நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வியாழன், 22 ஏப்ரல், 2021

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*_🌺தவிர்க்க முடியாத_*
*_சில இழப்புகள்.._*

*_🌺வெளிப்படுத்த முடியாத_* 
*_சில உண்மைகள்.._*

*_🌺அனுபவிக்க முடியாத_* 
*_சில சந்தோஷங்கள்.._*

*_🌺இது தான் வாழ்க்கை..!!_*

*_🌺இனிய காலை வணக்கம்_*

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*தோல்விக்கு 'குட்பை' சொல்லுங்கள்..!!*

எடுத்த முயற்சிகளிலெல்லாம் தோல்வி.. எங்குப் பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின்நோக்கித் தள்ளிவிடுகிறது உலகு. எனக்கும் மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..நான் மட்டுமே இந்த உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவன். இப்படி மனிதன் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் வாழ்ந்தென்ன லாபம்? என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாலே அவன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையில் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தால்... ஒரு மனிதன் எத்தனை நாள்தான் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்க முடியும். இறுதியில் இதனால் விளைவது விரக்தி. விரக்தியின் முடிவு அல்லது வெளிப்பாடுதான் இந்த தற்கொலை எண்ணம்.

இப்படித்தான் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தோல்விகளனைத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு, துக்கம் மிகுதியால் இனி வாழவே தான் அருகதையற்றவன் என்று எண்ணி தற்கொலைக்கும் முயல்கிறார்.

இன்றிரவு என்னுடைய கதையை முடித்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்துவிடுகிறார். நடு இரவு.. தற்கொலை எண்ணத்துடன் வெளியில் நடக்கிறார். அருகில் அழகான ஏரி. அந்த ஏரியில் குதித்து தன்னுடைய கதையை தானே முடித்துக்கொள்ள எண்ணி விரைகிறார்.. நிசப்தமான சூழ்நிலை.. உடலுக்கு இதமான குளிர்காற்று வீசுகிறது.. இரவில் பனிக்கொட்டுகிறது.. ஏரியின் அருகில் வந்துவிட்டார்.. இனி குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் என்ற திடமனதோடு ஏரியை நெருங்கிவிட்டார்.. இதோ குதிக்கப்போகிறார்.. ஏரி நீரில் அழகான வெண்ணிலா பிரதிபலிக்கிறது. அடர்ந்த இரவு வானில் நட்சத்திங்கள் ஜொலிக்கிறது.

இலேசாக அடித்த காற்றில் தலைகேசம் பரக்கிறது. அருகில் தாயார் இருந்து பாசத்தோடு தலையை கோதிவிடுவது போன்ற உணர்வு. தாயாரை நினைத்ததும் மனது விம்முகிறது. நீரில் கண்ட நிலவே அழகாக இருக்கிறது. அலைந்தாடும் நீரில் அதுவும் அசைவது போன்ற தோற்றத்தை ரசிக்கிறது. நீரில் இருக்கும் தோற்றமே இப்படி என்றால்.. நிஜமான நிலா எப்படி இருக்கும் என்று வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.

முழுநிலவும் ஆகாயத்தில் ஒளிவெள்ளமாய் ஜொலிக்கிறது. நட்சத்திரங்கள் கூடவே கண்கள் சிமிட்டு ஜாலம் செய்கிறது. என்ன அருமையான இயற்கை... இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அழகு...! இந்த நிலவெங்கே இருக்கிறது.? நாம் இருக்கும் பூமி எங்கே இருக்கிறது..? பூமியைச் சுற்றும் நிலவு... சூரியனைச் சுற்றும் பூமி..இப்படி ஒன்றை ஒன்று சார்ந்தேதானே இயங்கிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஒருநாள் இனி எல்லாமே முடிந்துவிட்டது. அவ்வளவுதான் என்று ஒரு நாளேனும் எண்ணியிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருநாளேனும் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவைத்திருந்தால் பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கும்?

இப்படி மனம் சிந்தனை செய்கிறது..

இப்படி சிந்தனைகளை ஓடவிட்டவர்.. திடீரென தான் எதற்கு வந்தோம்.. இப்போது என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கிறோம் என்று எண்ணினார்.

தற்கொலை எண்ணத்துடன் விரைவாக வந்த அவர், முதலில் இயற்கை ரசித்ததும்,, பிறகு இயற்கையின் செயல்பாடுகளைப் பற்றி சிந்தனை செய்ததையும் நினைத்தார். தற்போது தற்கொலை செய்யும் எண்ணத்தின் வீரியம் குறைந்திருந்தது. அது வேகமற்று செயலிழந்திருப்பதை உணர்ந்தார்..

அமைதியான சூழ்நிலையில் இந்த பிரபஞ்சம் தன்னிடம் ஒரு செய்தியை சொல்வதாக உணர்ந்தார்.

"உன் உயிரை எடுத்துக்கொள்ள எனக்கு மட்டுமே, படைத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. உனக்கோ, உன்னைச் சார்ந்தவருக்கோ அந்த உரிமை இல்லை.. நீ என்னில் ஒரு அங்கம்.. உன்னை தேவை என வைத்திருப்பதும், தேவையில்லையென நீக்கம் செய்வதும் என்னால் மட்டுமே முடியக்கூடிய செயல்.. இப்போது நீ செல்.. உலகில் வெல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. உனக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரியும். உன்னில் நீ தாழ்வு எண்ணம் கொள்ளாதே. மற்றதை உன் மனமே பார்த்துக்கொள்ளும்" என்று அறிவுறுத்தியதாகப்பட்டது.

உடனே நான் ஏன் சாக வேண்டும்? தற்கொலை செய்ய வேண்டும்? தற்கொலை செய்துகொள்ள, உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லையே.. படைத்தது பிரபஞ்சமாகிய நீ, உயிர்த்தது பூமியில்... அப்படி இருக்கையில் என் உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கென்ன உரிமை இருக்கிறது. என்ற சிந்தனை மேலோங்கியது.

உடனே அந்த இடத்திலிருந்து 'சட்'டென எழுந்துவிட்டார். ஒரு உத்வேகம் தன்னுள் எழும்பியதை அவர் உணர்ந்தார். உடனே விரைந்தார் வீட்டிற்கு..உலகினில் உயர்ந்தார். யார் அவர்.. ?

பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேனாட்டவர் தான். தனது 32 வயதிலேயே இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை தற்கொலை எண்ணத்தோடு சென்றவர் இவர்.. அப்போது தற்கொலை செய்திருந்தால் உலகிற்கு அவர் யாரென்று தெரியாமலேயே போயிருக்கும்.
இந்த மேதை செய்த சாதனைகளனைத்தும் இல்லாமலேயே போயிருக்கும் இல்லையா?.

இயற்கையின் மடியில் அவர் இறுதி மூச்சுவிடும்போது எந்நிலையை எட்டியிருந்தார் தெரியுமா?

1. கணித மேதை(Mathematical Genius),
2. பொறியாளர்(Engineer)
3. கவிஞர்(Poet)
4. கட்டிடக்கலை நிபுணர்(Architect)

என பலதுறையில் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனைகளைப் படைத்தவர். கிட்டதட்ட நூற்றிஎழுபது கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்ற மிகப் பெரிய நிலையை, சாதனையை எட்டியிருந்தார். ஒரு வேளை அவர் தனது 32 வயதில் தற்கொலை செய்திருப்பாரேயானால் மேற்கண்ட சாதனைகளும் சாத்தியமில்லை. இந்தக் கட்டுரைக்கு அவர் உதாரணமாகவும் வந்திருக்க முடியாது.

எனவே நண்பர்களே.. வாழ்க்கையில் மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் ஏதாவது ஒருவிதத்தில் துன்பம், துயரம் இவை போன்றவைகள் வரவே செய்யும். இது இயற்கை. இயற்கையில் மேடுபள்ளங்கள் இருப்பதுபோல...மனிதனுக்கும் இன்ப துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயற்கை.

இவற்றிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக, சமயோசிதத்துடன், துக்கத்தை உள்வாங்காமல், இயற்கையாக, இயல்பாக நமது மனத்தை மாற்றி, அந்த துன்பத்தையே ஒரு அனுபவப் பாடமாகக்கொண்டு மீண்டும் வெற்றிப்பெற எண்ண செய்ய வேண்டும் என்று சிந்தித்து, புத்துணர்வு பெற்று, புரட்சிகரமாக செயல்களை செய்து, வெற்றிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். இப்படி யார் செய்கிறானோ.. அவனே மனிதன்.. அவனே வெற்றியாளன்.. அவனே இந்த பிரபஞ்சத்தின் உண்மையான உயிர்நாடி..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

*💗படித்ததில் பிடித்தது...*

*இன்னும் பிறக்காத எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு மன்னிப்பு கடிதம்..!!*

இன்னும் பிறக்காத எம் தலைமுறைக்கு கனத்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன். சுட்டெரிக்கும் வெயிலின் வியர்வை வாசம், எழுத்தின் அனைத்து புள்ளிகளிலும் படரவிட்டு எழுதுகிறேன்.

நீங்கள் படிக்க இந்த பூமி மிச்சம் இருக்குமா என்ற அச்சத்துடன் இதை தொடங்குகிறேன். தொடர்ந்து கடிதம் எழுதுவது கிண்டலுக்கு உள்ளாக கூடும் என்று தெரிந்தும் இதை எழுதுகிறேன். மனதின் அடியாழத்திலிருந்து இதனை எழுதுகிறேன்.

இது மன்னிப்பு கடிதம். நிறைய பாவங்களை நாங்கள் செய்துவிட்டோம். அதனால், யாருக்கும் தெரியாமல் கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் ஒருவர் செவிகளில் மட்டும் செய்த பாவங்களை சொல்லி, மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. எங்கள் பாவங்கள் எப்படி பகிரங்கமானவையோ, அது போல் எங்கள் மன்னிப்பும் பகிரங்கமானதாக இருக்க வேண்டும். அதனால் கண்ணீருடன் இந்த மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறேன்.

ஆம் கண்ணீருடன்தான். தெரிந்தே செய்யப்பட்ட எங்கள் பாவங்களை இந்த கண்ணீர் என்றும் கழுவாது என்று விழித்திருக்கும் எம் தலைமுறைக்கு நன்கு தெரியும். அது தெரிந்ததால் வரும் மன அழுத்தம் வற்றாத கண்ணீரை பெருக்கடுக்க செய்கிறது. அந்த கண்ணீருடம் இதை எழுதுகிறேன்.

நாங்கள் செய்த தவறுகளை எங்கள் முந்தைய தலைமுறை தடுக்க தவறியது, வேடிக்கை பார்த்தது. அதனால், அவர்களுக்காக சேர்த்தும் உங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்த கடிதத்தை எழுத துவங்குகிறேன்.

*வேடிக்கை மனிதர்கள் நாங்கள்...*

வெயில் சுட்டெரிக்கிறது. இது கோடை காலம் அதனால் தான் இந்தளவிற்கு வெயில் என்று எங்களுக்கு நாங்களே பொய் சமாதானம் சொல்லிக் கொண்டு, கடக்க விரும்பவில்லை. இந்த வெயிலுக்கு நாங்களும் ஒரு வகையில் காரணம். ஆம். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மட்டுமல்ல, பெரு மழைக்கும் ஒரு வகையில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் நாங்களே, நாங்கள் மட்டுமே காரணம்.

கணக்கு வழக்கில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த போது, வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். மனதில் கரைப்படிந்த கரை வேட்டிகளின் துணையுடன் சில தனி நபர்கள் காடுகளையும், மலைகளையும் சுரண்டிக் கொண்டிருந்த போதும் எங்களுக்குள் நாங்கள் சண்டையிட்டு கொண்டோமே தவிர அவர்களை எதிர்த்து சண்டையிடும் துணிச்சலற்று இருந்தோம். நாங்கள் கோழைகள் என்றறிந்த ஒரு கூட்டம், தைரியமாக தாயின் பால் சுரக்கும் மார்பையே அறுக்க துணிந்தது. ஆம் ஆற்றில் கை வைத்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு குவியல் குவியலாக மணலை சுரண்டியது. அதை தடுக்க நெஞ்சுரமற்று நின்றதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மலைகள், காடுகள், ஆறுகள் எங்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆனால், இதை சுரண்டும் அனைத்தும் எங்களின் கண்டுபிடிப்புகள். சிகப்பிந்திய பழங்குடி தலைவன் துவாமிஷ் சொன்னான், “பூமி மனிதனுடையது அல்ல. மனிதம் பூமியினுடையவன் என்பதை.

