நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 20 நவம்பர், 2016

திருமணத்திற்கு பின்

திருமணத்திற்கு பின் பதிலை இனி சொல்ல முடியாது.


1. இரவு 1 மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல  பதில் சொல்லி இருப்பீர்கள்.  இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்கடா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச்சொன்னால்,
இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்...
.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..

.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...

என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..

.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, குடித்துவிட்டு கீழே கிடபவனுக்கு கிடைப்பதில்லை..

.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...

.குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், நிச்சயம் ஒரு பெண் இருப்பாள்....

.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

.பொண்ணுங்ககிட்ட ஃப்ரெண்ட்ஸாக ஈசியான வழி, "ஐ லவ் யூ" சொல்வதுதான். சொன்ன உடனே, "லவ் பண்ண முடியாது. நாம ப்ரண்ட்ஸா இருந்துடலாம்"னு சொல்லிடறாங்க...

கேள்வி - பதில்


கேள்வி பதில்                                                      

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
      பதில்: அவரது கடைசி போரில்...


2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
      பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....


3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
     பதில்: திரவம்


4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
       பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.



5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
      பதில்: இன்னொரு பாதி?


6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
      பதில்: கல் ஈரமாகி விடும்.


7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
      பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.


8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
      பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.


9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
      பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.


10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
      பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.


11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
       பதில்: திருமணம் தான்.


12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
        பதில்: தேர்வு தான்.

நீங்க என்னபண்ணுவீங்க - இன்டர்வியூல உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா.







    நீங்க ஒரு Interview-க்கு போய்..
                அங்கே உங்களுக்கு தெரியாத
                                    கேள்வி கேட்டா... நீங்க என்னபண்ணுவீங்க..

              " தெரியாதுன்னு " சொல்வீங்க..!
                                                     அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம
                               அதை சமாளிக்கறது எப்படின்னு
                                                                  தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..


" If You can't Convince  them..
Then.. 
Try to Confuse Them..! "


இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!

அலுவலகத்தில்

தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும்                                                             

1.யாருமே செய்யாத ஒரு வேலையை நீங்கலாக எடுத்து செய்தால், இனி         வரும் வேலை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்..

2.மேனேஜர் உடைச்சா, பொன் சட்டியும் மண் சட்டியே.

3. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு உங்கள் மேனேஜர் இருக்கிறார்.

4..பிடித்த பெண்ணிடம் லவ்வை சொல்வதை விட கஷ்டமாயிருக்கிறது, மேனேஜரிடம் லீவு சொல்வது


5.மேனேஜருக்கு ஜால்ரா அடித்து வாழ்பவனே வாழ்வர்! ஏனையோர் மாங்கு மாங்கு என வேலை செய்தே சாவர்!

6.மேனேஜர் நம் மீது காட்டும் அன்பும், கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் மேல் காட்டும் அன்பும் ஒன்றே என்பதறிக

7.பிராஜெக்ட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மேனேஜர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.

8.மேனேஜர்களின் அகராதியில் மிக பிடித்த வார்த்தை 'ok sir' என்பதாகவும்,அறவே பிடிக்காத வார்த்தை 'why sir' என்பதாகவுமே இருக்கும்..

9.அலுவலகத்தில் மேனேஜர் மிஸ்டர் என்று உங்கள் முழுப்பெயரையும் கூப்பிட்டால் நீங்கள் பிரச்னையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..

10.மேனேஜர் பார்க்கும் போது தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும் ..