படித்ததில் ரசித்தது -
ஒரு கல்லூரி விடுதியில், தினமும் காலை உணவாக உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப்போன மாணவர்கள், டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர், காலை உணவாக என்ன கொடுக்கலாம், எனத் தேர்வு செய்ய மாணவர்களிடம் வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமாவில் பழக்கப்பட்ட 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல், தோசைக்கு 18 பேர், இட்லிக்கு 15 பேர், பூரிக்கு 17 பேர், பொங்கலுக்கு 14, பேர் என வாக்களித்தனர். எனவே உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமாவே உணவாக அளிக்கப்பட்டது.
நான் சொல்ல வந்தது... கதைதான்
சிந்திப்பீர்....✍️