ஒரு குடும்பத்தை ஒன்றாக்கும் ரத்தத்தைப் போல எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. பூமிக்கு நடப்பதெல்லாம், பூமியின் பிள்ளைகளுக்கும் நடக்கும். உயிரின் வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஓர் இழை மட்டும் தான். அந்த வலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத் தானே செய்துகொள்வது தான்...” என்று. இது எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இதை பழங்குடியின் பாமர சொற்கள் என்று பரிகாசம் செய்தோம்.

இயற்கை கண்ணியில் நாங்களும் ஒரு அங்கம் என்று மறந்து போனோம். நாகரீகத்தின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் சுரண்டினோம்... சுரண்டினோம்... மேலும் மேலும் சுரண்டினோம், துவாமிஷ் சொன்னதை ஒரு நாள் உணர்ந்தோம் நாங்கள் பூமிக்கு செய்த அக்கிரமங்கள் அனைத்தும் எங்களுக்கு நாங்களே செய்து கொண்டவை என்று. ஆனால், அப்போது எல்லாம் கை மீறிப்போய்விட்டது.

ஆனால், அப்போதும் இயற்கை எங்களை மன்னிக்க தயராக இருந்தது. நீங்கள் செல்லும் பாதை தவறு, திருத்திக் கொள்ளுங்கள் என வாய்ப்பை பல முறை வழங்கியது. ஆனால், எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும் போது, அதை உதாசீனம் செய்வோம்.அதை தான் செய்தோம். மீண்டும் தீமையின் பாதையிலேயே பயணித்தோம். இந்த பூமி, அதன் செல்வங்கள் அனைத்தும் எங்களுக்காக, எங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்று இருமாப்பில் அனைத்தையும் போட்டு உடைத்தோம்.

உங்களுக்கென எதையும் மிச்சம் வைக்காமல், அனைத்தையும் அபகரித்து கொண்டுவிட்டோம். அதனால், உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை, எங்கள் தலைமுறையை மன்னித்துவிடுங்கள்.

*பணம் கொடுத்து எதையும் வாங்க முடியாது...*

என் தாத்தா என் அப்பாவிடம் அழகிய புவியை ஒப்படைத்து சென்றார். அவரிடம் செல்வம் குவிந்திருந்த போதும் மண் வீட்டில் தான் வாழ்ந்தார். பெரும்பாலும், மானாவாரி உணவுவகைகளையே உண்டு வாழ்ந்தார். ஏன் குடிசையில் வாழ்கிறோம், ஏன் மானாவாரி நிலத்தில் விளைந்த உணவு வகைகளை உண்கிறோம் என்று தெரிந்து செய்தார். ஆனால், என் அப்பா படித்த கல்வி இதையெல்லாம் அநாகரீகம் என்றது. வானுயர்ந்த கோபுரங்கள், பெரிய கட்டமைப்புகள்தான் வளர்ச்சி என்றது. என் அப்பா அதை அரை மனதனுடன் ஏற்றுக் கொண்டார். இயன்ற வரை இயற்கையை சுரண்டாமலும் இருந்தார்.

ஆனால், நாங்கள் வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கத்திற்குள் நுழைந்தோம். வளர்ச்சி என்ற பெயரால் எங்களுக்கு எதுவெல்லாம் காட்டப்பட்டதோ. அது அனைத்தையும் நம்பினோம். பொருள் வாங்கி குவிப்பதுதான் கௌரவம் என்று சொல்லப்பட்டது. அதனால், அனைத்தையும் வாங்கி குவித்தோம். வாழ்வதற்காக அல்லாமல் வாங்குவதற்காக உழைத்தோம். ஒருவருக்கு இரண்டு கைபேசிகள், நான்கு காலணிகள், நாற்பது சட்டை பேண்ட்கள் என வாங்கி குவித்தோம்.

ஒரு நாள் நாங்கள் வாங்கி குவித்த பொருட்கள் தான், இந்த புவிக்காக எமன் என்று புரிந்தது. எந்த அறிவியல் எங்களை அதிகம் நுகர சொல்லி தூண்டியதோ, அதே அறிவியல் இப்போது சொல்கிறது, ஒரு ஜீன்ஸ் தயாரிக்க ஒன்பதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும், ஒரு ஜோடி காலணி தயாரிக்க இருபதாயிரம் லிட்டர் நீர் தேவை என்றும்.

ஆனால், இது எங்களுக்கு தெரிய வந்த போது நிலைமை படு மோசமாகிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக சாவுகள் விழத் துவங்கிவிட்டது. சொல்லப்போனால், எம் தலைமுறைக்கே இயற்கையான தண்ணீரின் சுவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. எங்கள் டி. என். ஏவில் படிந்து இருப்பதெல்லாம் செயற்கை நீரின் சுவை மட்டுமே. பாட்டில் நீரின் சுவை அது.

சொந்தப் படுக்கையை மலினமாக்கினால் ஓர் இரவு சொந்தக் கழிவில் மூச்சு முட்டி இறக்க நேரிடும் என்று துவாமிஷ் சொன்ன வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் இப்போது தான் புரிய துவங்கி இருக்கிறது.

இப்போது உணர்கிறோம், ஏசி வாங்கலாம், ஆனால் இயற்கையான காற்றின் புத்துணர்ச்சியை வாங்க முடியாது என்று, அழகான மின் விளக்குகள் வாங்கலாம் ஆனால் ஒரு காலமும் இயற்கையான ஒளி தரும் ஆனந்தத்தை வாங்க முடியாது என்று, குளிர் பானங்கள் வாங்கலாம், ஆனால் எப்போதும் நீரின் சுவையை வாங்க முடியாது என்று. உணர்ந்து மட்டும் இப்போது என்ன செய்ய முடியும்...?

நிச்சயம் இயற்கை மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டிக்காது என்று நம்புகிறேன். தண்டித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். உங்களுக்கு விட்டு செல்ல எங்களிடம் எதுவும் இல்லை, நல்ல அனுபவம் உட்பட. நாங்கள் பட்டாம்பூச்சிக்கு பின்னால் ஓடவில்லை, தும்பியை அமர்ந்து ரசிக்கவில்லை, பறவைகளின் கீச்சு இசையில் இன்பத்தை காணாமல் தீம் பார்க்கில் சந்தோஷத்தை கண்டடைந்தவர்கள் நாங்கள்.

எங்கள் மீது கோபம் கொண்டு தும்பியும், பட்டாம்பூச்சியும், பறவையும் இந்த புவியைவிட்டு செல்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். என்னைவிட அவர்களுக்கு தான் உங்களுக்கு சொல்லி தர அதிக விஷயம் இருக்கிறது.

மீண்டும் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு..!!

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

*💗சிந்தனை கதை..*

*ஒரு சேயும்.. தாய் ஆகிறாள்...!!*

(படித்து முடிக்கும் போது கண்களின் ஓரங்களில் சுரக்கும் கண்ணீரை தவிர்க்க முடியாது)

கிருஷ்ணன் 
விடை தெரியாத கேள்விகளை சுமந்து கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அங்கே நின்றுகொண்டு இருந்த  மணமக்களை பார்த்து கொண்டே  இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் அமைதியாய் அமர்ந்தார்.இன்ஸ்பெக்டர் அவரிடம் "சார் உங்க வேதனை ஒரு அப்பாவா எனக்கும் புரியுது.ஆனாலும் எங்களுக்கும் சில கடமைகள் மனசாட்சிய மீறி செய்ய வேண்டி இருக்கு.இனி நீங்க தான் முடிவு பண்ணனும்"என்றதும் கிருஷ்ணன் தனது செல்போனில் மனைவியை அழைத்தார் .

சில நிமிடத்திற்கு 
பிறகு அவர் மனைவி மாலதி .கலங்கிய கண்களுடன் ஸ்டேஷனுக்குள் வந்தார் .தனது கையில் இருந்த பையை கிருஷ்ணனிடம் கொடுத்தார் .அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தப்படி "இதுல என் பொண்ணு கல்யாணத்திற்கு சேமித்து வச்ச நகைகள் ,பணம் இருக்கு.அவளுக்காக இன்ஸ்யூரன்ஸ்ல கட்டுன பணமும் முடிஞ்சு போச்சு .அதுவும் அவளுக்கு தான்.எங்க காலத்து அப்புறம் வீடும் எழுதி தர்றோம்.ஆனா எங்களுக்கு இந்த பொண்ணு வேணாம் சார்.தாங்க முடியல சார் .

இதுதுரோகம் .
பெத்தவங்களுக்கு புள்ளைங்க செய்யுற பச்ச துரோகம் .அவளோட பத்து வயசுல இருந்து நான் வெளியில டீ கூட சாப்டறது கிடையாது .அதை கூட சேமிச்சு வச்சேன் .எல்லாம் கனவா போயிருச்சு .பரவாயில்லை சார் நல்லா இருக்கட்டும் .ஆனா நாங்க செத்து போனாலும் பாக்க மட்டும் வரக்கூடாது"என்றவர் மாலதியுடன் வேகமாய் வெளியேறினார்.ஸ்டேஷனில் ஓரமாய் நின்றிருந்த காவ்யா .கண்ணீர் விட்டு கதறியப்படி மணமகன் கார்த்தியின் மீது சாய்ந்தாள் .

மாலதி 
தன் நிலை மறந்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சாய்ந்து கிடந்தார்.தனக்கான ஒரே துணையும் இப்போது உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை நினைத்து உடைந்து போனார் .இந்த ஆஸ்பத்திரியில் வைத்து டிரிட்மெண்ட் பாக்குற அளவுக்கு கையில் பணமும் இல்லை என்கிற நிலையில் டாக்டர் வந்து"அவருக்கு ரோம்ப நாளா இதயத்துல பிரச்சனை இருக்கு.இப்போ மோசமான சூழ்நிலையில் இருக்கார் .ஆபரேஷன் பண்ணனும் .உடனே பணத்த கட்டுங்க"என்றதும் உடைந்து போனார் .

மாலதி 
தோள்களில் ஒரு கை ஆறுதலாக பற்ற திரும்பி பார்த்த மாலதி அது காவ்யா என்றதும் விலகி சென்றார்.அவர் அருகில் சென்ற காவ்யா "அப்பாக்கு ஹார்ட் ப்ராபளம் இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரியும் .நானும் அவர் டிரிட்மெண்ட் பாத்துக்குவாறுக்கு எதிர் பார்த்தேன் .ஆனா எனக்கு பெரிய இடமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டார்.

அவர் அப்ப 
இருந்த நிலையில்  நான் சொல்றத அவர் கேட்க கூடிய நிலையில் இல்ல .அதனால தான் என் கூட படிச்ச .நம்மள மாதிரி சாதரண குடும்பத்த சேர்ந்த கார்த்திய கல்யாணம் செஞ்சுகிட்டேன்."என்றதும் கார்த்தி உள்ளிருந்து வந்து "காவ்யா பணம் கட்டியாச்சு.இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபரேஷன் பண்ணிருவாங்க"என்றதும் மாலதி தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார் .

கார்த்தி 
அவரிடம் "இது அவருடைய பணம் தான்ங்க .தன்னை பத்தி யோசிக்காத அப்பா.அப்பா பத்தி யோசிக்குற மகள் .அழகான இந்த குடும்பத்தில் நானும் ஒருத்தன்னு நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கு"என்றதும் மாலதி காவ்யாவை கட்டி பிடித்து கொண்டார் .

