роиீроЩ்роХро│் рокроЯிрод்родுроХ் роХொрог்роЯிро░ுрок்рокродு...................................

ро╡ிропாро┤рой், 18 роЬройро╡ро░ி, 2018

ЁЯСЙрооро░ிропாродைропுроЯрой் роХூроЯிроп роИроХைЁЯСИ

"முட்டை விலை எவ்வளவுங்க,"
அந்த பெண் கேட்டாள்.

"ஒரு முட்டை ஐந்து ரூபாய்ம்மா?"
என்றார் அக்கிழவர்.

"சரி, ஆறு முட்டைகள் ₹25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.

"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே.
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அம்முட்டைக்கார கிழவர்.

தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் முட்டைகளை வாங்கிக் கொண்டாள்.

பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.

அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.

சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا

பில் தொகை ₹1200/-, அவள் ₹1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.

ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால்  முட்டை விற்ற கிழவருக்கு வலி மிகுந்த விஷயம்ر

*இதில் உற்றுநோக்க வேண்டியது *

நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்ا

ஒவ்வொரு தடவையும் ஏழை சிறுவனோ சிறுமியோ ஏதேனும் மிகச்சாதாரண பொருள் விற்க வந்தால் எனக்கு ஒரு செல்வந்தரின் மகனுடைய _*ட்வீட்டர்*_ பதிவு ஞாபகத்திற்கு வரும்.

அதில்

"என் தந்தை ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் அங்குள்ள ஏழை விற்பனையாளர்களிடம்தனக்கு தேவையில்லாத சாதாரண பொருளையும் அதிக விலைக்கு வாங்குவார். சில நேரங்களில் மிக அதிக விலைக்கும் வாங்குவார்.

எனக்கு அவர் அவ்வாறு அதிக விலை கொடுப்பது பிடிக்காது. அவரிடம் அது குறித்து கேட்டேன். அதற்கு என் தந்தை "இது *மரியாதையுடன் கூடிய ஈகை*
மகனே!" என்றார்.

இந்த இரு நிகழ்வுகளில் உள்ள சமுதாய போலித்தனங்களை ஒப்பிட்டு பாருங்கள்:

முதலாவது ஏமாற்றத்தை தரும், இரண்டாவது ஒருவித உற்சாகமான நிம்மதியை தரும்.

*இறைவன் நமது பார்வையை விசாலமாக்கட்டும்*