நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

திங்கள், 10 அக்டோபர், 2016

அபூர்வ இரத்த வகை


அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை






இரத்தம் நம் உடல் செயலாக்கத்தின் ஆதாரம். உடலின் ஒவ்வொரு பாகத்தின் செயல்பாட்டிலும் இரத்தத்தின் பங்கு இன்றியமையாதது.எல்லோருக்கும் வாழ்வின் எதோவொரு சமயத்தில் இரத்தம் பெறவோ அல்லது தானம் வழங்கவோ நேரிடும்.

ஒவ்வொருவரும் தனது இரத்த வகையையும் தங்கள் உடன் சார்ந்தோரின் இரத்த வகையையும் அதன் தன்மையையும் அறிந்திருப்பது பல வகைகளில் நன்மையாக அமையும்.



Blood Groups :

இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதில் எந்தவொரு அணுக்களின் அளவு அதிகரித்தாலும் குறைப்பட்டாலும் அதற்கேற்ப உடலில் தாக்கம் உண்டாகும்.

இரத்த வெள்ளையணுக்கள்(White Blood Cells) நோய் எதிர்ப்பிலும், சிவப்பணுக்கள்(Red Blood Cells) உடலின் எல்லா பாகத்துக்கும் இரத்தத்தை சுழற்சி செய்யும் பணியிலும், தட்டணுக்கள்(platelets) இரத்த உறைதலிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இரத்தம் தேவைப்படுவோரில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்குச் சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும்.



சிவப்பணுக்கள் ஃப்ளாஸ்மாவுடன்(Plasma) இணையும் விதத்தை பொறுத்தே இரத்த வகை நிர்மாணிக்கப்படுகிறது.பொதுவாக A, B, AB and O ஆகியவையே நாம் அறிந்தவை.இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன.

ஆனால் பலரும் அறிந்திராத(அல்லது கவனம் பெறாத) அரிய இரத்த வகை ஒன்றுள்ளது. இதனை ஹெச்ஹெச்(hh)/ Oh/ பம்பாய் இரத்த வகை (Bombay Blood Group) என்றழைக்கின்றனர்.உலகில்0.0004%( 40 லட்சத்தில் ஒருவர்) மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது.



Bombay Blood Group :

1952 ஆம் ஆண்டு மும்பையின் Seth Gordhandas Sunderdas மருத்துவக் கல்லூரியை சேர்ந்தY.M.பாண்டே,தேஷ்பாண்டே மற்றும் G.M.ஃபாட்டியா ஆகிய மருத்துவர்கள் ஒரு அறிக்கையில் (The Lancet –pp. 903-4, May 3, 1952) இரண்டு நோயாளிகளை பற்றி குறிப்பிட்டிருந்தனர். ஒருவர் ரயில்வே ஊழியர், மற்றொவர் கத்தி குத்தப்பட்டு இருந்தவர். அவர்களுக்கு அவசரமாக இரத்தம் செலுத்த வேண்டிருந்தது.அதுவரை அறிந்திருந்த எந்த இரத்த வகையும் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்ற இரத்த வகைகளை இவர்களின் இரத்ததோடு சேர்க்கையில் வெவ்வேறு வகையான வினைகள் நிகழ்ந்தன. பின்னர் 160 க்கும் மேற்பட்டவர்களின்(Donars) இரத்த வகைகளை பரிசோதித்த பிறகு இறுதியாக ஒரு மூன்றாம் நபரிடம் அதே இரத்த வகை கண்டறியப்பட்டது. இந்த அரிய இரத்த வகைக்கு பாண்டே மற்றும் மற்ற மருத்துவர்களால் பம்பாய் இரத்த வகை (Bombay Blood Group) என பெயரிடப்பட்டது. -From Indian Journal of History of

Science

நெருங்கிய சொந்தம் அல்லது நெருக்கமான சமூக திருமணங்கள் போன்றவை இந்த இரத்த வகை அதிகரித்திருக்க காரணமாக இருந்திருக்கலாம்.இப்போது அவை அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.பல சிறிய சமூங்களின் அழிவிற்கு பின்னும் இந்த இரத்த வகை முன்னோரின் வழியாகவே தொடந்துள்ளது.

hh/Oh இரத்த வகையை கண்டறிவது மிகவும் இன்றியமையாத்து.ஏனெனில் பொதுவாக ABOஇரத்த பரிசோதனை செய்யும் போது ‘ஒ’ வகை என்றே காண்பிக்கும்,ஆனாலும் ‘ஒ’ வகையில் காணப்படும் H ஆன்டிஜன் இருக்காது.தடயங்களை வைத்து பரிசோதனையாளர் தாமாக பாம்பே இரத்த வகை பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.