கிருஷ்ணன் 
கண் முழித்ததும் தனது மகளை தேடினார்.அவர் முன்பு வந்து நின்ற காவ்யாவிடம் "என் மகளா?இல்ல அம்மாவாடா நீ?என்றதும் அவரது தலையை கண்ணீருடன்  தலை கொதினாள்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

உலகின் கடைசி மனிதன் இங்குதான் செல்வான்..! SeedVault

.

அந்த விதைப் பெட்டகத்தை நிர்வகிக்கும் ஃபெளலரிடம்  இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. 

" இந்த உலகிலிருக்கும் மொத்தப் பனிமலைகளும் உருகிவிட்டன. க்ரீன்லேண்ட், ஐஸ்லேண்ட், ஆர்க்டிக், அண்டார்டிக் என எல்லாம் உருகிவிட்டது. அப்போது இந்த விதைப் பெட்டகத்தின் முன்னே உலகின் மிகப்பெரிய சுனாமி வருகிறது. அப்போது இந்தப் பெட்டகம் என்னவாகும்?"

" ஒன்றும் ஆகாது. அந்த சுனாமியின் உயரத்தைவிட நான்கு, ஐந்து மாடி அதிக உயரம் நின்று, பெட்டகம் பாதுகாப்பாக இருக்கும்..." என்றார். ஆனால், கடந்த மாதம் 130 அடி நீளமுள்ள அந்தப் பெட்டகத்தின் சுரங்கத்தில் நீர் புகுந்துவிட்டது. உலகப் பனிமலைகள் உருகவில்லை. உலகின் பெரிய சுனாமி வரவில்லை. இருந்தும் நீர் புகுந்துள்ளது. இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டதற்கும், இன்று அதனுள் நீர் புகுந்திருப்பதற்கும், உலக அழிவுக்கும், நம் உணவுக்கும், விவசாயத்துக்கும், வாழ்வுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. முதலில் இந்த விதைப் பெட்டகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்தே உலக அழிவு குறித்து, உலகம் முழுக்கவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அரசாங்கங்கள் நேரடியாக உலக அழிவைப் பற்றியெல்லாம் பேசாவிட்டாலும்கூட, பூமி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை, சூழலில் மாற்றம் என பல விஷயங்களைப் பேசி வருகின்றன. அப்படி ஒரு வேளை உலகம் அழிந்தால் ?, விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் ?,  உலகம் அழிந்து அதில் தப்பும் சிறு மனித கூட்டம் உணவில்லாமல் உயிருக்குப் போராடினால் ?,  போன்ற கேள்விகளுக்கு பதிலாய் உருவாக்கப்பட்டது தான் " ஸ்வால்பார்ட் குளோபல் விதைப் பெட்டகம் ".   

நார்வே நாட்டின் ஆளுகையின் கீழிருக்கும் ஆர்க்டிக் பிரதேசத்தில் இருக்கிறது ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டம். இங்கு ஜூன், 19, 2006 அன்று நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லேண்ட் ஆகிய நாடுகளின் பிரதமர்களின் முன்னிலையில் விதைப் பெட்டகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 26, பிப்ரவரி, 2008யில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இங்கு உலகின் பெரும்பாலான நாடுகளிலிருந்து, பல விதமான விதைகள் வாங்கப்பட்டு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரம் வகையான தேங்காய்கள், 4,500 வகையான உருளைக்கிழங்குகள், 35 ஆயிரம் வகையான சோளம், 1,25,000 வகையான கோதுமை, 2 லட்சம் வகையான அரிசி உட்பட, மொத்தம் 15 லட்சம் விதைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பெட்டகம் மொத்தம் 45 லட்சம் விதைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் 30 ஆயிரம் ஆண்டுகால விவசாய வரலாற்றை தன்னுளயீந்தப் பெட்டகம் அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில், ஸ்பிட்ஸ்பெர்கன் எனுன் தீவில் தான் இந்தப் பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இது இங்கு அமைக்கப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் தான், டெக்டானிக் அடுக்குகளின் அசைவுகள் மிகவும் குறைவாக இருந்தன. மேலும், PermaFrost என்று சொல்லப்படும் “நிரந்தர பனிக்கட்டிகள்"அதிகம் இருக்கும் பகுதியாக இது இருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 430 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெட்டகத்தில் வைக்கப்படும் விதைகள் மூன்று அடுக்குகளைக் கொண்ட “ஃபாயில் பாக்கெட்களில்” ( Foil Packets ) ஈரப்பதம் உள் புகாதபடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டகம் (-)18 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 

இப்படியாக உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், அறிவியலாளர்களும் இணைந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பெட்டகத்தினுள் தண்ணீர் புகுந்தது, அறிவியலின் தோல்வியாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, இயற்கையின் ஆகப் பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான வருடமாக 2016 இருந்திருக்கிறது. இதனால், பூமியின் பல மிருதுவான பகுதிகளும் நெகிழ்ந்தன. அப்படித் தான், இந்தப் பகுதியில் இருந்த, உருகவே உருகாது என்று நம்பப்பட்ட நிரந்தரப் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில், இது அத்தனைப் பெரிய பிரச்னையில்லை, உலக அழிவுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று வாதாடிய நார்வே அரசாங்கமுமே கூட, தற்போது, இது ஒரு முக்கியப் பிரச்னைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெட்டகத்துக்கு, தற்போது மீண்டும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 

விதைகளோடு பெட்டக நிர்வாகி ஃபெளலர்

இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பின்னர், மிகப் பெரிய சர்வதேச அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக அழிவு சம்பந்தப்பட்ட மிக முக்கிய விஷயங்களை அரசுகள், மக்களிடமிருந்து மறைக்கின்றன என ஒரு சாரார் குரல் கொடுக்கின்றனர். ஆர்க்டிக்கின் நிரந்தரப் பனிக்கட்டிகள் திடீரென இப்படி உருகத் தொடங்கியிருப்பது, உலக அழிவிற்கான சமிக்ஞை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எது எப்படியாக இருந்தாலும், இந்த பூமி நேற்று போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப்போவதில்லை. நாளுக்கு நாள் மக்கள் பூமியை அதிகம் காயப்பட்டு வருகின்றனர். பெட்டகத்தின் விதைகள் காப்பாற்றப்பட்டாலும், பூமிக்கு மனிதன் செய்த வினைகளுக்கான தண்டனை கிடைத்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமானதை முதலில் படியுங்கள்..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதே போல “எனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் இனி படிக்க வேண்டிய அவசியம் இல்லை” எந்த முதியவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. கடைசி மூச்சு வரை நீடிக்கும் இந்த வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கத் தவறினால் தோல்வியின் உரசல்களில் காயப்பட்டு வருந்த நேரிடும்.

வாழ்க்கைப் பள்ளியில் தேர்வு முறை வித்தியாசமானது. சாதாரண பள்ளிகளில் வைப்பது போல தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வைக்கப்படுவதில்லை. தேர்வுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. என்னேரமும் வாழ்க்கை உங்களை பரீட்சித்துப் பார்க்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் தயாராக இருந்து அந்தத் தேர்வில் தேற வேண்டும். எனவே என்னேரமும் பரீட்சிக்கப் படலாம் என்ற உண்மை உணர்ந்து தயார்நிலையில் இருப்பது அறிவுடைமை.

முதலில் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். எதெல்லாம் அவசியத் தேவைகளோ, எதெல்லாம் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியமோ அதையெல்லாம் படித்துத் தேறுபவன் எந்தக் காலத்திலும் பாஸ் மார்க் வாங்கி முன்னேறிக் கொண்டே போகலாம். அதைக் கற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டி விடக்கூடாது. அதை விட்டு விட்டு மற்றவற்றை எவ்வளவு அறிந்து வைத்திருந்தாலும் அது யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

ஒரு கர்வம் பிடித்த அறிவாளி ஆற்றில் பயணித்த கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அந்த அறிவாளி ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர். பல விஞ்ஞானக் கோட்பாடுகளை நுணுக்கமாக அவரால் விவாதிக்க முடியும். பல மொழிகளில் அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவன். என்ன தலைப்பை அவருக்குத் தந்தாலும் அவரால் அதைப் பற்றி விரிவாக விளக்க முடியும். அதனால் அவனுக்கு நிறையவே கர்வம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர் அறியாதவற்றைக் கேட்டு அவர் திணறுவதை ரசிப்பார்.

ஒருமுறை அவர் ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆற்றில் பயணித்தார். படகோட்டியைப் பார்த்தாலே படிக்காதவன் என்பது அவருக்குப் புரிந்தது. அவன் தன் படகில் எப்படிப்பட்ட அறிவுஜீவியை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதை அவனுக்கு அவர் உணர்த்த விரும்பினார். அவனிடம் அவர் அது தெரியுமா, இது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அவனோ பலவற்றின் பெயரைத் தன் வாழ்க்கையில் இது வரை கேட்டறியாதவன். அவன் தெரியாது, தெரியாது என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே வந்தான். இதெல்லாம் தெரியாத உன் வாழ்க்கை வீண் என்பதைப் பல விதங்களில் அந்த அறிவாளி அவனுக்கு உணர்த்திக் கொண்டே வந்தார்.

திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தில் அந்தப் படகு தத்தளித்தது. படகோட்டி அவரைக் கேட்டான். “ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

அந்த அறிவுஜீவிக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. வேறொன்றுமே தெரியா விட்டாலும் நீச்சல் தெரிந்த அந்த படகோட்டி நீந்தி உயிர்பிழைத்தான். ஆனால் அது தவிர எத்தனையோ தெரிந்திருந்த அந்த அறிவாளி வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். எத்தனை தெரியும் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அந்தந்த காலத்திற்குத் தேவையான முக்கியமானவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பது முக்கியம். அது தெரியாமல் அதைத் தவிர பாக்கி எல்லாமே தெரிந்து வைத்திருந்தாலும் மற்றவர்கள் உங்களை மேலாக நினைக்க அவை உதவலாமே ஒழிய வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட காலத்தை சமாளிக்க அவை உதவாது.

எனவே வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை முதலில் கற்றுத் தேறுங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அத்தியாவசியமோ அதைத் தேவையான அளவு பெற்றிருங்கள். எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.

எந்தக் குறையால் ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை என்று யோசியுங்கள். உடனடி பதிலாக விதி, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அரசாங்கம் என்று எடுத்துக் கொண்டு
பொறுப்பை அந்தப் பக்கம் தள்ள முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குறையை உணருங்கள். நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. முன்பு சொன்னது போல சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதை விட்டு விட்டு கல்வி, செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறதால் அனைத்தும் அடைந்து விட்டதாக ஒரு கற்பனை உலகில் இருந்தால் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன அறிவுஜீவியைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் துரும்பாக அலைக்கழிக்கப் படுவீர்கள்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

வீட்ல நீ சும்மா தானம்மா இருக்க..!!

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

" நீ சும்மா தான மா இருக்க..

இது செஞ்சி குடுத்திடு மா..."

'எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன'ன்னு தோனுச்சு.

வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பிட்டாங்க.

அவரவர்க்கு தேவையான உணவுகளை சமைத்து கொடுத்து விட்டேன்.

இன்றைக்கு சும்மா இருப்போம் என்ன தான் ஆகும் பாப்போம்.

மாலை கணவரும், பசங்களும் வீட்டிற்கு திரும்பினார்கள்.

"அம்மா பசிக்குது மா..

எதாவது எடுத்துட்டு வா மா,"

" எனக்கும் தலைவலிக்குது ஒரு காபி போட்டு தா மா", என்று சொல்லிக் கொண்டே உள்ள நுழைந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வாசல் முழுவதும் குப்பையால் நிறைந்து இருக்கிறது.

வீட்டின் உள்ளே சென்றால் காலையில் செல்லும் பொழுது இரைத்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் கிழே இருக்கின்றன. 

காலையில் துடைத்த ஈரமான துண்டுகள் அனைத்தும் நாற்காலியில் கூளமாக இருக்கின்றன.

ஷுபாலிஷ் செய்யும் டப்பா திறந்தே இருக்கு.

தலைக்கு தடவும் ஜெல்லும் ஓபன் பண்ணி இருக்கு.

பசங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் புத்தகங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.

விளையாட்டு பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.

