டீ கடை வாசல்
குப்பன் : "மாப்ள"?
சுப்பன் :"என்னடா மச்சான்"?
குப்பன் :"நாடு இவ்ளோ கடன்ல இருக்கச்ச இந்த வாத்தி பயலுவ இன்னும் கூலி அதிகமா கேக்குறானுவள இது நாயமா?"
சுப்பன் : "பத்து வருஷத்துக்கு முன்ன உன்னோட ஒரு நாள் கூலி எவ்ளோ?"
குப்பன் : "நூறு ருவா"
சுப்பன் :"இன்னைக்கு"?
குப்பன் :" ஐநூறு"
சுப்பன் :" நீ ஏன் பழைய கூலி நூறையே வாங்கிக்கக் கூடாது? "
குப்பன் :" அதெப்படி, வெலவாசி ஏறுதில்ல? "
சுப்பன் :" அப்ப வாத்திக்கும் ஏறுமில்ல? "
குப்பன் :" இருந்தாலும்.... நாடு நொம்ப கடலன்ல இருக்குல்ல"?
சுப்பன் :"இன்னைக்கி வேலைக்கு போனியே
அந்தக் கொல்லை காரனும் கடனாளிதான்,
அதுக்காக நீ கூலிய கொறச்சி வாங்கிக்கிட்டயா"?
குப்பன் :" அதெப்படி, ஏன் குடும்பம் மண்ணையா தின்னும் "? அவன் கடனாளியா போனதுக்கு நானா பொறுப்பு"?
சுப்பன் :"இந்த நாயம் வாத்திக்கும் பொருந்தும்ல?.
அதுபோக, நாட்டோட இந்தக் கடன அடைக்கிறது மட்டுமில்ல, அதே அளவு பணத்த, நாட்டோட கள்ளாபுட்டியில மிச்சமா
வைக்கிறதுக்கு ஏங்கிட்ட ஒரு ஓசன இருக்கு! "
குப்பன் :"அட! சொல்லு, சொல்லு "
சுப்பன் :" இங்க இருக்குற எம்எல்ஏ, எம்பி, மந்திரி இவங்க எல்லாம், இந்த பதவிக்கி
வர்றதுக்கு முன்னாடி வச்சிருந்த சொத்து எவ்ளோ? இப்ப இருக்குற சொத்து எவ்ளோ?
அவங்களோட நாயமான சம்பார்த்தனை போக, மிச்சத்த எடுத்தா, இப்போ நாட்டு பேர்ல உள்ள கடன அடைச்சது போக, கொறஞ்ச பட்சம் அதே அளவு பணம் மிச்சமாகுங்கிறேன். வாரியா? போயி எடுப்போம். "
குப்பன் :" அட போ மாப்ள, நம்ம பொழப்பே
இங்க நாறுது........ " .
சுப்பன் :" ஹா..... ஹா.... ஹா.... ஹா.....
அதான் மச்சான் நாம?!