தற்போது இந்தியாவில் 10000 ல் ஒருவருக்கு(0.01%) பம்பாய் இரத்தம் உள்ளது.இவர்கள் சக இரத்த வகை உள்ளவரிடமிருந்து மட்டுமே இரத்தம் பெறவோ கொடுக்கவோ இயலும்.இதுவே அதனை கொண்டிருப்பர்களை சிறப்பு மற்றும் அரிய வகையினராக்குகிறது.

கடந்த வருடம் டெல்லியில் ஒரு குழந்தைக்கும் இந்த வகை கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு தேவைப்பட்டதும், இணையம் மற்றும் The Think Foundation வழியாக மும்பையிலிருந்து மூன்று நபர்கள்(நாயகர்கள்) தங்கள் Oh இரத்தத்தை அனுப்பி வைத்தனர்.

இந்த சிறப்புத்தன்மை பல இந்திய திரைப்படங்களின் கூட பயன்படுத்தப் பட்டுள்ளது.Okkadunadu என்ற தெலுங்கு படத்தில் வில்லனுக்கும் நாயகனுக்கும் பாம்பே இரத்த வகை இருக்கும். வித்யா பாலன் நடித்த Kaahani இந்தி படத்திலும் முக்கிய எதிராளியை இந்த இரத்த வகை கொண்டே கண்டுபிடிப்பார்கள். அவ்வளவு ஏன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா(2013) படத்தில் Oh இரத்த வகை முக்கிய பங்காற்றி விஜய் சேதிபதி மூலம் கர்ப்பிணி பெண்ணின் உயிரைக் காக்கும்.

Blood Donation :

‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் ‘ஏ’ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெற வேண்டும்.இப்படி ஒவ்வொரு வகைக்கும், அந்தந்த வகை ரத்தத்தை மட்டுமே பதிலாகச் செலுத்த முடியும். தகுந்த இரத்த வகைக்கு பதிலாக மற்ற இரத்த வகைகளை உடலின் செலுத்தினால் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், மிக நெருக்கடியான சூழ்நிலைகளில் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஓ’ வகை ரத்தத்தை அவருக்குச் செலுத்தலாம். அதனால்தான் இவர்களை ‘யுனிவர்சல் டோனர்’ என்றழைக்கிறார்கள். அதேபோன்று ‘ஏபி’ ரத்த வகையைப் பெற்றவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் செலுத்தலாம்.

மற்ற தானங்களை போலலாது இரத்த தானம் மூலம் பிறர் உயிரையே நாம் காப்பாற்ற முடியும்.ஆனால் உலகில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

ரத்தம் கொடுப்பதால் தங்களுக்குப் பாதிப்பு உண்டாகுமோ என பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதனாலே இரத்தம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக உள்ளது.ஆனால் இது தவறான எண்ணம்.

நீங்கள் தானமளிக்கும் இரத்தம் முழுமையாக பரிசோதிக்கப் பட்டு பின்னர் ரத்த வங்கியின் பாதுகாப்பு அறையில் 2 – 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் வைக்கப்படும். குறிப்பிட்ட மாத இடவெளியில் இரத்தம் அளிப்பது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது.

இரத்தம் கொடுப்போம் – உயிர் காப்போம்.

வியாழன், 6 அக்டோபர், 2016

Lhasa De Sela


When my lifetime had just ended
And my death had just begun
I told you I’d never leave you
But I knew this day would come”

என ‘I’m going in’ பாடலில் லாஸா சொல்வதைப் போல எமக்கெல்லோருக்கும் முடிவதற்கென வாழ்வு ஓரிடத்தில் காத்திருக்கின்றது. ஆனால் லாஸாவைப் போன்ற அரிதானவர்களே தம் வாழ்வை அதன் எல்லைவரை வாழ்ந்துவிட்டும், நமக்கு கற்றுக்கொள்வதற்கான பாடங்களாய் தம் அனுபவங்களை விட்டுவிட்டும் செல்கின்றார்கள்.

ஆபீஸ் மீட்டிங்

'சமோசா சாட்டும் செல்ஃபி புள்ளைகளும்' - ஆபீஸ் மீட்டிங் அக்கப்போர்கள்!



கும்பிபாகத்தை விட கொடூரமான தண்டனை எது? கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லிவிடலாம், ஆபீஸ் மீட்டிங் என. பின்னே மீட்டிங்கில் என்ன பேசலாம்னு முடிவு பண்ணவே ஒரு மீட்டிங் வெச்சா பாடி எப்படித் தாங்கும்? வேகும் வெயிலில், மத்தியான மயக்கத்தில் நடக்கும் இந்த மீட்டிங்கே ஒரு கொடுமை என்றால் அதில் காம்போ கொடுமையாக சில புண்ணியவான்கள் வேறு வந்து கடுப்பைக் கிளப்புவார்கள். இத்தனைக்கும் இந்த ஜீவராசிகளை மீட்டிங்கில் வைத்துப் பார்த்தால் மட்டும்தான் உண்டு. வருடம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் இருப்பார்கள் போல...