சீருடைகள் தோய்க்காமல் அப்படியே போடப்பட்ட இடத்தில் இருக்கின்றன.

இவ எங்க தான் போனான்னு சமையல் அறைக்குள் சென்று பார்த்தால், பாத்திரங்கள் கழுவாமல் நாற்றம் அடித்து கொண்டு இருக்கின்றன.

'எங்க தான் போனாலோ.. உடம்பு சரி இல்லையோ?'

ரூமிற்கு சென்றால், இரவு உபயோகபடுத்திய தலையணை, போர்வை எல்லாம் மடித்து வைக்காமல் இரைந்து கிடக்கின்றன.

'சரி பாத்ரூமில் இருப்பாள் கதவு தட்டி பாக்கலாம்'னு திறந்தா, காலையில் போட்ட சோப் டப்பா முழுவதும் தண்ணீரில் முழுகிக் கரைந்து போய் தரை முழுவதும் கொழ கொழனு ஆகிடுச்சு.

அழுக்கு துணிகள் அசிங்கமாய் தொங்கி கொண்டு இருந்தன.

ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் மாடியில் உள்ள அறைக்குள் சென்றார்கள்.

கையில் ஒரு நாவல் புத்தகம் ஒன்றுடன், நாற்காலியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்தாள்.

"என்னடி ஆச்சு உனக்கு ?

வீடு என் இப்படி இருக்கு? அம்மா என்ன ஆச்சு மா உனக்கு?"

பதட்டமான கேள்விகள்.

"நீங்க எல்லோரும் தான் சொல்லிட்டு போனீங்க, 'வீட்ல சும்மா தான இருக்க'ன்னு.

அதான் சும்மா இருக்கலாம்னு!!

கணவனுக்கு தன் தவறு உணர்ந்தது.

இந்த வார்த்தையை சொல்வது தவறு. 

அவ எதுவும் செய்யவில்லை என்றால் வீடு வீடாகவே இருக்காது.

"என்னை மன்னித்து விடு" என்று கூறினார்.

பிள்ளைகளும் தம் தவறை உணர்ந்து "அம்மா மன்னிச்சிடு மா.இனி அப்படி சொல்ல மாட்டோம். நீ இல்லைனா வீடு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்."

நான் சொல்வதால் தான் என் பசங்களும் இந்த வார்த்தையை அவ கிட்ட சொல்லி கஷ்டபடுத்தறாங்கனு அவருக்கு புரிந்தது.

இனி எப்பொழுதும் தன் மனைவியை பிள்ளைகளிடமோ, வெளி ஆட்களிடமும் தாழ்த்தி பேசமாட்டேன் என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தார்.

"நீ இங்கயே இரு நா போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்" கணவர் கிளம்பினார்.

பசங்களும் "நாங்க உனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரோம் மா நீங்க வெயிட் பண்ணுங்க மா".

"யாரும் எதுவும் செய்ய வேண்டாம். எல்லோரும் போய் டிவி பாருங்க. நான் பத்து நிமிடத்தில் உங்களுக்கு கேசரி செய்து தரேன் சாப்பிடுங்க" என்றாள். 

மனதில் சந்தோஷத்துடன் சமையல் அறைக்கு சென்றாள்.

Tribute to all mother who stays back in the house as a back bone to the family.


🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

நம் எண்ணமும்..நம் நட்பும்..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம். 

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். 

5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. 

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே..

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம்…தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா?  என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.

கடைக்காரரோ,””ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால்பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.“ உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே..

வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான்.

கடைக்காரர்,, ''நீ சொல்வது புரிய வில்லையே!”, என்றார்.

”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.

இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

ஆம்.நண்பர்களே..,

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும்,, நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்.

ஒருவன் தான்செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும்.

*அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்,*
*நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.*


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.

நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.

யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.

இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.

இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன் / மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”. 

*/தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே/*
*/நாவினால் சுட்ட வடு./*

என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில்
மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.

ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.

இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை
நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.

அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.

பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது”என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.

எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.

எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்...

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை  அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன.

அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களை பயன்படுத்த உறுதியேற்போம்.

* தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்...
🙏🏽
*முப்பாட்டன் சொல்லி வெச்சாங்க*

🟣உழாத நிலம் கெடும்
🔵உழைக்காத உடல் கெடும்
🟢இறைக்காத கிணறு கெடும்
🟡இரக்கமில்லாத மனிதம் கெடும்
🟠குளிக்காத மேனி கெடும்
🟤குளிர்ந்துபோனால் உணவு கெடும்
⚪துடிப்பில்லாத இளமை கெடும்
🟣பொய்யான அழகு கெடும்
🟤கடன்பட்டால் வாழ்வு கெடும்
🟡கண்டிக்காத பிள்ளை கெடும்
🔵சோம்பலால் வளர்ச்சி கெடும்
🟢சுயமில்லா வேலை கெடும்
🔴அச்சத்தால் வீரம் கெடும்
🔵அறியாமையால் முடிவு கெடும்
🟠அளவில்லா ஆசை கெடும்
🟢ஓய்வில்லா முதுமை கெடும்
🟣கவனமில்லாத செயல் கெடும்
⚪கருத்தில்லாத எழுத்து கெடும்
🟤தூங்காத இரவு கெடும்
🟣தூங்கினால் பகலும் கெடும்
🟡நயமில்லாத சொல் கெடும்
⚪நாடாத நட்பு கெடும்
🔴ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்
👉ஓதாத கல்வி கெடும்...
🙏🌹
~ *படித்ததில் பிடித்தது*

வாய்ப்புக்காக காத்திருக்காதே....

💥💥💥💥💥💥💥💥

*வாய்ப்புக்காக*
*காத்திருக்காதே..!*

*உனக்கான வாய்ப்பை* 
*நீயே ஏற்படுத்திக் கொள்.*

*கனவு காண்பவர்கள்* 
*அனைவரும் தோற்பதில்லை.*

*கனவு மட்டும் காண்பவர்கள்* 
*தான் தோற்கிறார்கள்..!*

*அழகைப் பற்றி*
*கனவு காணாதீர்கள்..!*

*அது உங்கள் கடமையைப்*
*பாழாக்கி விடும்.*

*கடமையைப் பற்றி*
*கனவு காணுங்கள்.-*

*அது உங்கள்* 
*வாழ்க்கையை* 
*அழகாக்கும்.*

*ஆண்டவன் சோதிப்பது* 
*எல்லோரையும் அல்ல.*

*உன்னைப் போல* 
*சாதிக்க துடிக்கும்* 
*புத்திசாலிகளை மட்டுமே..!*

💥💥💥💥💥💥💥💥
       குறுஞ் சிந்தனை.

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*'எதிரில்'* 
*எதிரிகள் இல்லை என்று*
*கர்வம் கொண்ட வேளையில்..*

*'காலடியிலேயே'* 
*துரோகிகள் இருப்பதை*
*உணராமல் விட்டு விடுகிறோம்..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*தலைமுறைகள் தேய்வதில்லை..!!*

”இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை: பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்”  

– இவை அனைத்தும் நமது இளைஞர்களை பற்றி யாரோ இப்போது கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல. கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நாம் அனைவரும் போற்றுகின்ற கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதாக சுட்டப்படுகிறது.  

சாக்ரடீஸ் ‘ஏன்’ என்று கேள்வி கேட்டு அறிந்த பின்னரே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறிய மாபெரும அறிஞர். இளைஞர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க முயன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு, விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டவர். அவர் இப்படிக்  கூறி இருப்பார் என்று சந்தேகம் பல நூற்றாண்டுகளாய் எல்லோரையும் குழப்பி கொண்டிருக்கிறது. அவர் கூறினார் இல்லையோ, ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தங்களை தொடரும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு இவற்றுள் சிலவாகவே உள்ளன.

எந்த ஒரு சமுதாயத்திலும் எப்போது எடுத்துக் கொண்டாலும் மூன்று தலைமுறையேனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக தந்தை, மகன், பேரன் என்று  எடுத்துக் கொள்ளலாம். முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு திரும்பும் என்ற நியதிக்கு ஏற்ப தந்தை செய்த அடிப்படைச்  செயல்களை – அதாவது கல்வி கற்பது, வேலை செய்வது, குடும்பத்தை பேணுவது போன்றவைகளையே மகனும் செய்கிறான். அதற்குப் பின்னர் அடுத்த பேரனும் அதே செய்வான். அடிப்படைக்  குறிக்கோள்கள் செயல்கள் ஒன்றாயினும், செய்யப்படும் காலமும், சூழ்நிலையும் வேறாக உள்ளன அதன் காரணமாகவே ஒரு தலைமுறை செய்வது அதன் மூத்த தலைமுறை கொள்ள முரணாக தெரிகிறது. ஆனால், உண்மை அதுவல்ல அப்படியிருப்பின் பின் எப்படி தலைமுறைக்குத் தலைமுறை புத்தர், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற முத்துக்கள் தோன்றி கொண்டிருக்க முடியும்? அதனால் தலைமுறைகள் தேய்கின்றன என்பது ஒரு கற்பனை தான். இளைய தலைமுறை காலம் சூழ்நிலை நவீன முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றத்தை பின்பற்றுவது மூத்த தலைமுறைக் தெரியலாம். ஆனால், அது தேவைக்கு ஏற்ற மாற்றம் தானே ஒழிய சீரழிவு கிடையாது என்பதே உண்மை.

குறிப்பாக, இந்திய  இளைஞர்கள் மீது கூறப்படும் குறைகளாக உள்ள கலாச்சாரச்  சீரழிவு, தன்னல நோக்கு, பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்தல் போன்றவற்றை மேம்போக்காகக் கூறப்படுபவை. ஆராய்ந்து பார்த்தால் இப்போது உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை கவனத்துடன் திட்டமிடுவதுடன், அது  மேம்படுத்துவதற்கு முனைப்போடு உழைக்கின்றனர் என்பதே உண்மை. தங்கள் உழைப்பின் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தையும், உலக அரங்கில் அதன் பெருமையையும் உயர்த்துகின்றனர். அதனால் ‘தலைமுறைகள் தேய்கின்றன’ என்ற கற்பனைக் கவலையைக்  கலைந்து, அவர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் கொடுத்து தோள்கொடுத்துத்  துணை நின்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவர்கள் பெருமையை மட்டுமே பரிசாகப் பெற்றுத் தருவார் என்பது உறுதி.

*காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் நம்முள்.!*

*தலைமுறைகள் தேய்வதில்லை மண்ணுள்..!!*

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

*💗சிந்தனை கதை...*

*கௌதம புத்தரின் போதனைகள்.! அதில் உள்ள கருத்துகள்..!!*

புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ, அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி, அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரித்துக்கொள்வது ரொம்ப அவசியம்.

கௌதம புத்தர் ரொம்ப சின்ன வயசுலேயே சன்னியாசம் அடைந்தது, நம்ம எல்லோருக்குமே தெரிந்த கதை தான். சன்னியாசி அடைந்த பிறகு புத்தர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட பயணத்தில் பல ஊர்களுக்குப் போய், அங்க இருக்கிற மக்களுக்கெல்லாம் ஞான போதனைகள் கொடுத்து இருந்தார். அவருடைய போதனைகளை கேட்க நிறைய மக்கள் ரொம்ப ஆர்வத்தோட அவர பாக்க வருவாங்க. நிறைய மக்கள் அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போவாங்க. 

