*சம்சாரம் ஒரு சங்கீதம். ( “இவள் என் மனைவி இல்லை கடவுள் தந்த வரம்")*
ஞாயிற்றுக்கிழமை.
அருகிலுள்ள நண்பரின் மகனைக்
காண சென்றேன்.
பெயர் அசோக்.
நண்பர் கிராமத்தில் இருக்கிறார்.
பணி காரணமாக இங்கே இவர்.
மனைவியும் வேலைக்கு செல்பவர்.
நண்பர் மகனின் வீட்டில் நுழைந்ததுமே,
வீடே பரபரப்பாக இருந்தது.
அஷோக்
கிச்சனில் பரபரவென்று காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்தார்.
இரு குழந்தைகளும் (10 வயதிற்குள்) சுறுசுறுப்பாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அவர் மனைவி Relaxஆக கிச்சனில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஆண்களும், குழந்தைகளும் லேட்டாகத்தான் எழுந்திருப்பார்கள்.
வித்தியாசமாக இருக்கிறதே? என்று அசோக்கை கேட்டேன்.
அவர் சொன்ன பதில் நெகிழ வைத்தது.
நாங்களும் அப்படித்தான் இருந்தோம் uncle.
என் மனைவியும் வேலைக்கு செல்பவர்.
காலை 5 மணிக்கு எழுந்து பரபரவென்று எல்லா வேலையையும் முடித்துவிட்டு, எங்களையும் அனுப்பிவிட்டு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு தன் அலுவகத்திற்கு ஓடுவார்.
ஒரு முறை என் மனைவி தன் தோழியுடன் போனில் பேசியதை யதேச்சையாக கேட்க நேர்ந்தது.
வேலை சரியாக இருக்கு.
ஓய்வே இல்லை.
Life இயந்திரத்தனமாக இருக்கு.
உடம்பு கெட்டிடுமோன்னு பயமா இருக்கு.
என்னை யாரோ பளீரென்று அறைந்தது போல் இருந்தது.
இவளைக் கவனிக்காமல்,
அலட்சியமாக இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு.
உடனே ஒரு முடிவெடுத்தேன்.
குழந்தைகளிடமும் சொன்னேன். அவர்களும் OK என்றார்கள்
அந்த ஞாயிற்றுக்கிழமை. எங்கள் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்திய நாள்.
காலை என் மனைவி எழுந்து சென்ற சிறிது நேரத்திலேயே
நாங்களும் எழுந்து கிச்சனுக்கு சென்றோம்.
என் மனைவிக்கு ஆச்சரியம்.
8 மணிக்குத்தானே எழுந்திருப்பீங்க?
What happens?
நீ உட்கார்.
இன்று எல்லோருக்கும்
நான் காபி போடுகிறேன்.
Bachelor lifeல், வேலை நிமித்தமாக North ல் இருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து செய்த சமையல் அனுபவம் உண்டு.
ஓரளவு சமைப்பேன்.
Super Coffee போட்டுக் கொடுத்தேன்.
பின் நானும் என் பையனும் அவள் எழுதி வைத்திருந்த ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை லிஸ்ட்டை எடுத்து கொண்டு புறப்பட்டோம்.
என் மகள் ( 4 வது படிக்கிறாள்)
வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
சோபா, டைனிங் டேபிள் துடைப்பது,பெருக்குவது,
கண்ட இடத்தில் விழுந்து கிடந்த பொருள்களை ஒழுங்காக அடுக்குவது, etc etc,,
என் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆச்சு இவங்களுக்கு?
மார்க்கெட்டிலிருந்து வந்த நான்,
காய்கறிகளைக் கழுவி அன்றைய சமையலுக்கு தேவையானவற்றை நறுக்க ஆரம்பித்தேன்.
வியப்பின் உச்சிக்கே போய் விட்டாள்.
What is happening?
என்றாள்.
மெல்ல எங்கள் திட்டத்தைக் கூறினேன்.
ஞாயிற்றுக்கிழமை உனக்கு உதவி செய்வது. வேலைகளை பகிர்ந்து கொள்வது. மதியத்திற்கு மேல் உனக்கு Complete rest கொடுப்பது.
இரவு உணவு Outing என்றேன்.
நெகிழ்ந்து போய் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
குழந்தைகளை அணைத்துக் கொண்டாள்.
அன்று முதல் வாழ்க்கையே மாறி விட்டது.
எல்லோரும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் விவாதிக்கிறோம்.
திட்டமிடுகிறோம்.
பகிர்ந்து கொள்கிறோம்.
சந்தோஷமாக இருக்கிறோம்" என்றான்.
Well done Ashok என்று மனமார பாராட்டினேன்.
இது தான் தாம்பத்யம்.
பெண்ணுக்கு
சம உரிமை என்று வாய் பேசினால் போதாது.
செயலில் காட்ட வேண்டும்.
*சம்சாரம் ஒரு சங்கீதம்....*