* மீட்டிங்கில் அறுவை தாங்க முடியாவிட்டால்தானே நாம் கைத்தட்டிப் பேச்சை முடிக்க சிக்னல் கொடுப்போம். ஆனால் சில விஷக்கிருமிகள் பேசுபவர் என்ன சொன்னாலும் கைத்தட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதுவும் சும்மா இல்லை. அப்படியே சிலிர்த்துப்போய் உச்சி முடி எல்லாம் ஸ்பைக்ஸ் ஸ்டைலில் நிற்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு. கவனித்துப் பார்த்தால் வாயு மூலையோ, கன்னி மூலையோ ஏதோவொரு மூலைதான் எப்போதுமே இந்தச் சத்தத்தின் பிறப்பிடமாக இருக்கும். க்ளாப் தட்டுறது எல்லாம் அசஸ்மென்ட் ப்ராசஸ்ல வராதுய்யா!

* மீட்டிங்குகள் எல்லாம் மெகா சீரியல் போல ஒரே திரைக்கதைதான். நாள் மாறினாலும் சீன் மாறாது. எனவே போரடிக்கக் கூடாது என்பதற்காக குரூப்பாக செட் சேர்ந்து உட்கார்ந்து கமென்ட் அடித்துக்கொண்டிருப்போம். நம் நேரத்துக்கென முன்னால் ஒரு சீனியர் சிட்டிசன் உட்கார்ந்திருப்பார். நம் பக்கம் குபீர் சிரிப்பு எழும்போதெல்லாம் திரும்பிப் பார்த்து முறைப்பார். பயம் வரணுமாம். காலேஜில் இருந்தே இந்த மாதிரியான ஆட்களைப் பார்த்தவர்கள் என்பதால் சட்டை செய்யாமல் திரும்பவும் பேசுவோம். சட்டென திரும்பி, 'ஷட் அப்' என எகிறுவார். 'என்னது இவருக்குப் பேச்சு வருமா?' என அதிர்ச்சியில் உறைந்திருப்பான் நண்பன்.

* கவுண்டமணி அளவுக்கு இல்லை என்றாலும் சூரி அளவுக்காவது கவுன்ட்டர் போட்டுக் கூட்டத்தை சிரிக்க வைக்கும் திறமை நமக்கு வாய்த்திருக்கும். அதைக்கண்டு காண்டாகும் மிடில் ஏஜ் மகாத்மாக்களில் ஒருவர், 'நான் எல்லாம் காமெடி பண்ணா அப்படியே குபீர் குபீர்னு சிரிப்பு வரும் தெரியுமா' என மொகலாயர் காலத்து மொக்கைகளை போட்டுக்கொண்டிருப்பார். நாம் பார்க்கிறோமா என ஒரு பெருமித லுக் வேறு. பாவம், அவரைப் பார்த்து சிரிப்பதை அவர் காமெடிக்கு சிரிப்பதாய் நினைத்துக்கொண்டு அடுத்த மீட்டிங்கிற்கு கற்கால காமெடிகளைத் தயார் செய்வார்.

* அசெஸ்மெண்ட் மீட்டிங்காக இருந்தாலும் சரி, ரிசஷன் மீட்டிங்காக இருந்தாலும் சரி, அலுங்காமல் குலுங்காமல் வந்து உட்கார்ந்து செல்ஃபிக்களாக எடுத்துத்தள்ளும் குரூப் ஒன்று எல்லா கேம்பஸிலும் இருக்கிறது. போருக்குப் போய்விட்டு வந்தது போல விக்டரி சிம்பல் போஸ் வேறு. அவுட் ஆஃப் போகஸில் உங்கள் சுண்டுவிரல் தெரிந்தால்கூட உங்களையும் டேக் செய்து காலி செய்வார்கள். பின் நோட்டிஃபிகேஷன்களை அள்ள கையில் சாக்குமூட்டையோடு சமூக வலைதளம் பக்கம் ஒதுங்க வேண்டியதுதான்.



* டன் கணக்கில் புண்ணியத்தை சுவிஸ் பேங்க் அக்கவுன்ட்களில் கணக்கு வைத்திருக்கும் ஆத்மாக்கள் இவர்கள். மீட்டிங் என வந்து உட்கார்ந்த உடனேயே தூங்கிவிடுவார்கள். தலைமுடி காற்றில் பறக்க, மூக்கு புடைப்பாய் ஏறி அமுங்க சொகுசாய் இவர்கள் தூங்குவதைப் பார்க்க நமக்கு உள்ளே பூ மிதித் திருவிழாவே நடக்கும். நமக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான். முன் சீட்டினைப் போய் முட்டாத வரைக்கும் தூக்கம் நல்லது!