ஒருநாள் புத்தர் போதனைகள் ஈடுபட்டிருந்த போது, அவரைப் பார்க்க வந்த ஒரு பெண், அவருடைய போதனைகள் கேட்டு ரொம்பவே மெய்சிலிர்த்துப் போனார். அதனால் அந்தப் பெண், புத்தர் அவளோட வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்லி வணங்கி கேட்டுக் கொண்டார். புத்தரும் அவளோட அழைப்பை ஏற்றுக்கொண்டு, அந்தப் பெண் வீட்டுக்குத் தான் வருவதற்கு வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், அது சின்ன கிராமங்கள். அதனால இந்த செய்தி கொஞ்ச நேரத்திலேயே அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. இந்த செய்தியை கேட்ட உடனேயே, அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்து புத்தர் கிட்ட, அவர் அந்த பெண்ணோட வீட்டுக்கு போக வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். அதுக்கு காரணம், அந்த பெண் ஒரு நடத்தை கெட்ட பெண்ணென்றும், அதனால் அந்த பெண்ணோட வீட்டு விருந்துக்கு புத்தர் போனா.. புத்தரோட புனிதம் கெட்டு போய் விடும் என்று சொல்லி, அதனால் அந்த பெண்ணோட வீட்டுக்கு போக வேண்டாம்னு அந்த ஊர் தலைவர் கேட்டுக்கொண்டார். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த புத்தர், அந்த ஊர் தலைவர் கிட்ட அந்த பெண் ஒரு நடத்தை கெட்ட பெண் என உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க சொல்ற விஷயம் உண்மை என உங்களால் நிச்சயமா சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த ஊர் தலைவர், எனக்கு அவளோட மொழி சரித்திரமே தெரியும். அவ ஒரு ஈனப்பிறவி. அவ நிறைய ஆண்களோட கெட்ட சகவாசம் கொண்டு, ஊர் சுத்துற தான் நானே பலதடவை பார்த்திருக்கிரேன், என்னால் இதை நிச்சயம் சொல்ல முடியும் என்று பதில் சொன்னார்.

இதைக் கேட்ட புத்தர் அந்த ஊர் தலைவர் கிட்ட, சரி. நான் உங்க வலது கையைப் பிடிச்சுக்கிட்டு உங்களை ஒரு கையால கைத்தட்டல் சொன்னா, வலது கை தட்ட முடியுமா என்று கேட்டார். அதற்கு அந்த ஊர் தலைவர், ஒரு கையால எப்படி என்னால கை தட்ட முடியும்? என்று கேட்டார். அதற்கு புத்தர் அப்படின்னா உங்களால் எப்படி அந்தப் பெண்னே நடத்த கெட்டவன்னு சொல்ல முடியும்? இந்த ஊர் ஆண்கள் எல்லாரும் நல்லவங்கனா அப்ப எப்படி அந்தப் பெண் மட்டும் நடத்தை கெட்டவளாக முடியும்? அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வரதுக்கும். அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கும், இந்த ஊர் ஆண்கள் தான் காரணம் என்றார். புத்தருடைய பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் எல்லாரும் அவமானத்தால் தலை குனிந்து நின்னாங்க. 

மேலும் பேச தொடங்கினால், புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ, அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி, அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரிஞ்சுகிறது ரொம்ப அவசியம் என்று சொன்னார்.

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*நேற்றைய தோல்வியை*
*நினைத்து வருந்தும்* 
*நேரத்தில்..* 

*இன்றைய வெற்றியை* 
*இழந்து விடுவீர்கள்..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*சீக்கிரமே படியுங்கள்..!!*

வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற
முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு உண்மையை நாம் உணர்வதில்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வரை வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் திரும்பத் திரும்ப ஒரே வித அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.

இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம். அப்படித் தேர்ந்து விட்டால், ஒழுங்காகக் கற்றுக் கொண்டு விட்டால் நாம் அந்தப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பாடுபட வேண்டியதில்லை.

உதாரணத்திற்கு ஒரு சாலையில் ஒரு குழி இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் அது தெரியாது. அந்தக் குழியைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அதில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. நமக்கு முன்னால் போகும் ஒருவர் அதில் விழுந்ததைப் பார்த்தாலே போதும் பின் எப்போது அந்தப் பாதையில் போகும் போதும் சர்வ ஜாக்கிரதை நமக்குத் தானாக வந்து விடும். இந்தப் பாதையில் இந்த இடத்தில் ஒரு அபாயமான குழி இருக்கிறது. கவனமாகப் போக வேண்டும் என்ற பாடம் தானாக மனதில் பதிந்து விடும். இனி எந்த நாளும் அந்தக் குழி நமக்கு பிரச்னை அல்ல.

ஆனால் ”நான் அடுத்தவர் விழுவதைப் பார்த்தாலும் கற்றுக் கொள்ள மாட்டேன், நானே விழுந்தால் தான் எனக்குப் புரியும்” என்று சொல்லும் நபர் தானாகப் படிக்க விரும்பும் அறிவுக்குறைவானவர். அவர் விழுந்து எழுந்து தான் கஷ்டப்பட வேண்டும். நானே ஒரு தடவை விழுந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன். ஏனோ அப்படியாகி விட்டது. அடுத்த தடவை அப்படியாக வேண்டும் என்பதில்லை”என்று ஒவ்வொரு தடவையும் அதே குழி அருகில் அலட்சியமாக நடந்து விழுந்து எழும் நபர் முட்டாள். அவர் கஷ்டப்படவே பிறந்தவர்.

இந்தக் குழி உதாரணம் படிக்கையில் இப்படியும் முட்டாள்தனமாக யாராவது இருப்பார்களா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நம்மில் பலரும் அப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எத்தனை பேர் சூதாட்டத்தில் பல முறை தாங்கள் சூடுபட்டும் திருந்தாதவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் பல பேர் சூதினால் சீரழிவதைப் பார்த்த பின்னும ”எனக்கு அப்படி ஆகாது”என்று நினைத்து திரும்பத் திரும்ப சூதாடி அழிந்து போனவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் புரியும்.

தீயைத் தொட்டுத் தான் அது சுடும் என்று உணர வேண்டியது இல்லை. அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்களைப் பார்த்தும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி படிப்பது தான்
புத்திசாலித்தனம்.

ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அனுபவித்தே கற்க வேண்டும் என்றிருந்தால் நம் வாழ்க்கையின் நீளம் சில பாடங்களுக்கே போதாது. அதில் நிறைய சாதிக்கவும் முடியாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்களை முதல் தடவையிலேயே ஒழுங்காகப் படிப்பது முக்கியம். அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்தும்நிறையவற்றை கூர்மையாகப் பார்த்துக் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்திற்குள் ஒரு முறை நுழைந்து விட்ட பின் தப்பிக்க வழியே இல்லை. எனவே எதையும் புத்திசாலித்தனமாக சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டி வராது. அந்தப் பாடம் உங்களுக்குப் பாரமாகவும் இருக்காது.

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

*💗சிந்தனை கதை...*

*திறமையை திருட முடியாது..!!*

ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். 

அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. 

அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். 

அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம்,

"தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார். 

அதற்கு அந்த துறவி தன் நண்பரிடம், 

"கண்டிப்பாக அந்த தேனீ வருந்தாது" என்று சொன்னார். 

"அது எப்படி வருந்தாது என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டார். 

"ஏனென்றால், மனிதர்களால் அந்த தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது" என்று கூறினார். 

*நாம் ஒருவரின் உழைப்பை வேண்டுமானால் திருட முடியுமே தவிர, ஒருவரது திறமையை திருட முடியாது..!!*

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*வாக்குறுதி என்பது* 
*ஒரு நிலவு போன்றது..!*

*உடனே நிறைவேற்று* 
*அல்லது தேய்வடையும்..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

*மகிழ்வித்து மகிழவும்.. மகிழ்ந்து மகிழ்விக்கவும்.. - லாஜிக் தெரியுமா..??*

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத் திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.
  
அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிச் சென்று விட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப் படுக்கை என்பதால் அவரை கவனித்துக் கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகி விடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.

சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.

‘என் அம்மா படுத்தப் படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மா தான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்த போது தெரியவில்லை, இறந்த பிறகு தான் தெரிந்தது. எதிலும் வெறுமை, ஊக்கமின்மை,பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததால் எழுதுவதற்கு வார்த்தைகள் கூட வருவதில்லை. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் எழுத மனதில் ஊக்கம் இல்லை’ என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.

இதில் ஓர் உளவியல் உள்ளது. கடைசியில் சொல்கிறேன். இப்போது ஒரு கதையைப் படியுங்கள். 

ஒரு திருடன் சர்க்கஸ் பார்க்கப் போனான். வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்க்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி. நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்க்கஸ் வீரனிடம் சென்று இந்தப் பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த வீரன் ‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்ற போது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’ எனக் கூறி அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும் போது சர்க்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான். அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக் கொடுத்த பிறகு சர்க்கஸ் வீரனிடம், ‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’ என்று சொன்னான்.

அதற்கு சர்க்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல் ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’ எனச் சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ எனக் கேட்கிறான்.

சர்க்கஸ் வீரன், ‘நான் சர்க்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை. சர்க்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால் தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன். நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப் போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்லத் திருடன் தலை சுற்றி மயக்கமடைந்தான். இந்தக் கதையை புலவர் கீரன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார். 

இந்த இரண்டு நிகழ்வுக்கும் பொதுவாக ஓர் உளவியல் இருப்பதைக் கவனியுங்கள்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உற்சாகமாக இருக்கும் போது தான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும். துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். உற்சாகம் குறையும் போது நம் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு தூசியைக் கூட நம்மால் தன்னிச்சையாக தட்டி விட்டுக் கொள்ள முடியாது. 

நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மைத் சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.

மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் வாங்க.!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

*💗சிந்தனை கதை...*

*அவளும் மனித பிறவி தானே..!!*

காலை எழுந்தது முதல் அவளுக்கு ஓயாத வேலை. ஏனோ ஒரு வித களைப்பு அவளை வாட்டி கொண்டே இருந்தது. தொடர் தும்மலும் தலைவலியுமாக வேலைகளை முடிப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.  அனைவருக்கும் மதிய உணவை கொடுத்து விட்ட மனநிறைவில் அப்படியே படுக்கையில் சுருண்டு கொண்டாள். உள்ளே நுழைந்த மகன் அக்கறையாக 'என்னமா புதுசா பகல் நேரத்தில் படுத்திருக்கிறாய்?' என வினவினான். 'சிறிது காய்ச்சல் என நினைக்கிறேன். கொஞ்ச நேரம் தூங்கினால் சரியாகிவிடும்' என்றாள். 'சும்மா விளையாடாதம்மா. எனக்கு தெரிந்து நீ உடம்பு சரியில்லை என்று படுத்ததே இல்லை. தூங்க போறேன் என்று சொல்லுங்கள்' என கூறி விட்டு புன்னகையோடு வெளியேறினான். 

மகன் சொல்வதும் உண்மை தான். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் அவள் சோர்ந்து படுத்ததில்லை. உடல் சோர்வு என்றாலும் தனக்கு தானே மருத்துவராகி கொள்வாள். பலவித கை வைத்தியம் அவளிடம் இருந்தாலும் சோதனைக்கு தன்னை மட்டுமே உட்படுத்தி கொள்வாள். அலுவலக பணி ஆயிரம் இருந்தாலும் குடும்ப கவனம் என்றும் குறைந்தது இல்லை. ஒருநாளும் உடல்நிலையை காரணம் காட்டி படுத்தது இல்லை. ஏறக்குறைய எல்லா குடும்ப தலைவிக்கும் இதே நிலைதான். 

உடல்நிலை சரியில்லை என்றால் கூட அதிக நேரம் ஓய்வு கொள்ள முடியாது. அதற்குள் அடுத்த வேளைக்கான உணவு தயாரிப்பு பணி நெருங்கி விடும். மனதை கடினப்படுத்தி கொண்டு மீண்டும் அதற்கு தயாராகி விடுவாள். அப்படிதான் இன்றும் எழ முற்பட்டாள். ஆனால் உடம்பு ஒத்துழைக்க வில்லை. அவளின் கணவர் மகனிடம் 'அம்மா எங்கே' என கேட்க,  மகனும் காரணத்தை சொன்னான். அவருக்கு அது பெரியதாக படவில்லை. அவரது கவனம் முழுவதும் அவரது வேலையில் மட்டுமே இருந்தது.

