படித்ததில் பிடித்தது.
Why we need Specialist or Professionals ?
⭕⭕ *_டாக்டர் உள்ள வரலாமா_* ?
⭕⭕ *_வாங்க வாங்க உட்காருங்க எ ன்ன பிரச்சனை_*.?
⭕⭕ *_நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர்_*?
⭕⭕ *_நல்லா இருக்கேன்...சொல்லுங்க_*.
⭕⭕ *_ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல_*.
⭕⭕ *_எவ்வளவு நாளா இருக்கு_*?
⭕⭕ *_அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல_*.
⭕⭕ *_அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்_*.
⭕⭕ *_எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே_*?
( *_இன்ஸூரன்ஸ் வச்சிருக்கார்_*)
⭕ *_இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன்_*.
⭕⭕ *_இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும்னு நெட்ல பார்த்தேன்_*.
⭕⭕ *_தேவையில்லைங்க. தேவையின்னா நானே சொல்லுவேன் கவலப்படாதீங்க. இதுக்கு எக்ஸ்ரே போதும். எடுத்துட்டு வாங்க_*.
(⭕⭕ *_சிறிது தயக்கத்துடன்) ஓ.கே டாக்டர்_*.
⭕⭕ *_(எக்ஸ்ரே எடுத்தாச்சு_*)
⭕⭕ *_ம்ம்...எலும்புல எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. ரெகுலர் பிஸியோதெரபி,கொஞ்சம் உணவு கட்டுப்பாடு தேவை. அப்புறம் மருந்து எல்லாம் தர்ரேன். மேக்ஸிமம் ஒரு மாசத்தில சரியாயிரும்_.*
⭕⭕ *_இல்ல டாக்டர் இதுக்கு ஆயுர்வேதம்,யுனானி தான் பெஸ்ட்னு நெட்ல போட்டுருக்கு_*.
⭕⭕ *_சாரிங்க எனக்கு அதெல்லாம் தெரியாது,நான் அல்லோபதி டாக்டர். எனக்கு தெரிந்த மருத்துவத்த நான் சொல்லிட்டேன். உங்களுக்கு உடன்பாடில்லன்னா நீங்க அதெல்லாம் ட்ரை பண்ணலாமே_.*
⭕⭕⭕ *_அய்யோ டாக்டர் அதெல்லாம் ட்ரை பண்ணி சரியாகாமத்தான் உங்க கிட்ட வந்தேன்_*.
⭕⭕ *_(நெட்ல அப்படி போட்டுருக்கு, இப்படி போட்டுருக்கு என்று நீண்ட வாத பிரதி வாதங்களுக்கு பிறகு டாக்டரின் சிகிச்சைக்கு ஒத்து கொண்டார்_*)
⭕⭕ *_நீங்க எங்க வேல பார்க்கிறீங்க_*..?
⭕⭕ *_நான் அந்த ஏர்லைன்ஸ்ல தான் இருக்கேன். ஊருக்கு போகும்போது என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க டாக்டர்_*.
⭕⭕ *_அப்படியா ரொம்ப சந்தோசம். எனக்கு ரொம்ப நாளா ப்ளேன் ஓட்டணும்னு ஆசை. நெட்ல எல்லாம் படிச்சுட்டு வந்துடுறேன்_*.
⭕⭕ *_அதெப்படி டாக்டர் ... வெளயாடாதீங்க. நெட்ல படிச்சுட்டு எப்படி ப்ளேன் ஓட்ட முடியும்_*..?
⭕⭕ *_நெட்ல படிச்சுட்டு நீங்க இவ்வளவு ட்ரீட்மென்ட் சொல்றீங்க. அதே மாதிரி நெட்ல படிச்சுட்டு ப்ளேன் ஓட்ட முடியாதா என்ன_*..?
⭕⭕ *_(ஏதோ புரிந்த மாதிரி சிரித்துக்_* *_கொண்டே) சாரி டாக்டர்... என்றார்_*.
( ⭕⭕ *_இன்னிக்கு நாட்டுல பாதிபேர் இப்படித்தான் இருக்காங்க_*.)