* இந்த ஆள் யார், எந்த டீம், என்ன பொறுப்பு என யாருக்குமே தெரியாது. ஆனாலும் பெரிய கட்சி மாநாடு நடத்தும் பில்டப்போடு அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருப்பார். மைக் பாஸ் செய்வது தொடங்கி ஓங்கி மிரட்டி உருட்டுவது வரை அத்தனையும் செய்வார்கள். திஸ் கய்ஸ் என்ன ரகம்னே தெரியலையே!


   

* 'பாயசம் எங்கடா?' என சிங்கம்புலி அலறுவாரே. அந்த அலறல் மோடிலேயே எப்போதும் இருக்கும் ஆட்கள் இவர்கள். 'எனி டவுட்ஸ்?' என எம்.டி கேட்டால் 'பலகாரம் எப்போ சார் வரும்?' என்பதுதான் இவர்களின் பிரதான கேள்வியாக இருக்கும். சமோசா சாட், பானி பூரி என்றால்கூட பரவாயில்லை. தயிர் சாதம்- மட்டன் பாயா, தேங்காய் சாதம் - மீன் குழம்பு என எந்த காம்போவாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார்கள். 'வேணாம்னா வேஸ்ட் பண்ணாதீங்க பாஸ்' என நம் தட்டில் வேறு எச்சில் ரேகை பதிப்பார்கள். நான் சொன்னேனா?


‘தவளை ராசா’


ஓரு ஊரிலே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் ஒரு நாள் பூங்காவில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது பந்து குளத்தினுள் சென்று விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக அவள் குளத்தினுள் இறங்கினாள். குளத்தினுள் இருந்த ஒரு குகையில் ஒரு தவளை இருந்தது. அது, ‘ஏய்……… ராஐகுமாரியே! நீருள் இறங்காதே. என்னை நீ அரண்மனைக்குள் அழைத்துச் செல்வாயானால் நான் பந்தை எடுத்துத்தருவேன்’ என்றது. அதைக் கேட்டு பயந்தாளானாலும் பந்தை எடுக்க வேண்டும் என்பதற்காகச் சம்மதித்துவிட்டுப் பந்தை எடுத்ததும் தவளையைத் திரும்பிப் பாராமல் ஓடிவிடுகிறாள். தவளை பலமுறை கத்தியும் அவள் செவிசாய்கவில்லை.

ஆனால் தவளை நீருக்கு வெளியே வந்து ராஐகுமாரி சென்ற வழியைப் பின்பற்றிச் சென்று அரண்மனையின் வாயில் கதவைத் தட்டியது. தவளையிடம் விசாரித்த காவலரிடம் , ‘ராஐகுமாரி வரச்சொன்னாள் அதனால் தான் வந்தேன்’ என்றது. இதனை ராஐகுமாரியிடம் காவலர் தெரிவித்ததும் அவள் பயந்து தந்தையிடம் சென்று கூறினாள். தந்தை, ‘இந்தச் சிறிய பிராணிக்கா பயப்படுகிறாய்? போய் அது கேட்டதைச் செய்துகொடு’ என்று கூறிவிட்டார்.

ராஐகுமாரியும் ஒரு வழியும் இல்லாமல் தவளையைத் தன் அறைக்கு வரவழைத்தாள். அது ராஐகுமாரிக்குச் சமானமாகத் தட்டில் சாப்பாடு கெண்டுவருமாறு அழைப்பித்துச் சாப்பிட்டது. அது கேட்பவற்றையெல்லாம் அரசகுமாரி அருவருப்பு ஏற்பட்டாலும் அதனைத் தட்டிக் கழிக்க முடியாது செய்து கொடுத்தாள். கடைசியாகத் தவளை, ‘எனக்குக் களைப்பாக இருக்கிறது. படுக்கப்போகின்றேன். உன் கட்டிலைத் தட்டிப்போடு. என்னை தூக்கி அதில் விட்டுவிட்டுக் கதவைச் சாத்திவிட்டு வா…………’. என்று கட்டளை பிறப்பித்தது. அரச குமாரியும் தவளையின் ஆணைகளுக்கு எல்லாம் பணிந்தாள்.

தவளையைக் கட்டிலில் விட்டுக் கதவைச் சாத்திவைத்து விட்டு வந்த ராஐகுமாரி திடுக்குற்றாள். அங்கு தவளையைக் காணவில்லை. பதிலாகக் கட்டிலில் அழகிய ராஐகுமாரன் ஒருவன் படுத்திருக்கக் கண்டாள். பின் கதவைத் திறந்து கொண்டு தந்தையிடம் ஓடிச் சென்று நடந்தவைகளைக் கூறினாள்.

இதற்கிடையில் ராஐகுமாரனும் வந்து அரசனை வணங்கித் “தான் ஒரு ராஐகுமாரனாக இருந்தான் என்றும், ஒரு முனிவரின் சாபத்தால் இவ்வாறு தவளையாய் மாறினேன் என்றும், யாராவது ஒரு ராஐகுமாரி தீண்டப்பெறின் உனது சுய உருவை மீளப்பெறுவாய் எனும் சாபவிமோசனத்தால் இன்று இவ்வதிசயம் நடந்தது” என்றும் கூறிநின்றான். அவனது அழகையும் நற்குணங்களையும் கண்ட அரசன் தன் மகளை அவனுக்கே மணம் முடித்து வைத்தான்.