அவள் உடல் முடியாத நிலையிலும் எழுந்து இரவு பணிகளை முடித்து விட்டு மீண்டும் படுக்கையில் சரிந்தாள். வீட்டுக்கு வந்த கணவன்  'என்ன இன்னமும் உடம்பு சரியாக வில்லையா? ஏதாவது மாத்திரை போட வேண்டியது தானே!  அதுவும் சரியில்லை எனில் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது தானே!  வெளியே போயிட்டு வரவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். உன் உடம்பை உன்னால் பார்த்துக் கொள்ள முடியாதா?' என படபடவென பொறிந்து தள்ளினார்.  அதுவரை அமைதி காத்த அவள் மனது இப்போது அதிக அழுத்தத்திற்கு உள்ளானது. அத்தனை அழுத்தமும் எதிர்த்து பேச வலிமையின்றி கண்ணீராக கரைந்து கொண்டிருந்தது. அவளுக்குள் பல சிந்தனையோட்டம்..... மகனுக்கு தனது உடல்நிலை விளையாட்டாக தெரிகிறது. கணவனுக்கு தனது உடல்நிலை தொந்தரவாக தெரிகிறது. ஆனால் இதே நிலை அவர்களுக்கு இருந்த போது???? பின்னோக்கி யோசிக்க தொடங்கினாள்.
        
மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனில் அவனை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதில் இருந்து உணவை ஊட்டி  விட்டு மருந்து கொடுத்து மணிக்கு ஒருமுறை உடல் வெப்பம் பரிசோதித்து சுவாசம் சீராக உள்ளதா? என ஆய்ந்து அவளும் ஒரு மருத்துவராகவே மாறி விடுவாள்.

அதுவே கணவனுக்கு என்றால் இன்னம் அதிக கவனம். மகனை கூட சமாதானப்படுத்தி விடுவாள். கணவனுக்கு  முடியவே முடியாது. அவர் குழந்தையாகவே மாறி விடுவார். அவர் அப்பா அம்மாவை வரவழைக்க வேண்டும். உடன்பிறப்புகள் உடனிருக்க வேண்டும். அவள் அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுக்க வேண்டும். எங்கும் நகராமல் கை கால்களை பிடித்து விட வேண்டும். அவள் மடி அவருக்கு தலையணையாக வேண்டும். மருத்துவரை தாண்டி செவிலியராக மாறி விடுவாள். 

அவர்கள் உறக்கம் தழுவிட தனது உறக்கம் துறப்பாள். அவர்கள் பசி போக்கிட தன் பசிதனை மறப்பாள். ஆனால் இன்று அவளின் உடல்நிலையை பற்றி கவலைப்பட யாருமில்லை. ஒரு குவளை சுடுநீர் வேண்டுமென்றால் கூட அவளேதான் எழுந்து போட்டு குடிக்க வேண்டும்.
எவ்வளவு முரண்பட்ட வாழ்க்கை??  
மனதின் வேதனை கண்ணீராக வெளிப்பட்டது. 

படுக்கையை விட்டு எழுந்து பார்த்தாள். அனைவரும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர். நேரத்தை பார்த்தாள். அவளுக்கு மட்டும் உறக்கம் இல்லாமலே விடியல் உதயமாக காத்திருந்தது. விரக்தியோடு எழுந்து கடமைகளை செய்ய தயாரானாள். இனி சுருண்டு படுக்க நேரமில்லை.  மீண்டும் அவள் சுழல வேண்டும். 'பெண்ணாக பிறந்ததால் சேவை மட்டுமே நிரந்தரமாக...!' யாரோ அவள் காதில் சொல்வது போல இருந்தது. எனவே இனி எப்போதும் பலன் எதிர்பார்க்க மாட்டாள்! 

அவளிடம் அதிக அக்கறை கொள்ள வேண்டாம். அன்பாக நான்கு வார்த்தைகள் பேசினால் போதும். அனைத்து உடல் சோர்வும் அவளுக்கு காணாமல் போய்விடும்.  காரணம் அவள் உடல்வலிமையால் அல்ல!  மனவலிமையால் வெற்றி கொள்பவள்!

அவளும் மனித
பிறவி தானே!

இயந்திரம்
அல்லவே..!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*நிகழ்காலத்தில்*
*கவனம் எடுத்துக்கொள்..!*

*எதிர்காலம்*
*தன்னைத்தானே*
*கவனித்துக்கொள்ளும்..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

*🌺மனமானது குழப்பத்திலிருக்கும் போது.. அதை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்..!*

*🌺சிறிது நேரம் சென்ற பின், அது தானே தெளிவடையும்.. அது வரை 'பொறுமையாக' இருங்கள்..!*

*🌺மனதை அமைதிப்படுத்த, எந்த ஒரு செயலையும் கடினப்பட்டு செய்ய வேண்டியதில்லை..!*

*🌺அது தானாகவே அமைதியடையும்.. பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும்..!

🌺'பொறுமையே' மனதினைப் பக்குவப்படுத்தும்.

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*எதிரிகளை எப்போதும்*
*மன்னித்துக் கொண்டே*
*இருங்கள்..!*

*அதை விட வேறெதுவும்*
*அவர்களை அவமானப்படுத்தப்*
*போவதில்லை..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

             
    *ஆன்மீகம் தத்துவம்*


*🙏🕉️🙏அடுத்தவருக்கு வழிகாட்ட முயல்வதற்காகவாவது நமக்கு முதலில் வழி தெரியட்டுமே*



நலமா ! என்று ஒருத்தர நாம் கேக்கறோம்னு வச்சுக்கோங்க, பதில் நலம் தான் அப்படின்னு வந்துட்டா ஓகே. இல்லேன்னா அவங்க நலத்த நாம் ஏண்டா கேட்டோம்னு ஆயிடும். சரி இப்ப ஒரு விஷயத்த பார்ப்போம். Hi da! how are u da! ன்னு நாம ஒருத்தர கேக்கணும்னா நாம நல்லா இருந்தா தானே? "நமக்கே சுத்தம் இல்லாதவன் வீட்டு கூரை மேல உள்ள ஒட்டடை போல ஆயிரம் தொங்குதே" இதுல எங்க அடுத்தவங்கள விசாரிக்கிறது? முதல்ல உங்க நலத்தப் பாருங்க ஊர் நலத்த அப்புறம் பார்ப்போம். உடனே "இப்படியெல்லாம் நாம சுயநலமா இருக்கிறதாலத்தான் நம் நாடு இந்த கெதிக்கு ஆளாயிடுச்சி - ன்னு " இந்த நாட்டின் பாதுகாவலர் மாதிரி பேச ஆரம்பிச்சிடாதீங்க . நடிப்பு வேண்டவே வேண்டாம். நம்ம அசல் தான் எப்பவும் நம்மை இந்த உலகத்துக்கு காட்டிக் கொடுக்கும். உங்க நலத்த முதல்ல பாருங்கன்னு ஏன் சொல்லனும் ? ஏன்னா நீங்களே உங்க நலத்தில அக்கற எடுத்துககல. உடம்ப ஆரோக்கியமா வச்சுக்கத் தெரியல, மனச நிம்மதியா வச்சுக்கத் தெரியல, ஆனந்த வாழ்க்கை வாழ வழி என்னன்னு தெரிஞ்சுக்கல, ஊழ்வினையால வர்ற துன்பத்த எப்படி போக்கறதுன்னு தெரிஞ்சுககல, இப்படி பல விஷயங்கள் நமக்கு பல துன்பங்கள தரும் போது நாம எப்படி அடுத்தவங்கள விசாரிக்கறது ? விசாரிக்கணும் எப்போ? உடம்பு ஆரோக்கியத்துக்கு தியானம், யோகம் என்றும் , மன நிம்மதிக்கு ஆலயம், தரிசனம் என்றும், ஆனந்த வாழ்க்கைக்கு நல்ல வேலை. நல்ல சொற்பொழிவுகள் என்றும் , ஊழ்வினை துன்பத்துக்கு தர்மம், சேவை என்றும் உங்கள நீங்களே சரி செய்து கொண்ட பிறகு இந்த உலகையே நீங்க விசாரிக்கலாம் , வழியும் சொல்லலாம். நாம் அடுத்தவருக்கு வழிகாட்ட முயல்வதற்காகவாவது நமக்கு முதலில் வழி தெரியட்டுமே . எல்லோரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சி நிற்போம். 


 •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

*அனைத்துக் கேள்விகளுக்கும்*
*காலம் பதில் சொல்லத்*
*தான் செய்கிறது..!*

*நாம் தான் கவனிக்கத்*
*தவறி விடுகிறோம்.!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿

*💗தெரிந்து கொள்வோம்...*

*மழைகளில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா..??* 

தமிழில் 14 வகையான மழை உண்டு...

1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆவி

6. சோனை

7. பெயல்

8.. புயல்

9. அடை(மழை)

10. கன(மழை)

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளி மழை

14. வருள் மழை

*இயற்கை நுனித்த மழை:*

வெறுமனே மழைக்குப் பல பெயர்கள் அல்ல. இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு.

*மழை என்னும் சொல்:*

‘மழ’ என்பது உரிச்சொல் ஆகும். ‘மழ களிறு’ என்பதற்கு ‘இளமையான களிறு’ என்று பொருள். ‘மழவர்’ என்பதற்கு ‘இளைஞர்கள்’ என்று பொருள். அந்த உரிச்சொல் புறத்து பிறப்பதே
‘மழை’ என்னும் சொல் ஆகும். இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் ‘மழை’ எனக் காரணப்பெயர் பெற்றது.

*அடை மழை:*

அடை என்பதை ஆங்கிலத்தில் ‘Thick’ எனக் கூறுவர். இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழை ஆகும். அடைமழை என்பது வினைத்தொகை. அடைத்த மழை, அடைக்கின்ற மழை, அடைக்கும் மழை என்று கூறுகிறோம். விடாமல் பெய்வதால் ஊரையே ‘அடை’த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடை மழை எனப் பெயர் பெற்றது. கன மழை வேறு. அடை மழை வேறு. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும்.

*மாரி:*

இள மென்மையாக அலைந்து காற்றாடி போலப் பெய்வது ‘மழை’ ஆகும். தாய்ப்பால் போலச் சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் மாரியம்மன் எனத் தெய்வத்தைத் தமிழ் மக்கள்
அழைக்கவும் செய்தார்கள். தமிழ் மொழி பிறமொழி போல் அல்லாது வாழ்வியல் மிக்கது. காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ எனக் கேட்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

*பிற மழைகளுக்கான விளக்கம்:*

*ஆவி:* ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி ‘ஆவி’ எனப்படுகிறது. இந்த வகை மழையில் உடலோ, உடையோ உடனே நனையாது.

*தூறல்:* காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை ‘தூறல்’ ஆகும். புல், பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

*சாரல்:* பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை ‘சாரல்’ எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை ‘சாரல்’ என்பர். சாரல் என்பது மழையில் பட்டுத் தெறித்து விழும் மழை எனச் சிலர் கூறுவது முற்றிலும் தவறு. (சாரலடிக்குது ஜன்னல் காத்து என்பதைக் கவனிக்கவும்) சாரல்--சாரம் என்பன சாய்வைக் குறிக்கும் சொற்கள். மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தைக் குறிக்கும். அதை மலையில் பட்டுத் தெறிக்கும் நீர் எனத் தவறாகப் பொருள் கொண்டு விட்டனர். சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

*கன மழை:* இந்த வகை மழையில் துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்.

*ஆலங்கட்டி மழை:* திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ‘ஆலங்கட்டி மழை’ ஆகும். இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும். புவி வெப்ப மயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

*பனி மழை:* பனித் துகள்களே மழை போலப் பொழிவது ‘பனி மழை’ ஆகும். இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.

*ஆழி மழை:* ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை ஆகும்.

