 5 தானே? நீ சொல் பார்ப்போம்' என்றார்.

அதற்கு துணை மனேஜர்: ஸார் நீங்கள் அனுபவம் வாய்ந்த மனேஜர். உங்களுக்கு நான் விளக்கம் சொல்வது  அழகல்ல!
நீஙகள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் சரியான விடை!' என்றார்.

அதற்கு அந்த மனேஜர்: “இந்த வகையினர் சுத்தமான நயவஞ்சகர்கள், இவர்கள் மிகவும் வரவேற்கப்பட்டவர்கள், இவர்கள் கட்டாயம் நமக்கு தேவை.' என்றார்.

இதுதான் நாட்டின் நடப்புக்கள். இதுதான் கசப்பான உண்மை,  திருடர்களுக்கு இடமுண்டு, நியாயவாதிக்கு இடமில்லை. நீதி நேர்மைக்கு கதவுகள் மூடப்படுகின்றன.கள்ளம் கபடத்துக்கு கதவுகள் திகறக்கப்படுகின்றன.


புதன், 5 அக்டோபர், 2022

மது கொடுத்த போது முஸ்லிம் சகோதரர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்!



ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த முஸ்லிம் ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,

மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள்,மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.

திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,

ஏன் நீங்கள் குடிக்கக் கூடாது என அவர் கேட்டார், அதுக்கு இவர் நான் முஸ்லிம் மது அருந்துவதில்லை என சொன்னதும்… அதனாலென்ன? என்றவருக்கு இவர் சொன்னார்,

அப்படியாயின் முதலில் இந்த விமானத்தை ஓட்டும் பைலட்டுக்கு கொடுங்கள் என்றார்.

அதெப்படி அவர் டூட்டியில் உள்ளார், கடமையிலிருக்கையில் மது அருந்தினால் அவர் தவறிழைத்துவிட வாய்ப்புண்டு அதனால் விதி மீற மாட்டார் என்றார்..

நானும் கடமையில் இருக்கிறேன் இஸ்லாமியன் எனும் என் அந்தக் கடமையில் இறைவனுக்கு பயந்து நெறிபிறழாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றார்.