பனடோல்


பனடோல் – சிறுகதை


டிஷாந்த் சிவகுமாரன்


முற்குறிப்பு :-
01. இந்தக் கதை எங்கோ ஒரு ஊரில் எங்கோ ஒரு மூலையில் விரியும் கதை இல்லை. இதன் உப கூறுகள் ஒவ்வொன்றும் எம்மைச் சுற்றியே புனையப்பட்டவை.
02. இந்த உயிருள்ள சம்பவத்தில் புனையப்படும் பெயர்கள் அனைத்தும் உயிரற்றவை.


*******************************


சம்பவம்: – 01

யமுனா – அசோக்

-Hey

-Hai

-Dalu…………….

Y u r not Replying me………..?

-………………..

-……………….

-R u angry with me …………..?

– Who is Janu ?

-Y…….?

-En ne ava photova like pannina ?

-Aei

-Chellam

-En Neduka ennoda sandai poduta? Aval school Friend da……….

-Unakku naan seththa ninmathinda naan sakitan……..

– De……………. otu photokku like pannurathu kuttama…………..?


சம்பவம் – 02


சமீர:-

சமீரவின் கதை சற்று வித்தியாசமானது. 14 வயது நிரம்பிய சிறுவன். வீட்டுக்கு மூத்த பிள்ளை. தங்தை கணித ஆசிரியர் அன்பானவர் கண்டிப்பவர். எவ்வளவு படித்தும் அவனுடைய 1350ப மூளையினால் அட்சர கணிதங்களையோ நிறுவல்களையோ விளங்கிக் கொள்ள முடியவில்லை. புதிதாகப் புகுந்த தொடை புதிய பிரச்சனை அவனுக்கு. தந்தை கண்டிப்பானவர். கடந்த தவணைக் கணித புள்ளிகள் குறைவடைந்ததால் கடுமையாக நடந்து கொண்டார். தான் கணித ஆசிரியர் தனது மகன் 40 புள்ளி எடுப்பதா எண்டு சினந்து கொண்டார். அவனுக்குப் புரியாத சூனியத்தொடைகளைப் புரிய வைக்கவோ அட்சர கணிதங்களின் சூத்திரங்களைத் தெளிவாக்கவோ அவர் முயலவில்லை .


கணிதப் பரீட்சை முடிந்து வந்த சமீர சற்றுச் சோர்வாகவே இருந்தான். கடந்த சில நாட்களாய் அவனால் சரியாகத் தூங்க முடியவில்லை. தந்தை கவனிக்கவில்லை. தாய் பிள்ளை படிக்கிறான் எண்டு மகிழ்ச்சியில் இருந்தாள். இருந்தாலும் ஏதோ உறுத்தியவாறு இருந்தது அவளுக்கு. சீனி வாங்கப்பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்றவள் 8 மணி சீரியல் பத்தி கதைச்சு கொண்டிருக்க………


“இப்ப தான் பொடியன் 4 பனடோல் காட் வாங்கிட்டுப் போறான்….”. பின்னாலேயே நீங்களும் வாறிங்களா என்றான்.


சம்பவம் – 03


முஸ்தபா:-

வீட்டுக்கு ஒரே பிள்ளை வயது 16. க.பொ.த சாதாரண தரம் பரீட்சைகள் நடந்தவாறு உள்ளது.


-Dada……….சல்லி தாங்க 200 Rs.

– ஏன்டா……???

– போனுக்கு ரீலோட் போடணும்.

– மவன் சும்மா விளையாடாத. விடிஞ்சா Science Exam போய் படிக்கிற வேலையைப் பாரு…

– இப்போ தரப்போறிங்களா இல்லையா வாப்பா ………..

– உனக்கு செல்லம் கூடிட்டு Exam Pass பண்ணாட்டி பண்ணி தான் மேய்க்கணும்.

– புள்ள கேக்கிறான் இல்ல குடுங்களன். இந்தா நான் தாறன்.

– உள்ளபோடி.. நீ தான் அவனை கெடுக்கிறது. நாளைக்குப் படிக்காம பண்ணி மேய்க்கப் போறான் பாரு..

– நான் பண்ணி மேய்க்கப் போறானா…?

– ஓம்டா… Exam Pass பண்ணாட்டி பண்ணிதான் மேய்ப்ப.


அவன் உம்மா வஞ்சிக்கப்பட்டதையும் தான் பண்ணி மேய்க்க போறன் என்பதையும் அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விறுவிறு எண்டு மாடி படி ஏறி சென்றவன் கதவை அடித்தச் சாத்திக்கொண்டான்.