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை...*

**

ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் அடுக்கியுள்ள ஒரு அறையினுள் நுழைந்து அந்த தங்கம் மின்னும் அறையினை மிகச் சாதரணமாக கடந்துவிடுகிறது. அதற்கு அந்தத் தங்கக் கட்டிகளொன்றும் அத்தனைப் பெரிதாக ஈர்த்துவிடவில்லை. சற்று தூரம் விலகிச் சென்றதும் அங்கே ஒரு பழையபொம்மை விழுந்துகிடப்பது கண்களில் பட்டுவிட அய்.......யென்று கூச்சலிட்டவாறு ஓடிப் போய் அந்தப் பொம்மையை எடுக்கிறது, அதனருகில் இருக்கும் இன்னொரு கதவைத் திறக்கிறது அந்த அறையெங்கும் அழகழகிய வேலைப்பாடுகள் அடங்கிய பல பொம்மைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதென்றே புரியவில்லை ஆனால் தங்கக் கட்டிகளை அலட்சியமாகக் கடந்துபோனது..

அடுத்து ஒரு தொழிலதிபர் ஒருவர் அவ்வழியே வருகிறார். அந்த குழந்தை தனது கை நிறைய பொம்மைகளை வாரிக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு அந்த அறைக்குள் போகிறார். அத்தனை அழகழகான பொம்மைகள் அவருக்கு துளிகூட ரசனையையோ பெரிய ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவேயில்லை. வேறென்ன உண்டென அறையின் மறு கதவை திறக்கிறார். அங்கே
காணுமிடமெல்லாம் தங்கம். அதிலும் அவருக்கு அழகாக வடிக்கப்பட்ட சிலைகளோ பல நாகரிகத்தோடு ஒத்துச் செய்யப்பட தங்கநகைகளோகூட அத்தனை பெரிதாக தெரியவில்லை. அந்தத்
தங்கக் கட்டிகள் அவருக்கு பெரும்பொக்கிசமாகப் பட்டது. எடுத்து மாறி மாறி முத்தமிட்டவர், எடுக்க முடிந்தவரை எடுத்துக் கொண்டதாக எண்ணி மனதிற்குள் நான்கைந்து பெரிய பெரிய தங்கக்கட்டிகளை சுமந்தவாறே வெளியேச் செல்கிறார்.

அவரை கடந்து அவ்வழியே ஒரு சிற்பி வருகிறார். அவருக்கு தங்கக் கட்டிகள் பார்க்கையில் ஆரவாரம் தாளவில்லை, ஆனால் ச்ச என்னப் புண்ணியம் இதில் ஒரு அழகில்லையே, கட்டியாய்
தங்கமிருந்து என்ன பயன் ? அங்கே கலையில்லையே(?) என்று வருந்தினார். அருகே பார்க்கிறார் அத்தனை அழகழகான பொம்மைகள் சிலைகள் வித விதமாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் அச்சில் வார்க்கப்பட்டவை. செதுக்கப் பட்டவையல்ல. ச்ச இதலாம் ஒரு கலையா, செதுக்க செதுக்க எண்ணத்தில் ஊறுவதை அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அழகழகான வடிவத்தில் வடிப்பதில் ஒரு உயிர் இருக்கில்லையா? அதை விட்டுவிட்டு இதை ஏன் இப்படி ஒருபக்கம் வெறும் பொம்மையாகவும் மறுபக்கம் வெறும் கட்டித் தங்கத்தையும் வைத்திருக்கிறார்களே என்று பொருமிக் கொண்டே வெளியேப் போகிறார்.

அடுத்து அந்த வழியே வந்த ஒருவர் ஏதோ ஒரு திறவாத அறைக்குள் நுழைய, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உடம்பிலிருந்த அத்தனை உடையும் காணாமல் போய்விடுகிறது. ஒரு நொடியில் பதறிப்போகிறார். யாரோ இழுத்தாற்போல் இருந்ததே, பொட்டு துணியைக் கூட உடம்பில் காணோமே என்று அதிர்ந்துப் போகிறார். மேலும் கீழும் பார்க்கிறார் சின்ன துணியும் உடம்பிலில்லை. இங்குமங்கும் ஓடி தேடுகிறார், சற்று அச்சத்திற்கு அந்த ரகசிய இடம் மூடக்கூட ஒரு பொருளில்லை அங்கே. எங்கு திரும்பினாலும் கண்ணாடி வேறு. எதைக் கண்டாலும் தனது நிர்வாண உடம்புதான் தெரிந்தது. வெட்கி தலை தெறித்து ஓடுகிறார் இங்குமங்கும். சற்று நிதானித்து வேறொரு கதவை திறக்கிறார். திறந்து பெரிய அந்தத் தங்கவளாகத்துள் நுழைகிறார். எங்கு கண்டாலும் தங்கம். எதைத் தொட்டாலும் தங்கம். ஆனால் தனது மானத்தை மறைக்க ஒரு சின்ன துணியோ அதுபோன்ற ஏதேனும் பொருளோ அங்கில்லை. அப்போது அங்கே ஒரு குரல் கேட்கிறது, அதோ அந்த அறைக்குள் போ ஒரு ஆடை இருக்கிறது, அதை எடுத்து நீ உடுத்திக் கொள்ளலாம், அது உனக்கு மிக சரியாக இருக்கும் போ' ஆனால் ஒரு நிபந்தனை ‘உன்னால் மீண்டும் இந்தத் தங்கக் கட்டிகள் அடுக்கியுள்ள அறைக்கு திரும்ப வர முடியாது என்கிறது அந்த குரல். அந்த மனிதருக்கு கண்கள் ஒன்றுதான் கலங்கவில்லை, பதட்டத்தில் அறையை விட்டொழியெனச் சொல்லியவாறு ஓடி அந்த ஆடை இருக்கும் அறைக்குள் நுழைகிறார்.

அடுத்து வருபவர் தீராதா தலை வலிக் காரார். அவருக்குக் கொஞ்சம் சன்டுபாம் தைலமோ அல்லது அமிர்தாஞ்சனோ வேண்டும், யாரோ சொல்லி உள்ளே நுழைந்தால் காணுமிடமெல்லாம் தங்கம். ஆனால் சோகம் தலையிலிருந்து கையை எடுத்தாலே தலை உடைந்துவிடும் வலி. ஓடிப்போய் ஓடிப்போய் ஒவ்வொன்றாய் பார்க்கிறார். எல்லாம் தங்கமாக இருந்தது ஆனால் அங்கே கொஞ்சம் கூட சன்டுபாம் தைலமில்லை. அவர் தேடிவந்த அமிர்தாஞ்சனில்லை. எல்லாம் தங்கம்தான், ஆசைதான், ஆனால் தலை வலிக்கிறதே, உடைக்கிறதே, உயிர் போகிறதே, இவ்வளவு தங்கமிருந்து என்னப் புண்ணியம், ஒன்றை கையில் தூக்கினால்கூட தலை வின் வின்னென்கிறது. விட்டு விட்டு வேறெங்கேனும் தைலம் கிடைக்குமா அதை முதலில் தேடுவோமென்றெண்ணி ஓடுகிறார்.

அவரை கடந்து ஒரு துறவி அந்தத் தங்க மாளிகையின் வழியே நுழைகிறார். உள்ளே வந்தால் கண்கள் மலர்கிறது. சுவாசம் தாளம் மாறாது உள்சென்று வெளியே போகிறது. ஆகா ஆனந்தம் பேரானந்தம் காணுமிடமெல்லாம் அமைதி, காணுமிடமெல்லாம் அழகு. எங்கும் அசுர நிசப்தம். இங்கே அமைதியாக அமர்ந்தாலென்ன என்றெண்ணி' அமைதியாக கண்களை மூடி' அந்த வளாகத்தின் நடுவே அமர்ந்துக்கொள்கிறார். அமைதியின் ஆரவாரம் அவருக்குள் ஆழமாகச் சென்று அகிலத்தின் தர்மவாய்களை அச்சு பிசகாமல் திறக்கிறது.. உடுத்தும் ஆடையைக் கூட பாரமாக எண்ணும் துறவிக்கு அந்தத் தங்கக்கட்டிகள் ‘இருக்கும் பொருளாக’ கூடத் தெரியவில்லை, எங்கும் சூழ்ந்த அமைதியை மட்டுமே யவர் பெரிதாகக் கண்டார்.

வாழ்க்கை இது தாங்க. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. தனை தீண்டாத ஏதும் தனக்கு பெரிதாகப் பட்டுவிடப் போவதில்லை. தன் அறிவிற்கு எட்டியவாறு, தனது ரசனைக்கு இணங்கியே எல்லோரின் ஆசைகளும் கனவும் கற்பனையும் விரிகிறது. எனவே அவரவருக்கு அவரவர் சரி. எனக்கு நானும் உங்களுக்கு நீங்களும் சரி. பிறகு இடையே வந்து இவரை அவரோ அல்லது அவரை இவரோ குறைச் சொல்லி நடப்பதென்ன உலகில்?

வெறும் கோபமும் கர்வமும் மோகமும் பெருத்து நம்மால் எத்தனை வருடத்தைக் கூட்டிவாழ்ந்திட இயலும்? வாயில் மென்றுவிழுங்கும் அமிர்தம்கூட தொண்டை கடந்தால் கசந்து விழுங்கியதொரு காயிற்கு சமம்தான். மனது பூரிக்கும் அழகு என்றாலும் கூட அனுபவித்த நான்கைந்து நாளிற்குப் பின் அதுகூட பழசுதான். உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. உலகிலுள்ள யாருமே ஒரே மனநிலையில் ஒருமித்த கருத்தில் இல்லை. கருத்தோடு தன்னைக் கட்டி இறுக்கிவைத்துக் கொள்ளமுடிகிறது' என்றாலும், அதற்குள்லிருந்தும் ஒரு கேள்வி முரணாக எழுவதை தனக்குமட்டும் தெரியும் மனசாட்சி அறிகிறது. அத்தகைய தனது உணர்வை ஆராய்ந்து தன் பிறப்பின் வழியே உலகின் தொடர்புகளை அறிந்தவருக்கு உலகம் குற்றமாகத் தெரிவதில்லை. உண்மையில் இந்த உலகம் குற்றமெனில் அதில் நாமும் அடக்கம். இந்த அகிலம் அழகு எனில் அதற்குள்ளும் நாமும் அடக்கம். எப்படி பார்க்கப் போகிறோம் நாம் நம்மை? அழகாகவா அல்லது குற்றப்படுத்தியா என்பதை நாம்தான் தீர்மாணிக்க வேண்டியுள்ளது.

அதற்காக; யாரையும் விட்டுவிடு, யாரேனும் எக்கேடுகெட்டும் போகட்டுமென்று விட்டொழிதல் அர்த்தமல்ல. தவறை எடுத்து கூறி உண்மையை விளம்பி ஒருவரை திருத்துவது வேறு, குறைச்
சொல்லி அல்லது குறையாக பிறரை எண்ணி தானும் குறைந்துபோவது வேறு.

ஒருவரை இகழ்ந்து பேசுகையில் மனம் தன்னைத்தானே எண்ணி உள்ளுக்குள் வெட்கிப் போகிறது. அறிவிற்குள் ஒரு குற்றவுணர்வு கறையாக படிந்துக்கொள்கிறது. அதே ஒருவரை பாராட்டுகையில் மனசு விசாலமடைகிறது. கொடுக்க கொடுக்க சுரக்கும் கிணற்றைபோல பிறருக்கு நல்லதை நினைக்க நினைக்க நமக்கும் நல்லதொன்றே நடக்கத்தக்க சூழலாக நமைச் சுற்றிய அனைத்துமே மாறிக்கொள்கிறது. எனவே குறை சொல்லாதீர்கள். யாரையும் குற்றப் படுத்தாதீர்கள்.

