நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 11 ஜூன், 2023

மனம் விட்டு சிரியுங்க😆

 மனம் விட்டு சிரியுங்க😆

வியாதிகள் தீரும், 

ஆயுள் கூடும்

.....................,........

: ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.

-----------------------------------நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ

ஸ்வீட்டா இருக்கு..SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,

இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."

-----------------------------------

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

-----------------------------------

மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.

கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

-----------------------------------ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது

மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க

-----------------------------------

முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?

ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!

முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு

-----------------------------------

மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

----------------------------------

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...

-----------------------------------

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

கணவன்: என்னம்மா விஷயம்?

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(

கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..

மனைவி: ????

-----------------------------------நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்


டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க

-----------------------------------

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

-----------------------------------

வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?

கிராமத்தான் : கயிற்றாலே தான்

-----------------------------------

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

-----------------------------------

நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என்

மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.

-----------------------------------

அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!

-----------------------------------

"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்

பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து

குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."

----------------------------------

 Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்

கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.

Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

---------------------


 🌷  ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.


🌷  "இருவடை எடுத்து ஒருவடை என்பார்

திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"


🌷  மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.


🌷  இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.


🌷  ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. 


🌷  ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’


🌷  இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.


🌷  ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,


🌷  ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’


🌷  வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது. 


🌷  டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.


🌷  நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.


🌷  ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’


🌷  எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!