சம்பவம் 04


திலினி – ரணவக்க:-


திலினி – ரணவக்க பள்ளிப் பருவத்தில் இருந்து காதலர்கள். ரணவக்க திலினி மீது உயிரை வைத்திருந்தான். திலினியும் தான். இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமண ஒழுங்குகளும் நடந்தவாறு இருந்தன. ரணவக்க தாயின் மீது அளவுகடந்த பாசம் உடயவனாய் இருந்தான். எதையும் தாயிடம் சொல்லாமல் செய்ய மாட்டான். திலினியைக் காதலிப்பதையும் தாயிடமே முதலில் சொன்னான்.


தாயிடம் அனுமதி பெற்ற பின்பே திலினியிடம் தான் முதலில் தான் உன்னைக் காதலிக்கின்றேன் என்று தெரிவித்தான். திலினி இது குறித்து பொறாமை கொண்டவளாகவே இருந்தாள்.


”இதெல்லாம் சரிவராது. நாளைக்கு நீ நில்லு என்டா நிக்கணும் இரு என்டால் இருக்கணும் நான் எப்புடி உன் அப்பாவை வைச்சுக்கின்றன் அதே போல நீயும் இருக்கணும் ” என்ற திலினியின் தாயின் அறிவுரைக்கு இணங்க அவள் ரணவக்கவின் அன்பை சோதிக்கத் தொடங்கினாள்.


வலிந்த ஒரு சண்டையை உருவாக்கி கொண்டு, 4 பனடோல்களை உட்கொண்டுவிட்டு தாயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.


கதை சொல்லி:-


சம்பவங்கள் யாவும் கதை சொல்லியை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள். கதை சொல்லி 27 வயது நிரம்பிய இளைஞன். மருத்துவ விடதியில் Intern Medical Officer . 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் அவன் வாழ்வு அந்த விடுதியைச் சுற்றியே பின்னப்பட்டதாய் இருந்தது. கழிந்து போன கடின இரவால் அவன் மனதளவாலும் உடலளவாலும் சோர்ந்திருந்தான். அவன் கண்கள் விடிந்தும் விடியாமல் பாதி தூக்கத்தில் இருந்தவாறே காணப்பட்டன.


-” Good Morning docter”.


வழமையான அதே செந்தழிப்பான முகத்துடன் அந்த விடுதி பிரதான தாதி அவனை வரவேற்றாள். அவனுக்கு அவள் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம் அவள் அம்மா நினைவுக்கு வருவாள். அவள் சிரிப்பும் கவனிப்பும் மட்டுமே அவனை நகர்த்திக் கொண்டிருந்தது.


– Good Morning Sister.


– Docter 4 அட்மினும் இருக்கு ..


– 4ஆ…??


– ம்ம்;… 4லும் பனடோல் Poisioning


– ஐயோ… காலங்காத்தால Poisioning ஆ….


2 பனடோல் தாங்க சிஸ்டர் தலை இடிக்குது.


பனடோல் சொல்லும் கதை:-


Generic name: Paracetamol

Trade Name: Panadol , Tylenon எண்டெல்லாம் என் பேரச் சொன்னால் உங்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டு ஓடுவீங்க. ஆகவே பனடோல் என்றே ஆரம்பிக்கிறேன். அமெரிக்காவின் எங்கோ ஒரு மாநிலத்தில் 1890 களின் பிற்பகுதியில் நான் உருவாக்கப்பட்டேன். 1950 களின் பிற் பகுதியில் சகலர் கைகளிலும் இலகுவாக புழக்கத்திற்கு வந்தேன். தீங்கினை விளைவிக்காத சிறந்த மலிவான வலி நிவாரணி நான். நான் என்று நினைக்கும் போதெல்லாம் அஃறினையான எனக்கு பெருமையும் திமிரும் அதிகமாக இருப்பதைப் போல் உணர்கின்றேன்.


ஏன் இருக்கத்தானே வேணும்….??


இந்தக் கதையின் தலைப்பானது கூட எனக்கு இன்னமும் பெருமையாக உள்ளது.


என்னை வாங்குவதற்கு வைத்தியர்களின் சிபாரிசு சிட்டை தேவையில்லை. இலகுவாக பெரிய பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய பார்மசிகள் வரை என்னைப் பெற்றுக்கொள்ளலாம். நான் உணவுக் கால்வாய் அகத்துறிஞ்சப்பட்டு ஈரலால் நச்சுருக்கப் படுகிறேன். நான் உருவாக்கும் NAPQI எனும் நச்சுப் பதார்த்தம், ஈரலினால் உருவாக்கப்படும் GLUTHAIONE ஆல் நச்சு நீக்கப்படுகின்றேன்.


இடை குறிப்பு:-


பனடோல்கள் பாவித்து தற்கொலை முயற்சித்து கருட புராணத்தில் விபரிக்க மறந்த இன்னுமொரு தண்டனை அதன் விளைவுகள் அவ்வளவு பாரதூரமானவை !!!