எனக்கு அருகிலிருப்பவன் தவறுசெய்தால் நான் வாழுமிந்த சமுதாயம் சரியில்லை என்று அர்த்தம். பிறகு அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்குண்டுதானே?  பிறகு எனக்கு அருகிலிருப்பவன்
குறைகளோடு வீழ்ந்தால்' நான் நிறைவோடு வாழ்ந்துமகிழ்தலும் தீதே இல்லையா? பிறருக்கு தீங்கு எனில் அஞ்சு. வருந்து. அவர் பாவம் என்று கருணை கொள். பிறர் தீங்கிலிருந்து விடுபட எந்தப் பொருளாயினும் சரி இருப்பதை முடிந்தவரை எடுத்து கொடு. இயற்க்கை உனது விரிந்த மனதை மூடாதக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும். உனை குறையாத நன்மைக்கிணங்க வளர்த்துக் கொண்டேயிருக்கும். நல்லது செய்தவர் வீழ்ந்ததாய் வரலாறில்லை. தர்மம் தோற்றதாக இலக்கியமோ நமது கலாச்சாரங்களோ எடுத்துச் சொல்லவில்லை. அது நமை துன்பத்திலிருந்து காக்கிறது. சேமித்துவைக்கப்பட்ட அறையின் பொருளைப் போல நாம் செய்த நன்மைகள் நமக்கு இரட்டிப்பாகக் கிடைக்கிறது. நமது ஒவ்வொரு செயலும் விதையில் முளைக்கும் செடியாக முளைத்துக்கொண்டே இருக்கிறது. பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள், எதை நாம் விதைப்பது, நன்மையையா ? அல்லது தீமையையா ?

நன்மையையே எங்கும் விதைப்போம். எல்லோருக்கும் நன்மையே விளைந்து நன்னிலம் பெரிதாய் மகிழ்வாய் பெருகட்டும். நல்லது செய்து நல்லதை எண்ணி நானிலம் சிறக்க நம்மோடுள்ளவர்கள் சிறக்க மேன்மையோடு வாழவே நாம் ஒவ்வொருவரும் முற்படுவோம். குறைச் சொல்லி' குற்றம் கூறி' புறம் பேசி அழுக்காகும் நாக்கினையும்' எண்ணத்தையும்' கண்ணியத்தாலும், உண்மையாலும், கருணைவலுக்கும் அறிவினாலும் சுத்தம் செய்வோம்.

கருணையூரிய மனசாட்சியின் அதிர்விலிருந்து வெளிப்படும் அறிவு பலப்பட பட அருகிலிருக்கும் அத்தனையும் பலப்படும். பிறகங்கே இல்லையென்றுச் சொல்லவே ஒன்றுமிருக்காது.
கொடுக்க மட்டுமே நிறைய இருக்கும். அங்ஙனம் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்கையில், பெற்று பெற்று எல்லோரும் பொதுவாக மகிழ்கையில், பெற்றவருக்கும் ஒரு கட்டத்தில் கொடுக்கவே எண்ணம் வரும். பிறகென்ன, பெற்றவரும் கொடுப்பார். உற்றவரும் கொடுப்பார். ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கீழ் மேல் நீங்கி, அனைவரும் சமமாக இல்லார்க்கு இயன்றதை செய்து செய்தே பழகிக்கொண்டால் பின்னிந்த நிலத்தில் எடுக்கவோ குறைக்கவோ மோசம் செய்யவோ யாருக்கிங்கே எண்ணம் வரும்? இருப்பதில் ஏகாந்தம் குறையாது மகிழ்ச்சிப் புன்னகை பரப்பி இந்த பேரண்டம் நன்னடத்தையால் நிறையத் துவங்காதா? நிறையத் துவங்கட்டும். கருணை எங்கும் பெருகட்டும். நன்மையினால் இந்நிலம் சுற்றி சுற்றி எங்கும் நிம்மதியே நிறையட்டும்!! எல்லோரும் வாழ்க!! எல்லாம் மகிழ்க!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

கை மேல் பலன் கிடைத்தது..!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

*💗சிந்தனை கதை...*

**

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். 

ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். 

"அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். 

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும் தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு.. விவசாயி சொன்ன வழி..!!

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை....*

*

நன்றாக வாழ என்ன வழி என்று அறிய, ஒரு வயதான விவசாயி சொல்வதைக் கேட்போம்.

முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் தரமான மக்காசோளங்களை விளைவித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை, அவ்விவசாயின் தரமான மக்காச்சோளமே தட்டிச் செல்லும்.

அந்த விவசாயின் தரமான மக்காச்சோளத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல விலை இருந்தது.

விவசாயின் தரமான மக்காச்சோள விளைவிப்பையும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளைபொருளுக்கான முதல் பரிசினை அம்மக்காச்சோளம் பெறுவதையும் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டறிந்தார்.

அவர் விவசாயியைச் சந்தித்து அவருடைய வெற்றிக் காரணமான வேளாண்மை ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.

ஒருநாள் விவசாயியை நேரில் சந்தித்தார் பத்திரிக்கையாளர்.

அவர் விவசாயிடம் “ஐயா, உங்களுடைய வேளாண்மையின் இரகசியம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு விவசாயி “நான் என்னுடைய தரமான மக்காச்சோள விதைகளை, அருகில் பயிர் செய்பவர்களுக்கும் தருவேன்.” என்றார்.

அதற்கு பத்திரிக்கையாளர் “நீங்கள் தரமான விதைகளை, உங்களுடைய அருகில் இருப்பவர்களுக்குக் கொடுத்தால்,ன அவர்கள் உங்களை போட்டியில் வென்று விடமாட்டார்களா?” என்று கேட்டார்.

பத்திரிக்கையாளரின் கேள்வியைக் கேட்டதும் விவசாயி சிரித்துக் கொண்டே

“இல்லை; அவ்வாறு நிகழாது. உங்களுக்கு தெரியுமா ? மக்காளச்சோளத்தில் அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் தான் தரமான மக்காச்சோளங்கள் கிடைக்கும்.

காற்றானது, ஒரு வயலில் உள்ள மக்காச்சோளத்தின் மகரந்தத்தை, மற்றொரு வயலில் உள்ள மக்காச்சோளத்திற்கு கொண்டு சென்று, அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவுகிறது.

இதனால் என்னுடைய வயலுக்கு அருகில் உள்ளோர் தரமற்ற மக்காச்சோளத்தைப் பயிர் செய்திருந்தால், அயல் மகரந்தச் சேர்க்கையால் அது என்னுடைய மக்காச்சோளத்தின் தரத்தையும் பாதிக்கும்.

ஆகவே என்னுடைய மக்காச்சோளங்கள் தரமானவைகளாக இருக்க வேண்டுமெனில், என் வயலுக்கு அருகில் பயிர் செய்பவரும் தரமான மக்காச்சோளங்களைப் பயிர் செய்திருக்க வேண்டும்.

அதனால்தான் அருகில் இருப்பவர்களுக்கும், நான் தரமான விதைகளை பயிர் செய்யச் சொல்லிக் கொடுக்கிறேன். இதுவே என்னுடைய வெற்றியின் ரகசியம்.” என்றார்.

விவசாயின் பதிலைக் கேட்டதும், வயதான அவ்விவசாயி வாழ்க்கையைப் புரிந்து வைத்திருப்பதைக் கண்டு, பத்திரிக்கையாளர் ஆச்சரியம் அடைந்தார்.

நன்றாக வாழ என்ன வழி என்பது விவசாயியின் பதிலில் ஒளிந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

அதாவது ஒருவர் மனஅமைதியுடன் வாழ வேண்டும் எனில், அவரைச் சுற்றிலும் உள்ளவர்கள் மனஅமைதியாக வாழ உதவவேண்டும்.

நாம் மற்றவர்களால் நேசிக்கப்பட வேண்டுமெனில், நாம் மற்றவர்களை முதலில் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் நன்றாக வாழ வேண்டும் எனில், நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நன்றாக வாழ உதவ வேண்டும்.

வாழ்க்கையின் மதிப்பானது சுற்றி இருப்பவர்களுக்கு உதவுவதால் அளவிடப்படுகிறது.

ஒவ்வொருவரின் நலனும், அனைவரின் நலத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதால், மகிழ்ச்சியாக இருக்க விரும்புவர்கள், மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க உதவ வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவுவது என்பது நமக்கு நாமே உதவி செய்யும் வழி ஆகும்.

சிறுஉதவி செய்யக்கூட மறுக்காதீர்கள்.

நீங்கள் செய்யும் சிறுஉதவியானது அவர்களுடைய இதயத்தில் உங்களுக்கு பெரிய இடத்தைப் பெற்றுத் தரும்.

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

புதன், 7 ஏப்ரல், 2021

#இனிப்பா இருக்கு

என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?"

"சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு"

"என்ன ஜூசுங்க ஐயா வேணும்?"

"ஆப்பிள் சூசு"

கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள்.

சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர்.

அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன். உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார்.

பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி.

அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார்.

அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார்.

"குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார்.

அழகு... ❤️❤️❤️
ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான்.

அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான்.

கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார்.

கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார்.

டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா?

அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?

ஆகையால் சொந்தங்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம்.




[*கணியன் பூங்குன்றனார்* 

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி 
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் இது.

 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*

இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச் 
சொல்கிறது.

முழு பாடலும் அதன் பொருளும்👇.

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*
*சாதலும் புதுவது அன்றே,*
*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,* 
*முனிவின் இன்னாது என்றலும் இலமே* 
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே,*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

*பொருள்*👇

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 

எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று
வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*

'தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை' எனும் உண்மையை உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன"*

துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.

*"சாதல் புதுமை யில்லை"*

பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.

*"வாழ்தல் இனிது என* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"*

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ 
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்.
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"*

இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு
அவற்றில் அவரவர்கள்
பெரியவர்கள்.

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*💐💐
டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
 ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...

டீச்சர் ;ஏன்டா...????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்...
 குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல... 

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...

டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ட்ற..

மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...

டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...

மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி... லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...

டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான...

மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில...

டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...

மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...

டீச்சர்: அது ஏன்...

மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்... அதான் மொதல்லயே  சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு? 

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூனுசுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
(வர்க்க எழுத்து-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும். 

எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம். 

இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம். 
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 
அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)

நல்ல உச்சரிப்புக்கு..
செய்தியாளர் ஷோபனா ரவி
தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)
இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?

உதாரணமாக-
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!
இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்

இதை எல்லாரும் படித்திருப்போம்-
வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)
மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)
இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.
கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து 
வல்லின எழுத்துகள் வரும்.
(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க 
ச ஞ – மஞ்சள் – ஞ் ச
ட ண – துண்டு – ண் ட
த ந -  வந்தது – ந் த  
ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் 
அவற்றின் பெயருக்கேற்ப 
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 
மென்மையாகவும் இன்றி இடையினமாக) 
செருகப்பட்டு, கடைசியாக
ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!
நெட்டை னா குட்டை
பள்ளம் னா மேடு
தொப்பை னா சப்பை
ஆணுன்னா பெண்.
வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?
முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.
அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.

இதே மாதிரித்தான் -
சின்ன ர என்பதும் தவறு!
பெரிய ற என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 
- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 
- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 
இடையில வர்ரது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)
வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)
இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை
இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச
நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக
எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.
சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.
என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்
அது முயற்சிதான் ! 

இதே மாதிரித்தான் 
உயிரெழுத்தில் 
அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
 ஐ-இ  
ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 
கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 
(ஓசை ஒழுங்கு) அறிந்து 
எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 
படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

அப்பறம் நீங்க வேற ஏதாவது கேட்டா,
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.

எனக்குத் தெரியலன்னா -
தெரிஞ்சிகிட்டு வந்து சொல்றேன். 
சரீங்களா? 
வணக்கம்.

இந்த நம் கட்டுரையைத் தமது புலனம், முகநூல், வலைப் பக்கங்களின் வழியே பகிர்ந்த நல்லவர்களுக்கும், இணைய இதழ்கள், ஆசிரிய அமைப்பு, வலையொளி கல்விக்கான இணைய இதழ்களுக்கும் நன்றி. 
என்ன ஒரு நன்றி! என் பெயரை மட்டும் வெட்டிவிட்டார்கள்! 
எனினும் 
பல லட்சம் பேர் இதைப் பார்க்க வைத்த அந்த “அனாமதேயர்கள்” வாழ்க! இனிமேல் பகிர்வோர் இந்தக் குறிப்பையும் சேர்த்துப் பகிர்ந்தால் அவர்களுக்கு எனது வணக்கம்.
எமது கடன் தமிழ் வளரச் செய்வதே!-