அன்பு, மென்மை, இளகல், நெகிழ்ச்சி இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்றப்போ அடிவயிறு குழைந்து காற்று உறிஞ்சும் வேகம் மட்டுபட்டு சுகானுபவத்தைக் கொடுக்கும்
தமிழ் மொழி பேசுதலே தியானம் அன்றி வேறில்லை என்று சொன்னால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.
பார்த்துப் பார்த்துக் கோர்த்து இருக்கிறார்கள் எழுத்துக்களை வார்த்தையாக.
மேல்பூச்சாக இலக்கணத்தை அளித்து வாக்கியமாக வடிவமைத்து, நம் ஒவ்வொருவருக்கும் மாலையாகத் தொடுத்து அளித்துள்ளார்கள் நம் முன்னோர்.
தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாக நிர்மாணிக்கப் பட்டது. தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது திட்டமிட்டு, தீர்மானிக்கப்பட்டது.
உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரிய கலையைக் குறிக்கும்.
சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிர் எழுத்துக்களாக்கி உள்ளார்கள்.
நெடில் ஏழு எழுத்துக்கள், காரணம் மனிதன் நெடிய ஆயுள், நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே !
குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள், புலன் ஐந்தைக் குறிக்கும்.
குறில் ஐந்து எழுத்துக்கள் வைத்ததன் காரணம், புலன்களின் பயன்பாடு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
இடது நாசியில் ஓடும் சந்திர கலை16 அங்குலம் ஓடுகிறது. அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18.
இதுவே மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 நிமிடம் ஆக, நிமிடத்திற்கு 360 மூச்சு.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது )
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும்.
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
உண்மை.
'ம்மாஹ்ஜீ ஆவ்வோஹ்' என்பதற்கும்,
'அம்மா வாங்க' என்பதற்கும்
எவ்வளவு ஆற்றல் வெளிப்பாடு தேவைப்படுகிறது என்பதை நீங்களே ஒப்பிட்டு, அனுமானியுங்கள்.
தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து (த), மெல்லெழுத்து (மி), ஒரு இடையின எழுத்து (ழ்) எனக் கோர்த்து உருவாக்கப்பட்டது.
முத்தமிழ்'னா என்ன?
இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்தது.
இயற்கையாய், இயல்பாய் அறிவதைச் சொல்வது இயற்றமிழ்.
மனதை ஈர்த்த ஒன்றை வர்ணிக்கும் பொது இசைவான ஒன்று அதில் கலக்கிறது. இசையோடு அது வெளிப்படுகிறது. அது இசைத்தமிழ்.
இயல்பாய் தோன்றி, இசையுடன் வெளிப்படும்போது, அங்கே செயல்பாட்டுக்கு இடமளிக்கிறது. அந்த செயல்பாடே நாடகம். நாடக தமிழ் உருவாக ஏதுவாகிறது.
இயல், இசை, நாடகம் - இம்மூன்றும் சேர்ந்ததுதான், முத்தமிழ் !
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா”
- நல்வழி ஔவை
“அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்”
- கம்பர்
“முத்தமிழே கற்று முழங்கு மெய்ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி”
- குதம்பைச் சித்தர்
“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும்முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்”
- சீத்தலை சாத்தனார்
பெருமைப் பட்டுக் கொள்வோம் 'உன்னதமான சமுதாயத்தினிடையே நாம் பிறப்பெடுத்து இருக்கிறோம் என்று.
தமிழ் மிக பேசுங்கள். அதுவே அனுபூதி !!!
தமிழ் மென்மையானது !