ஈரல்கள் சொல்லும் கதை:-


1. யமுனாவின் ஈரல்:-


யமுனா 40 பனடோல்களை உட்கொண்டாள். உட்கொண்ட உடனே மரண பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. தாயிடம் சொன்னாள். அரக்க பரக்க பாய்ந்தடித்தும் 30 நிமிடங்களுக்குள்ளேயே வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டாள். கதை சொல்லியின் உத்தரவுக்கு அமைய அவளுக்கு வாந்தியை உண்டாக்கும் மருந்து கொடுக்கப்பட்டது.


அவள் பெருகுடல் சிறுகுடல் ஊடு சிறுத்து வாய்வழி வெளிவரும்படி வாந்தி எடுத்தாள். அவள் உட்கொண்ட பனடோல்களில் மிகச் சொற்ப அளவே அகத்துறுஞ்சப்பட்டது. மீளவும் அவளுக்கு Activated Charchol குடுக்கப்பட்டது. அது இரப்பையை தாண்டி சிறுகுடலில் புகுந்த பனடோலின் அகத்துறுஞ்சலைக் குறைவடையச் செய்தது.


நானும் தயாரகவே இருந்தேன். யமுனா ஆரோக்கிமானவள். எந்தவித பாலியல் நோய்களுக்கும் உட்படாதவள். அவள் நீர்ப்பீடன சக்தி திடமாகவே இருந்தது. ஆகவே நானும் வலிமையானவனாகவே இருந்தேன். அந்த NAPQI அளவினை நச்சு நீக்குவதற்கு எனக்கு மிகவும் குறைவான அளவு GULTHAIONE தேவைப்பட்டது. அதிகளவு GULTHAIONE உருவாக்குமாறு மேலும் எனது தொழிற்படு அலகுகளுக்கு உத்தரவிட்டேன்.


02. திலினியின் ஈரல்:-


நான் அதிகளவு எனது கதையைச் சொல்லத் தேவையில்லை. திலினி உட்கொண்ட அளவை நான் பொருட்படுத்தவே இல்லை. என்னிடம் போதியளவான GULTHAIONE இன்னமும் இருந்தன.


3. முஸ்தபாவின் ஈரல்:-


முஸ்தபா 20 PANDOL களை உட்கொண்டிருந்தான் மரண பயம் தொற்றிக் கொண்டாலும் அவன் தான் அவமதிக்கப்பட்டதை நினைத்து வருந்தினான். தாயார் அவனை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 4 மணித்தியாலங்கள் கடந்திருந்தன. அவன் உட்கொண்ட பனடோல்கள் அனைத்தும் அகத்துறுஞ்சப்பட்டு எனது வேலைப் பழு அதிகரித்திருந்தது. கைவசம் இருந்த GULTHAIONE எல்லாம் தீர்ந்த நிலையில் நான் களைப்புற்று இருந்தேன். எனது தொழிற்படு அலகுகள் சில NAPQIஆல் உருவாக்கப்படும் FREE RADICAL இனால் பாதிக்கப்பட்டு இறப்பதை நான் பார்த்தக்கொண்டிருந்தேன்.


கதை சொல்லி மிக துரிதமாகச் செயற்பட்டான். முஸ்தப்பாவின் குருதி மாதிரிகள் சோதிக்கப்பட்டன. குருதியில் உள்ள பனடோல் செறிவு அளக்கப்பட்டன. அவன் உள்ளுணர்வு இது TOXIC ஆ எண்டு அறிவுறுத்த அறிவுறுத்த, அவன் தெளிவாகவும் நிதானமனகவும் செயற்பட்டான். முஸ்தப்பாவின் உடல் நிறை அளக்கப்பட்டது. ஏதோ புத்தகங்களை எல்லாம் தட்டினான். வரைபு ஒன்றைத் தேடினான்.


“Miss Toxic Dose NAC Infusion Ready பண்ணுங்க…” என்ற அந்த சத்தத்தைக் கேட்டதும் நான் புதுப் பொலிவுற்றேன்.


NAC அல்லது N-Acetyl Cysteine.


N-Acetyl Cysteine Gluthaione ஐ உருவாக்கும் ஒரு மூலப் பொருள். அது கிடைத்தும் என் தொழிற்பாட்டு அலகுகளை நான் பாதுகாத்துக் கொண்டேன்.


4. சமீரவின் ஈரல்:-


சமீரா மயக்கமுற்ற நிலையில் தந்தையாரால் அவதானிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பொழுது மணித்தியாலங்கள் 6 கடந்திருந்தன. அவன் அருகே கிடந்த உடைக்கப்பட்ட பனடோல் பைக்கற்றுக்கள் 4 உம் SORRY DADY என்ற கடிதமும் அவரை பதைக்க வைத்தது. விடுதியில் இருந்தும் அவர் புத்தா…. புத்தா…. என்று அழுதவாறே இருந்தார்.


