காற்று வீசும்
திசையெல்லாம்
காகிதமாய் பறக்கவே,
கால்கள் இரண்டும்
தனித்தனியே
காலம் தேடி ஓடுதே,
பேனாவின் மையெல்லாம்
பித்துப் புடித்து திரிய,
நினைவுகளோ
பேனாவில் உதிர,
காலம் எங்கோ நகர,
இன்னும்
காத்திருக்கும் நொடிகள்
யாவும்
கண்டபடி சிதற,
கரையோர கானல் நீரில்
காகிதங்கள் கரைகிறதே..
கரைசேர்ந்தே கவிதைகளும்
கானாமல் போகிறதே....
கண் மூடிய இரவுகளில்
உயிரில்லா காகிதத்தில்
உயிரோடு வாழ்கிறது என்
கவிகளும்....!!