நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

உலகில் அதிக ஆயுட்காலம் ( life expectancy at birth) உள்ள இடம் ஜப்பானின் ஒகினாவா தீவாகும். இதற்கான காரணங்களை ஜப்பானிய மானுடவியல் உளவியலாளர்கள் முன்வைத்த போது ஒரு முக்கிய காரணம் இகிகாய் அதாவது தமிழில் வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழ்தல் என்ற புராதன ஜப்பானிய மெய்யியல் கோட்பாடுகளை குறிப்பிடுகிறார்கள். எதை நேசிக்கிறாயோ,எதில் உன்னால் திறம்பட செய்ய முடியுமே, எது உன்னை சூழவுள்ள உலகிற்கு தேவையோ, எதன் மூலம் உன்னால் சம்பாத்தியம் பெற முடியுமோ அதையே நீ தொடர்ந்து செய்து கொண்டிரு.
மேற்குறிப்பிட்ட நான்கு பண்புக்கூறுகளையும் ஒரு வெண்வரிப்படம் (Venn diagram) வரைந்து நான்கும் இடைவெட்டும் பரப்பே IKIGAI என்று அழைக்கப்படுகிறது. இகிகாய் ஒரு பூந்துணர் எனில் அதன் இதழ்களாக
வேட்கை(Passion), பணி (Mission), தொழில் (Vocation), நிபுணத்துவம் (Profession) 
மகிழ்ச்சி (Delight)  உற்சாகம் (Excitement) வசதி(Comfortable) திருப்தி(Satisfaction) என்பன விரியும். இதைப் புரிந்து கொண்டார் ஏற்றுக் கொண்டார் ஓய்வின்றி மரணம் வரை உழைத்து கொண்டு இருப்பார்.  நமது மூதாதையர்கள் ஒன்றில் இளவயதில் இறப்பர் இல்லை நூறு வயதிலும் விவசாயம் செய்து உழைத்து வாழ்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் வாழ்வில் IKIGAI அவர்களுக்கு தெரியாமலே இருந்து தான் வந்தது. Love what you do and do what you love.