நான் தொழிற்பாடு முற்றும் இழந்த நிலையில் காணப்பட்டேன். எனக்கு சற்று நினைவு தெரியும் போது அந்தக் குளிரை என்னால் உணர முடிந்தது. என்னை சுற்றிய அவதானிப்பு கருவிகளின் பீப்…..பீப்…. சத்தங்களை என்னால் நன்றாக கேட்க முடிந்திருந்தது. கதை சொல்லி சமீராவை ICU இல் சேர்த்திருக்க வேண்டும். நான் இப்போது ICU இல் இருக்கின்றேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.


எனது சகாக்களின் நலன்களை விசாரிக்க ஆரம்பித்தேன். நுரையீரல்களும் இதயமும் தொழிற்படு நிலையிலேயே இருந்தன. சிறுநீரகம் சற்றுக் களைப்பற்று இருந்தது. இப்போது நான் செய்ய வேண்டிய சில வேலைகளையும் அவன் சேர்த்து செய்து கொண்டிருந்தான்.


என்னால் தொற்று நீக்கப்பட வேண்டிய அமோனியா சமீரவின் மூளையினைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடத் தொடங்கினேன்.


முடிவுரை


மணித்தியாலச் செய்திகள்:-


1. காதலியின் தற்கொலை முயற்சியால் மனமுடைந்த இளைஞன் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அவர் வீட்டில் மீட்டெடுக்கப்பட்டார். விடுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் யமுனா – அசோக் பொறுமையாகப் பேசி சுமூகமாகப் பிரிந்து கொண்டார்கள். அசோக் மேற்படிப்பக்காக வெளிநாடு செல்ல இருக்கிறான். யமுனா தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.


MO/ Psychiatry

Dr Doctor,

This 16 years old boy presented with self ingestion of 20 PCM tablets following a quarrel with parents. Plz be kind enough to see this pt and do needful.

Thank you

Dr Balachchanthiran


*************************************


IMO/Medical ward 16

Dear Doctor,

This child need inward treatment plz be kind enough to transfer this pt ward 20 once your management finish.

Thank you

Dr Thivaakaran


**********************************


MO/ OPD

Plz be kind enough to transfer this pt to ward 20 for further management.

Thank you

Dr Balachchanthiran


*******************************************


2. சிகிச்சை முடிந்து வெளியேறிய முஸ்தபா பல் இடுக்குகளில் படிந்த கறுப்பு நிற கரியை நினைத்துப் பெரிதும் வருந்தினான். பின் அவன் பல் வைத்தியரைச் சந்தித்ததாகவும் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் பல் வைத்திய நண்பர்கள் சொல்லி கதை சொல்லி தெரிந்து கொண்டான்.


3. சமீரா தாய் தந்தையரின் அரவணைப்பால் இலகுவில் குணமடைந்தான். இருந்தாலும் அவனும் அவன் பெற்றோர்கள் தனித்தனியே counseling க்கு அனுப்பப்பட்டார்கள். கூட்டாகவும் counseling செய்யப்பட்டார்கள்.


5 நாட்கள் கழித்து கதை சொல்லி ஒரு பரிசு கொடுத்தான். அதை திறந்து பார்த்த சமீர அதிர்ச்சியடைந்தான்.


– “அண்ணே…!!! விளையாடாதீங்க உங்களுக்கும் 40 ஏ கணிதத்துக்கு….”

– “வேணும் எண்டா என் அம்மாக்கும் maths teacher க்கும் PHONE பண்ணி தாறன் கதை..”

– “உண்மையாவா…”

– “ம்ம்ம்….. இந்தா 10ஆம் அண்டு Report இவ்வளவு நாள் பக்குவமா வைச்சிருந்தது உன்ன மாரி ஒருதனுக்கு காட்ட தான். இத நீயே வைச்சுக்கோ…”


இன்னும் 14 வருடங்கள் களித்து சமீரவும் கதை சொல்லி போய் எங்கேயோ ஒரு விடுதியில் Intern Medical Officer ஆக இருக்கலாம்.


4.கதை சொல்லி 6ம் கட்டில் Dengue pt க்கு Urine output குறைஞ்சதைப் பற்றி யோசித்தவாறு இருந்தான்….


முற்றும்
பிற் குறிப்பு:-


– ஒரு NAC Vial இந்த விலை 17000. ஒரு Panadol Poisoning க்கு 150000-200000 வரை அரசு வைத்தியசாலையில் செலவிடப்படுகின்றது. இதனால் சில உயிர் காக்கும் மருந்துகளான Asprine, Enoxaprine சில Antibiotics முடிவடையும் போது அதனை வாங்க வைத்தியசாலையில் போதிய பணம் இல்லாமல் போகின்றது.


– தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது. எங்கள் முட்டாள் தனங்களால் எம் அன்புக்குரியவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கின்றோம்.